ஆதியாகமத்தின் மீதான கேள்விகளும் பதில்களும் Jeffersonville, Indiana, USA 53-0729 1இப்பொழுது, உங்கள் யாரிடமாவது கேள்விகள் இருந்தால் அதை நேராக அளிக்கலாமே, சிறு பிள்ளைகள் மூலமாகவோ, அல்லது எப்படியெல்லாம் செய்ய விரும்புகிறீர்களோ அப்படியே செய்யுங்கள். அல்லது ஒருக்கால், நாம்... ஆறு கேள்விகள் அடங்கிய ஒரு பக்கத்தை நான் வைத்திருக்கிறேன். அங்கே இரு கேள்விகள் உள்ளன. இப்பொழுது, நாம் - நாம் கண்டுபிடிக்க விரும்புகிறோம். நாம் இதைச் செய்யும் காரணம் என்னவெனில் மக்கள் மனதில் என்ன இருக்கின்றது, அவர்கள் எதை நினைக்கிறார்கள் என்பதை அறிவதற்காகவே. பாருங்கள்? அதுதான் ஒரு நல்ல பலமுள்ள சபையை உருவாக்குகிறது. நீங்கள் அறிந்துள்ளபடி - சில சமயங்களில் நீங்கள் ஊமச்சிமுள்களைத் தேடி (cockleburs) ஒழிக்க வேண்டியிருப்பதுபோல - நீங்கள் சீராக அசையும்படியாக வழியிலிருந்து காரியங்களை அகற்ற வேண்டியிருப்பது - நீங்கள் சீராக அசையும்படியாக வழியிலிருந்து காரியங்களை அகற்ற வேண்டியவர்களாய் இருக்கிறீர்கள். ஆகவே, காரியத்தை அறிந்துகொள்ள வேண்டும் என்கின்ற காரணத்தால் சில வேளைகள் நாங்கள் கேள்விகளுக்கான இரவுகளை வைக்கிறோம். 2இப்பொழுது ஏதாவது கேள்விகள் இருந்தால்... இப்பொழுது இதை இந்நேரத்தில் ஆரம்பித்துள்ளேன். நான் கூறினேன்... ''இப்பொழுது, யாராவது ஒருவர். வேத வாக்கியத்துடன் சம்பந்தப்பட்ட ஒன்றிற்கு பதில் வேண்டுமானால் அதைக் கேளுங்கள்'' (நன்றி சகோதரனே) ''வேத வாக்கியத்துடன் மாத்திரம் சம்பந்தப்பட்ட எந்த ஒன்றிற்கும் பதில் அளிப்பேன்'' என்று நான் கூறினேன் என்று நான் கூறுவது வழக்கம். பாருங்கள், அதற்கு நாங்கள் பதிலளிப்போம். ஆனால் இன்றிரவு நான் கூறினேன்... உங்களுக்குத் தெரியுமா, அவர்கள் வந்து என்னிடம், ''சகோ. பில், அந்த - அந்த நபர் ஒரு குறிப்பிட்ட - குறிப்பிட்ட காரியத்தை செய்வாரானால் அது கிறிஸ்தவ செயல் என்று நீர் நினைக்கின்றீரா?'' என்று கேள்வி கேட்டார்கள். நல்லது, அது ஒருவர் மீது ஒன்றை அழுத்துதல் போன்றதாகும். ஆனால் நான், “இன்று இரவு அவர்கள் அதைப் பெற்றிருக்கட்டும்,'' என்றேன். பாருங்கள், அது சரி. ஆகையால், இன்று ஏதாவது அவ்விதமாக உள்ளதா என்பதை நாம் கண்டுபிடிப்போம். 3ஓ... நான் - நான் - நான் இன்றிரவு உண்மையாகவே உற்சாகமுள்ளவனாக இருப்பதை உணர்கிறேன். வெளியே அந்த வெப்பமான சூரிய வெளிச்சத்தில். இன்று மதியம் முழுவதும் நான் புல் வெட்டிக் கொண்டிருந்தேன். ஆகவே இன்றிரவு நான் உண்மையாகவே உற்சாகமாய் இருப்பதை உணருகிறேன். இன்னும் சிறிது காலத்தில் சிக்காகோவிலுள்ள அரங்கத்தில் ஆகஸ்ட் 13 முதல் செப்டம்பர் 5 ஆம் தேதி வரை ஒரு கூட்டம் நமக்கு இருப்பதை மறவாதீர்கள். தேவனுக்குள் ஒரு மகத்தான சமயத்தை அங்கே எதிர்ப்பார்க்கிறோம். அது இப்பொழுது எல்லா இடங்களிலும் விளம்பரப்படுத்தப்பட்டாயிற்று. எல்லா செய்தித்தாள்களும் அதை வெளியிடுகின்றன. ஆகவே, நாம் ஒரு மகத்தான தருணத்தை எதிர்ப் பார்க்கின்றோம். இப்பொழுது என்னிடம், ஒரு பக்கத்தில் ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு, ஐந்து, ஆறு இங்கு உள்ளன என்று நான் நினைக்கிறேன். எல்லாக் கேள்விகளும் ஒரு காரியத்தைக் குறித்தே, ஆதியாகமப் புத்தகத்தில் உள்ளதைக் குறித்தே இருக்கின்றன. 4இப்பொழுது, முதலாவதாக ஆதியாகமம் 1: 26 முதல் 28 வரை, அந்த மனிதன் யாரென்று கேட்டனர். இது என்ன கேள்வி... என்னை மன்னிக்கவும், கேள்வியைக் கேட்டனர். ஆகவே, அதை முதலாவதாக நாம் படிக்க விரும்புகிறோம். இப்பொழுது, அதை இங்கே எழுதி வைத்துள்ளனர். நீங்கள் அதை சரியாக கவனிக்க விரும்பினால், அதுசரி. அது ''தேவன் மனுஷனை சிருஷ்டித்தார், ஆணும் பெண்ணுமாக அவர்களை சிருஷ்டித்தார் என்று கூறுகின்றது. பாருங்கள்? அதன் பிறகு ஆதியாகமம் 2:7 வசனத்தை அவரோ அல்லது அவளோ, ஒருவர். அவர் மனுஷனை பூமியின் மண்ணினாலே உருவாக்கினார் என்று குறிப்பிட்டுள்ளார். அது வேறொரு இடத்தில் உள்ளது. இதை நாம் ஒன்றாகச் சேர்த்து நீங்கள் அறியத்தக்கதாக, காணத்தக்கதாக நான் எல்லாவற்றையும் படிக்கப் போகிறேன். இப்பொழுது கேள்வியின் முதலாம் பாகம் கூறுகிறது; 5கேள்வி: ''தேவன் மனுஷனை, ஆணும் பெண்ணுமாக சிருஷ்டித்தார் ஆணும் பெண்ணுமாக சிருஷ்டித்தார்'' இப்பொழுது இதுதான் முதல் குறிப்பு (point) என்று நான் நினைக்கிறேன். இப்பொழுது ஆதியாகமம் 2:7 ''அவர் உருவாக்கினார்'' (கீழ் கோடிடப்பட்டுள்ளது) என்று கூறுகிறது. ஆனால் முதலாவதாக அவர் சிருஷ்டித்தார்'' பிறகு இதை கோடிட்டுள்ளார். ''அவர் மனுஷனை பூமியின் மண்ணினாலே உருவாக்கினார் (கோடிடப்பட்டுள்ளது) ஜீவ சுவாசத்தை அவன் நாசியிலே ஊதினார். இன்னுமாக. இப்பொழுது இதிலுள்ள வித்தியாசம் என்ன, அல்லது மேலே உள்ள வேத வாக்கியத்தின் இணைப்பு எங்கே இருக்கிறது? இப்பொழுது, இது... நீங்கள் அதைக் குறித்துக் கொண்டீர்களானால், ஆதியாகமம் 1:26 முதல் 28, ஆதியாகமம் 2:7. இது ஒரு சிணுக்கமுள்ள, உணர்வு பூர்வமான ஒன்று (touchy). என்னுடைய சொந்த கருத்துதான் என்னிடம் உள்ளது. ஆகவே நான் எப்படி எண்ணுகின்றேனோ அப்படியே உங்களிடம் கூறிவிடுகிறேன். நீங்கள் அதிலிருந்து வேறுபட்டால், நல்லது, அது அருமையான ஒன்று. அந்த கேள்விகளுக்கு அருமையான பதிலை அளித்த சகோ. நெவிலை பாராட்டுகிறேன். இப்பொழுது அது அருமையாயிருக்கிறது. 6இப்பொழுது, இங்கே ஆதியாகமம் 1:26-ல் தேவன் மனிதனை தம்முடைய சாயலாகவும், ரூபமாகவும் உண்டாக்கினார். நீங்கள் அதை கவனிபீர்களானால், நீங்கள் 26-ஆம் வசனத்தை எங்களோடு சேர்ந்து படிப்பீர்களானால், என்னுடன் சேர்ந்து சரி பார்ப்பீர்களானால் நாங்கள் மகிழ்ச்சியுறுவோம். பின்பு தேவன்: நமது சாயலாகவும் நமது ரூபத்தின்படியேயும் மனுஷனை உண்டாக்குவோமாக: அவர்கள் சமுத்திரத்தின் மச்சங்களையும், ஆகாயத்துப் பறவைகளையும், மிருக ஜீவன்களையும், பூமியனைத்தையும், பூமியின் மேல் ஊரும் சகலப் பிராணிகளையும் ஆளக் கடவர்கள் என்றார். தேவன் தம்முடைய சாயலாக மனுஷனைச் சிருஷ்டித்தார், அவனைத் தேவ சாயலாகவே சிருஷ்டித்தார்; ஆணும் பெண்ணுமாக அவர்களைச் சிருஷ்டித்தார். 7இப்பொழுது, அதன்பேரில் உலக முழுவதிலும் அநேக முறைகள் விவாதிக்கப்பட்டதையும், அதைக் குறித்து விவாதங்கள் வருவதையும் நான் கேட்டிருக்கிறேன். இப்பொழுது ஆதியாகமம் 2:7-ல் அவர் இங்கே என்ன செய்தார் என்பதைக் கவனியுங்கள். அது சரி, அது இங்கே உள்ளது! தேவனாகிய... மனுஷனை பூமியின் மண்ணினாலே உருவாக்கி, ஜீவ சுவாசத்தை அவன் நாசியிலே ஊதினார், மனுஷன் ஜீவாத்துமாவானான். இப்பொழுது, எந்த விதமான அமைப்பை... அந்த - அந்த கேள்வியாளர் கேட்க விரும்புகிறார்: கேள்வி: இந்த ஆதியாகமம் 1:26, ஆதியாகமம் 2:7-வுடன் எந்த விதமான தொடர்பு, இணைப்பைக் கொண்டுள்ளது? தேவன் இரண்டு மனிதர்களை சிருஷ்டித்தார். யார் அந்த மனிதன், அவன்... என்ன தொடர்பை அது கொண்டுள்ளது? என்ன... எப்படி அது வேத வாக்கியத்துடன் இணைகிறது. நல்லது, இப்பொழுது ஆதியாகமம் 1:26-யை நீங்கள் கூர்ந்து கவனிப்பீர்களானால், “முதலாம் பாகத்தை நாம் முதலாவதாக எடுத்துக் கொள்வோம். தேவன் நாம் உண்டாக்குவோம்” என்றார். இப்பொழுது, ''நாம்'' என்பது... ''நமது சாயலாகவும் நமது ரூபத்தின் படியேயும் மனுஷனை உண்டாக்குவோமாக''. இப்பொழுது நம்முடைய, (our) அவர் யாரிடமோ, வேறொரு நிலைபேறுடைய ஒருவருடன் (Another Being) பேசிக் கொண்டிருந்தார் என்று நாம் அறிந்து கொள்ளுகிறோம், அவர் பேசுகிறார். ''நமது சாயலாகவும் நமது ரூபத்தின் படியேயும் நாம் மனுஷனை உண்டாக்குவோமாக. அவர்கள் மிருக ஜீவன்களையும் ஆளக்கடவர்கள்“. நீங்கள் கவனிப்பீர்களானால், சிருஷ்டிப்பில், உண்மையிலேயே முதலாவதாக சிருஷ்டிக்கப்பட்டது வெளிச்சம் ஆகும். நீங்கள் சிருஷ்டிப்பின் தொடர்ச்சியைக் கவனிப்பீர்களானால் கடைசியாக சிருஷ்டிக்கப்பட்டது என்ன? ஒரு மனிதன். மனிதனுக்குப் பிறகு ஸ்திரியானவள் உருவாக்கப்பட்டாள். அது சரி, முதல்... கடைசியாக சிருஷ்டிக்கப்பட்ட, தேவனுடைய சிருஷ்டிப்பு மனித இனமாகும். தேவன் தம்முடைய முதல் மனிதனை உருவாக்கினபோது, நீங்கள் கவனித்திருப்பீர்களானால், அவர் அவனை தமது ரூபத்தின்படியே உண்டாக்கினார். அவன் தேவ சாயலின்படி உண்டாக்கப்பட்டான். தேவன் என்றால் என்ன?இப்பொழுது தேவன் என்றால் என்ன என்று நாம் காண முடியும் என்றால், அவர் உண்டாக்கிய மனிதன் எப்படிப்பட்டவன் என்பதையும் நம்மால் கண்டுகொள்ள இயலும். 8இப்பொழுது பரிசுத்த யோவான், 4-ஆம் அதிகாரத்தை நான்... நாம் இதைப் படிப்போம், இயேசு அந்த ஸ்திரியுடன் பேசிக் கொண்டிருந்தார். அதற்கு நீங்கள் திருப்ப விரும்புவீர்களானால், நான்... எனக்கு போதுமான நேரம் இல்லை. நான் இதை எழுதி வைக்கவில்லை, ஞாபகத்தின் மூலம் இதை எடுக்க வேண்டியதாயிற்று. சீக்கிரமாய் நான் கண்டுபிடிப்பேனானால் - இப்பொழுது நீங்கள் அதைப் பாருங்கள், இப்பொழுது நான்காம் அதிகாரம், 14-ஆம் வசனத்திலிருந்து நாம் ஆரம்பிப்போம்: நான் கொடுக்கும் தண்ணீரைக் குடிக்கிறவனுக்கோ ஒருக்காலும் தாகமுண்டாகாது... நித்திய காலமாய் ஊறுகிற நீரூற்றுகளாயிருக்கும். அந்த ஸ்திரீ அவரை நோக்கி; ஐயா (Sir) நான் இங்கே மொண்டுகொள்ள வராமலிருக்கும் படி அந்தத் தண்ணீரை எனக்குத் தரவேண்டும் என்றாள். இயேசு அவளை நோக்கி: நீ போய் உன் புருஷனை இங்கே அழைத்துக் கொண்டு வா என்றார். அதற்கு அந்த ஸ்திரீ... 9நீங்கள் காண வேண்டுமென்று நான் விரும்புகிறதை, இதற்கு இன்னும் மேல் நோக்கிச் சென்றால் இப்பொழுது காணலாம் என்று நான் நம்புகிறேன். இதை இங்கு கண்டுபிடித்து நான் காண நினைப்பது எது? 23, 24ஆம் வசனம். அதுசரி. நீங்கள்... (அது சரியே) நீங்கள் அறியாததைத் தொழுது கொள்ளுகிறீர்கள்; நாங்கள் அறிந்திருக்கிறதைத் தொழுதுகொள்ளுகிறோம்; ஏனென்றால் இரட்சிப்பு யூதர்கள் வழியாய் வருகிறது. (ஆம் அது சரி, பாருங்கள்.) உண்மையாய்த் தொழுது கொள்ளுகிறவர்கள் (யூதர் அல்லது புறஜாதியார்) பிதாவை ஆவியோடும் உண்மையோடும் தொழுது கொள்ளுங்காலம் வரும்... காலம் வரும், அது இப்பொழுதே வந்திருக்கிறது. தம்மைத் தொழுது கொள்ளுகிறவர்கள் இப்படிப்பட்டவர்களாயிருக்கும்படி பிதாவானவர் விரும்புகிறார். இப்பொழுது, எனக்குத் தேவையான அடுத்த வசனம்: தேவன் ஆவியாயிருக்கிறார், அவரைத் தொழுது கொள்ளுகிறவர்கள் ஆவியோடும் உண்மையோடும் அவரைத் தொழுது கொள்ளவேண்டும் என்றார். 10இப்பொழுது, தேவன் மனிதனை தமது சாயலின்படியேயும் தமது ரூபத்தின்படியேயும் சிருஷ்டித்திருப்பாரானால், எப்படிப்பட்ட ஒரு மனிதனை அவர் சிருஷ்டித்திருக்க வேண்டும்? ஒரு ஆவி மனிதனையே. இப்பொழுது, நீங்கள் கவனிப்பீர்களானால், அவர் எல்லா சிருஷ்டிப்பையும் செய்து முடித்த பின்பு, ஒரு ஆவி மனிதனைச் சிருஷ்டித்தார். இதைக் கூர்ந்து படிப்பீர்களானால் (இந்த கேள்வியைக் கேட்டவருக்கு) தேவன் மனிதனுக்கு மிருக ஜீவன்கள் மேலும், சமுத்திரத்து மச்சங்கள் எல்லாவற்றையும் ஆளும் அதிகாரத்தை அளித்தார் என்பதைப் பார்க்கலாம். ஆனால், தம்முடைய சிருஷ்டிப்பில், மிருக ஜீவன்களையும், பூமியின் மேல் ஊரும் சகல பிராணிகளையும் வழி நடத்த மனிதனை தம்முடைய சொந்த சாயலின்படி சிருஷ்டித்தார். இன்றைக்கு எப்படி பரிசுத்த ஆவி ஒரு விசுவாசியை வழி நடத்துகின்றாரோ, அதைப்போல. பாருங்கள்? வேறு விதமாகக் கூறுவோமானால், முதலாம் மனிதனாகிய ஆதாம் தேவனுடைய சிருஷ்டிப்புகளிலே கடைசி சிருஷ்டிப்பாக இருந்தான். முதலாம் சிருஷ்டிப்பு தேவன்தாமே ஆவார்; பிறகு தேவனிலிருந்து தேவனுடைய குமாரனாகிய லோகாஸ் (Logos) வெளியே வந்தார்; பிறகு தேவனுடைய வார்த்தையாயிருந்த லோகாஸிலிருந்து (ஆதியிலே வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது, அந்த வார்த்தை தேவனாயிருந்தது. அந்த வார்த்தை மாம்சமாகி நமக்குள்ளே வாசம் பண்ணினார்) லோகாஸிலிருந்து மனிதன் வெளியே வந்தான். 11ஓ, நீங்கள் மாத்திரம் என்னுடனே ஒரு சிறுபயணம் (a little trip) வருவீர்களானால், என்னுடைய மனதில் இப்பொழுது ஒரு அழகான காட்சி உள்ளது. இதை நான் உங்களிடம் பேசியுள்ளேன் என்று நம்புகிறேன். நீங்கள் இதை நன்றாகக் காண வேண்டுமென்று நான் இதை உங்களுக்கு கூறுகிறேன். இப்பொழுது, நாம் சிறிது நேரம் பிரயாணித்து பின்னோக்கிச் செல்வோம். இப்பொழுது எவ்வளவு வெப்பமாயிருக்கிறது என்று எண்ணாதீர்கள், நாம் பேசி சிந்திக்கப் போகும் காரியத்திற்கு இப்பொழுது நம் மனதைச் செலுத்துவோமாக. சந்திரனோ, நட்சத்திரமோ இல்லாதிருந்த லட்சக்கணக்கான ஆண்டுகளுக்கு நாம் பின்னோக்கிச் செல்வோமாக. இப்பொழுது, இங்கே ஒன்றுமே இல்லாத காலம் ஒன்று இருந்தது. அங்கு முடிவில்லாமையும் நித்தியமும் மாத்திரமே இருந்தது. தேவன் தாமே எல்லா முடிவில்லாமையும் நித்தியமுமாய் இருந்தார். அவர் அங்கு ஆதியிலேயே இருந்தார். இப்பொழுது, இந்த திரையின் முனைப்பாகத்திற்கு சென்று, அங்கு நடக்கும் காரியங்களைக் காண்போம். 12இப்பொழுது, “பிதாவை ஒருவனும் ஒருக்காலும் கண்டதில்லை'' சரீரப்பூர்வமாக தேவனை எந்த மனிதனாலும் காண முடியாது, ஏனெனில் சரீர வடிவில் தேவன் இல்லை, தேவன் ஆவியாயிருக்கிறார். பாருங்கள்? அது சரி. ''பிதாவை ஒருவனும் ஒருபோதும் கண்டதில்லை. பிதாவின் ஒரே பேரான குமாரனே அவரை வெளிப்படுத்தினார்'' முதலாவது... யோவான், பாருங்கள். இப்பொழுது கவனியுங்கள், அங்கு வெற்றிடத்தைத் தவிர வேறொன்றுமே இல்லை. அங்கு வெளிச்சம் இருக்கவில்லை, இருள் இருக்கவில்லை, அங்கு ஒன்றுமே இருக்கவில்லை, ஒரு காரியமும் இருந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால் அதிலே மகத்தான, இயற்கைக்கு மேம்பட்டவரான யேகோவா தேவன், எல்லா வெற்றிடத்தையும் எல்லா வெட்ட வெளிகளையும் எல்லா நேரங்களையும் மூடிக் கொண்டிருந்தார். அவர் என்றென்றைக்குமுள்ளவைகளிலிருந்து, என்றென்றைக்கும் உள்ளவராய் இருக்கிறார். சிருஷ்டிப்பின் துவக்கம் அவரே ஆவார். அது தான் தேவன். ஒன்றையும் காண முடியாதிருந்தது. ஒன்றையும் கேட்க முடியாதிருந்தது. ஒரு அணுவும் காற்றிலே அசைய முடியாதிருந்தது, காற்றே இல்லாதிருந்தது. ஒன்றுமே இல்லாதிருந்தது. ஆனாலும் தேவன் அங்கு இருந்தார். அது தேவன்தான் (இப்பொழுது நாம் சில நிமிடங்களுக்கு கவனிப்போம். அதற்குப் பிறகு...) எந்த ஒரு மனிதனும் அதைக் கண்டதில்லை. இப்பொழுது, அதுதான் பிதா, அதுதான் தேவனாகிய பிதா. 13இப்பொழுது, கவனியுங்கள். அதற்கு பிறகு சிறிது நேரத்தில் ஒரு வட்ட வடிவத்தில் (halo) அல்லது வேறெதோ ஒன்றை, ஒரு சிறிய பரிசுத்த ஒளி உருவாகுவதை நான் காண ஆரம்பிக்கிறேன். ஆவிக்குரிய கண்களால் மாத்திரமே உங்களால் அதைக் காண முடியும். ஆனால் இப்பொழுது பாருங்கள், இப்பொழுது முழு சபையாக இதை நாம் பார்க்கிறோம். நாம் மகத்தான ஒரு பெரிய கைப்பிடிக் கம்பியுள்ள படிக்கட்டின் மீதிலிருந்து நின்றுகொண்டு, தேவன் என்ன செய்கிறார் என்பதை பார்த்துக் கொண்டிருக்கிறோம். இந்த கேள்வியை நாம் சரியாக அணுகி, எப்படி அவர் இதற்குள் அதைக் கொண்டு வருகிறார் என்பதை நீங்கள் காண்பீர்கள். இப்பொழுது, தேவனை ஒருவரும் கண்டதில்லை. அடுத்ததாக அங்கே ஒரு சிறிய வெள்ளை ஒளியானது உருவாகின்றதை நாம் நமது இயற்கைக்கு மேம்பட்ட கண்களால் காணத் துவங்குகிறோம். அது என்ன? வேத மாணாக்கர்களால் அது “லோகாஸ்” (Logos) அல்லது அந்த “அபிஷேகிக்கப்பட்ட ஒன்று” (the anointed) அல்லது “அந்த அபிஷேகம்” (anointing) என்று அழைக்கப்பட்டது, அல்லது... நான் கூறவிழைவது, மானிடர்கள் அது என்னவாயிருந்தது என்பதைக் குறித்த ஒரு எண்ணத்தைக் கொள்ள அது ஏதுவாயிருக்கும்படி தேவனுடைய பாகமானது ஏதோ ஒன்றாக உருவாகத் துவங்கியது. அது ஒரு சிறிய அல்லது ஒரு அசைந்து கொண்டிருந்த வெளிச்சமாயிருந்தது. அவர்... அதுதான் தேவனுடைய வார்த்தையாகும். இப்பொழுது, ஒரு அணுவும் கூட இல்லாதிருந்த... ஒரு அணுவை உருவாக்க காற்றுங்கூட இல்லாதிருந்த போது, தேவன் தாமே இந்த குமாரனை பெற்றெடுத்தார். அதுதான். பாருங்கள், இயேசு, “பிதாவே, உலகம் உண்டாகிறதற்கு முன்னே நாம் பெற்றிருந்த மகிமையினாலே என்னை மகிமைப்படுத்தும்'' என்றார். பாருங்கள் தொலைதூரமான காலத்தில். 14இப்பொழுது, பரிசுத்த யோவான் 1-ல், ''ஆதியிலே வார்த்தை இருந்தது'' என்று கூறினார். முதலில்... ''அந்த வார்த்தை தேவனாயிருந்தது, அந்த வார்த்தை மாம்சமாகி நமக்குள்ளே வாசம் பண்ணினார்.'' தேவன் தம்மைத் தாமே மானிட வர்க்கத்திற்கு வெளியாக்கிக் காண்பிக்க ஆரம்பித்தல். அவர் அதை எப்படிச் செய்தார் என்பதைக் கவனியுங்கள். இப்பொழுது, அங்கே, இந்த சிறிய வட்ட வடிவு (halo) வருகிறது. இப்பொழுது, இன்னுமாய் எதையும் நாம் காணவில்லை, ஆனால் இயற்கைக்கு மேம்பட்ட கண்களால் ஒரு வட்ட வடிவம் அங்கு நிற்பதை நாம் காண்கிறோம். இப்பொழுது, அதுதான் தேவனுடைய குமாரன், அந்த லோகாஸ். எல்லாம் நித்தியமாயிருக்கையில், பிதாவினுடைய வாசற் கதவிற்கு முன்னால் அவர் ஒரு சிறிய குழந்தையைப் போன்று விளையாடிக் கொண்டிருப்பதை இப்பொழுது என்னால் காணமுடிகின்றது. பாருங்கள்? பிறகு இப்பொழுது, பிறகு அவருடைய கற்பனைக் காட்சியமைப்பில் காரியங்கள் எப்படி இருக்கப் போகின்றது என்பதை அவர் நினைக்க ஆரம்பிக்கின்றார். “வெளிச்சம் உண்டாகக்கடவது'' என்று அவர் கூறுவதை என்னால் கேட்க முடிகிறது. பிறகு அவர் கூறுகையில், ஒரு அணு வெடித்து சூரியன் தோன்றி சுழல ஆரம்பித்தது. அது நூற்றுக்கணக்கான லட்சம் ஆண்டுகளாகச் சுழன்று, உருக்காங்கற்களை (clinkers) உருவாக்கி, எரிந்து, இப்பொழுது இருப்பது போலவே இருந்தது; இன்னுமாய் எரிந்து கொண்டு, அணுக்களை உடைத்துக் கொண்டு இருக்கின்றது. ஒரு அணுகுண்டு வெடிக்க ஆரம்பித்தால், இந்த அணுவின் வரிசையானது இதை... இந்த பூமியானது சூரியனைப் போலவே வெடித்துக் கொண்டும் சிதறிக் கொண்டும் இருக்கும். நீங்கள் வேறொரு கிரகத்தில் நின்றுக் கொண்டு இதைப் பார்ப்பீர்களானால் இன்னொரு சூரியனைப் போன்றே இது தோன்றும். அணுக்கள் இந்த பூமியை எரித்துக் கொண்டிருக்கும்போது, இந்த வரிசையானது தளர்ந்து இப்படியும் அப்படியுமாக திரும்பி சுழல ஆரம்பிக்கும்... இந்த நெருப்பானது சூரியனிலிருந்து கோடிக் கணக்கான ஃபாரன் ஹீட் (Fahrenheit) அனல் கொண்டு வெளியே வரும், அதன் தீப்பிழம்புகள் லட்ச, லட்சக்கணக்கான மைல்கள் உயர எழும்பும். 15இப்பொழுது இதைக் கவனியுங்கள். அழகான ஒன்று! இப்பொழுது, அவர் சூரியனை உண்டாக்கினார். பிறகு முதலாவதாக ஒரு பெரிய உருக்காங்கல் அதிலிருந்து விழுந்து, இந்த பூமியைப் போன்ற எடையை கொண்டதாய் “ஸ்பியூ!'' என்று சப்தமிட்டு விழுந்தது. இந்த தேவனுடைய குமாரனாகிய லோகாஸ் அதை பார்த்துக் கொண்டிருந்தார். அதை ஒரு நூற்றுக்கணக்கான, இலட்சக்கணக்கான ஆண்டுகளாக விழ விட்டுவிட்டு பிறகு அவர் அதை நிறுத்துகிறார். பிறகு வேறொன்று பறந்து விழ ஆரம்பிக்கிறது. அதை அவர் லட்சணக்கணக்கான ஆண்டுகளுக்கு விழ விட்டுவிட்டு பிறகு அதை நிறுத்துகிறார். இப்பொழுது நாம் நின்றுகொண்டு அது தோன்றி இருப்பதை பார்த்துக் கொண்டிருக்கிறோம். இப்பொழுது, அவர் தமது சிந்தையில் எதையோ கொண்டுள்ளார், ஆகையால் அவர் என்ன செய்து கொண்டிருந்தார்? அவர் தமது முதல் வேதாகமத்தை எழுதிக் கொண்டியிருந்தார். மனிதன் பார்த்ததிலேயே முதலாவது வேதாகமம் நட்சத்திரங்களும், இராசி மண்டலங்களும் (Zodiac) ஆகும். அது ஒரு பரிபூரண... அது வேதத்துடன் சரியாக பொருந்துகிறது. அது ராசி மண்டலத்தின் முதலாம் அடையாளமான கன்னி ராசியில் துவங்குகிறது. அது சரியா? கடைசி ராசி என்ன? லியோ (Leo) என்கிற சிம்மராசி. அதுதான் இயேசுவினுடைய முதலாம் வருகை. அவர் ஒரு கன்னியின் மூலமாக வந்தார்; இரண்டாம் முறையாக, அவர் யூதா கோத்திரத்தின் சிங்கமாக வருகின்றார். பாருங்கள்? எல்லாவற்றையும் வெளிகொணர்கிறது. கான்சர், புற்று நோயின் காலம் மற்றும் தொடர்ச்சியாக எல்லாமும் இப்பொழுது எல்லாவற்றையும் வானத்திலே அமைத்து வைத்துவிட்டார். இந்த வால் நட்சத்திரங்களும், பூமியின் பாகங்களும் அல்லது சூரியன் எல்லாம் அங்கே தொங்கிக் கொண்டிருக்கின்றன. இப்பொழுது, விஞ்ஞானமானது விழுகின்ற அந்த கணைகளை (missiles) பார்க்க செல்கிறதென்றால் அது தேவனை பொய்யராகச் செய்யவில்லை, அதற்கு மாறாக அதை எனக்கு நிருபிக்கின்றது. பாருங்கள், அது அதை இன்னும் அதிக தத்ரூபமாக்குகின்றது. இப்பொழுது கவனியுங்கள், இந்த தொங்கிக் கொண்டிருக்கின்ற கணைகளெல்லாம் அந்த வெப்பமான சூரியனுக்குச் சற்று தூரமாக காற்றில் இருக்கின்றன. அவையெல்லாம் ஒன்றாகச் சேர்ந்து, முதலாவதாக என்னவென்று உங்களுக்கு தெரியுமா, அது ஒரு மிதக்கும் பெரிய பனிக்கட்டிப் பாறையாக (iceberg) ஆகின்றது. 16இப்பொழுது, இவ்விதமாகத்தான் இப்பூமி தோன்றினது. ஒரு பெரிய பழைய அரைகுறையாக எரிந்த ஒரு நிலக்கரித் தணல் அங்கிருந்து பறந்து விழுந்தது. இவ்விதமாகத்தான் இப்பூமி தோன்றியது. பூமியின் கீழே இருப்பது ஒரு சுழல்கின்ற, எரிமலை, சில வெடித்து எரியும். நாம் வாழுகின்ற இந்த உலகமானது எப்படி ஒரு ஆப்பிள் பழத்தின் மேல் தோல் உள்ளதோ அதைப் போன்று அதன் மேல் உள்ள ஒரு கடினமான பாகம் போன்று சுற்றி அமைந்துள்ளது (crust) என்று விஞ்ஞானம் கூறியிருக்கிறது. எல்லா... இப்பொழுது, அநேகமாக 25 ஆயிரம் மைல்கள் இருக்கலாம் (ஏறக்குறைய 8 ஆயிரம் மைல்கள்) 8 ஆயிரம் மைல்கள் அளவுக்கு கனம் பொருந்தினதாக இருக்கிறது. ஆகவே அதற்கு கீழே இருப்பதுதான் எரிகின்ற எரிமலை. பூமியின் மூன்றில் இரண்டு பாகம், இரண்டு பாகத்திற்கும் அதிகமாக தண்ணீரால் நிறைந்துள்ளது; மூன்றில் ஒரு பகுதி, ஏறக்குறைய மூன்றில் ஒரு பகுதி நிலமாக உள்ளது. இப்பொழுது நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்ற, சுற்றி (பூமியின் மேல் - தமிழாக்கியோன்) அமைந்துள்ள கடினமாக பாகத்தைப் (Crust) பாருங்கள், அதன் முழுவதுமாக உள்ளில் பயங்கரமான ஆபத்தான வெடிபொருட்கள், எரி வாயு, பெட்ரோல், எண்ணெய், அனைத்தும் போன்றவைகளால் நிறைந்துள்ளன. அது சரியா? ஆகவே மூன்றில் இரண்டு பாகம், அதற்கும் மேல் தண்ணீரால் சூழப்பட்டுள்ளது. தண்ணீரின் சூத்திரம் (formula) என்ன? மூன்று பாகம் பிராணவாயும் (Oxygen) ஒரு பாகம் நீரகவாயும் (hydrogen) கொண்டது, வெடிக்கும் தன்மை வாய்ந்தவைகள். ஒவ்வொரு அறையிலும் உஷ்ணத்திலிருந்து குளுமையாக்க தேவையான மின்சாரம் உள்ளது. ஒரு அறையை வெடிக்கச் செய்யும் அளவிற்கு அது போதுமான மின்சாரத்தை உண்டாக்கும். ஒரு சிறிய குழிபந்தாட்டபந்திலே (golf ball) தேவையான அளவு அணுக்களை நிறைத்து நியூயார்க் பட்டணத்தை வெடிக்கச் செய்து பூமியின் முகப்பிற்கு வெளியே தள்ளிவிடலாம். ஆகவே மனிதன் நரகத்தில் உட்கார்ந்து கொண்டு தன் மார்பில் தட்டிக் கொண்டு “நரகம் என்கிற இடம் இல்லவே இல்லை'' என்று கூறி தேவனுடைய வார்த்தையை எதிர்த்துக் கொண்டு இருக்கிறான். (அதைக் குறித்த சிறிது என்னிடம் உள்ளது, அதை நாம் பார்க்கப் போகிறோம்). ஒவ்வொரு நாளும் அது அடங்கிய (நரகம் - தமிழாக்கியோன்) பெரிய பானையில் நீங்கள் உட்கார்ந்துக் கொண்டிருக்கிறீர்கள், நீங்கள் இங்கே இருக்கையில், நீங்கள் சரியாக அதன் மேலேயே உட்கார்ந்துக் கொண்டிருக்கிறீர்கள், உனக்கு அடியிலேயே நரகம் உள்ளது. 17ஆகவே இப்பொழுது கவனியுங்கள். ஆனால் இப்பொழுது அது முதலில் கண்டுபிடிக்கப்பட்டபொழுது, இயேசு. இப்பொழுது அந்த சிறிய வட்ட வடிவைக் கவனியுங்கள். அது பூமியை நோக்கி அசைந்து சென்று, அதன் மேல் ஏறி சூரியனுக்கு அருகாமையிலே செல்லத் துவங்குவதை என்னால் காண முடிகிறது. அது ஒன்றுமல்ல, அது ஒரு பெரிய பனிக்கட்டிப் பந்துதான். ஆகவே அது உருக ஆரம்பித்தபோது, மெதுவாக நகரும் பெரிய பனிக்கட்டிகள் (Glaciers) வடக்கு பிரதேசங்களின் வழியாக வெட்டிக் கொண்டு வந்தன. அவ்வாறு அவை வந்த போது கான்சாஸ், டெக்ஸாஸ் போன்றவற்றையும் இன்னும் அங்கு இருந்த மற்ற பிரதேசங்களையும் வெட்டி அமைத்து பிறகு நேராக மெக்ஸிகோ வளைகுடாவிற்குள் சென்றடைந்தது. ஆகவே முதலாவது காரியம் என்னவென்று உங்களுக்குத் தெரியுமா, முழுவதுமே தண்ணீரினால் மூடப்பட்டது. இப்பொழுது, நாம் நம்முடைய காட்சியை ஆதியாகமம் 1-ல் காணலாம். ''பூமியானது ஒழுங்கின்மையும் வெறுமையுமாய் இருந்தது; ஆழத்தின் மேல் இருள் இருந்தது அது சரிதானே? “தேவ ஆவியானவர் ஜலத்தின்மேல் அசைவாடிக் கொண்டிருந்தார்''. இப்பொழுது, அவர் ஜலத்தை, வேறு பிரித்து மலைகளையும் நிலங்களையும் வெளி கொணர்ந்து உலாவிட்டார். தாவர வகைகள் மற்றும் எல்லாவற்றையும் அவர் உண்டாக்கினார். அவர் சந்திரனை உண்டாக்கினார். சமுத்திரம் கடக்காதவாறு அதற்கு எல்லைகளை அமைத்தார். 18அவர் எல்லாவற்றையும் ஒன்றாகச் சேர்த்து...? மற்ற எல்லாவற்றையும் உண்டாக்கினார், எல்லா ஜீவராசிகளும் பறவைகளும், பூச்சிகளும், குரங்குகளும் மற்ற எல்லாவற்றையும் உண்டாக்கி பூமியின் மேல் வைத்தார். அதற்கு பிறகு இந்த கேள்வியைக் கேட்கிறார். ''நமது ரூபத்தின்படியே மனிதனை உண்டாக்குவோமாக'' (யார்? பிதாவும், குமாரனும்) (ஆங்கிலத்திலே “Let us” என்பதற்கு “நாம் தாமே'' என்று பொருள், ஆங்கில வேதத்தில் அவ்வாறு எழுதப்பட்டுள்ளது - தமிழாக்கியோன்) இப்பொழுது, மனிதனானவன் அந்த சிறிய பரிசுத்த ஒளியைப் போன்றோ அல்லது வேறெதாவதொன்றைப் போலவோ உருவாக்கப்பட்டிருந்தானானால், அது காணப்படக் கூடாததாகும் (அது ஒரு ஆவிக் குரிய நிலைபேறுடைய ஒன்று [spiritual Being)). ஆகவே அவர் தம்மைத் தாமே சிறிது மேலாக ஒரு திரித்துவமாக, பிதா, குமாரன், பரிசுத்த ஆவியாக ஆக்கிக் கொண்டு வெளிப்பட்டார் அல்லது வெளியாக்கிக் கொண்டார். “நாம் தாம் மனிதனை உண்டாக்குவோமாக'' என்று தேவன் இங்கே தம்மைத்தாமே வெளிப்படுத்துகிறார், ”நாம் தாமே மனிதனை நமது சாயலாக உண்டாக்குவோமாக, அது அவருடைய குமாரனும், வேரும், சந்ததியாயும் இருந்தது. அவன் இயற்கைக்கு மேம்பட்ட ஒருவன். அவன் ஜீவராசிகளையும், பிராணிகளையும் இன்னும் மற்றவைகளையும் ஆளக்கடவன்.'' இப்பொழுது, ஒரு மனிதன் ஒரு மனிதனை வழி நடத்தினான். பரிசுத்த ஆவி எப்படி ஒரு உண்மையான விசுவாசியை வழி நடத்துகிறதோ அதே போன்று மனிதன் பிராணிகளையும் மற்ற எல்லாவற்றையும் வழி நடத்தினான். தேவனுடைய சத்தம் அங்கே வெளியே... மனிதனின் சத்தம் அங்கே பேசி... பிராணிகளை இவ்வழியாக அழைத்தது, ஆடுகளை இந்த புல்வெளிக்கு கூப்பிட்டது. மீன்களை இந்த தண்ணீருக்கு அழைத்தது. பாருங்கள், அவன் அதிகாரம் உடையவனாய் இருந்தான், எல்லாம் அவனுக்குக் கீழ்ப்படிந்தன. 19இப்பொழுது, ஆனால் நிலத்தை பண்படுத்துவதற்கோ, “உழுவதற்கோ அங்கே மனிதன் இல்லை, ஆதியாகமம் 2, நிலத்தை பண்படுத்த எந்த மனிதனும் இல்லை. அவர் மனுஷனை பூமியின் மண்ணினாலே உருவாக்கினார்'' (ஆதியாகமம்2:7). இப்பொழுது நாம் அதை கவனிப்போம், அவர் மனுஷனை பூமியின் மண்ணினாலே உருவாக்கி, இந்த இயற்கைக்கு மேம்பட்ட ஆவியை அவனுக்குள் வைத்தார்... இப்பொழுது, அவன் அங்கே படுத்துக் கிடந்தான். அதைக் குறித்த அநேக காட்சிகளை என்னால் எடுக்க இயலும். ஆதாம் நிற்பதை என்னால் காண முடிகிறது... அதை நாம் இந்த விதமாக எடுத்துக் கொள்வோம். ஒரு மரம் போல் அவன் நிற்பதாகப் பார்ப்போம். தேவன் அவனை உண்டாக்கினார். அவன் அப்படியே மரித்த நிலையில் கிடந்தான்; அவனுடைய பாதங்கள், நிலத்தில் வேர் ஒட்டிக் கொண்டிருப்பது போல இருந்தது. பிறகு தேவன், ''உண்டாகக் கடவது“ என்றார். அல்லது ஜீவசுவாசத்தை அவனுக்குள் ஊதினார். பிறகு அவன் குதித்தெழுந்து வெளி வந்தான். அவன் ஒரு ஜீவசுவாசத்தை அவனுக்குள் ஊதினார். அவன் ஜீவாத்துமாவானான். இப்பொழுது அவன் அசையத் துவங்கினான். 20ஆகையால் பிறகு தேவன் அவனிலிருந்து ஒரு விலா எலும்பை எடுத்து ஒரு ஸ்திரீயை உண்டாக்கினார். இப்பொழுது, ஸ்திரீக்கான ஆவியை எங்கிருந்து எடுத்தார்? பாருங்கள்? அவர் தாமே... ஆதியாகமம் 1:26-ல் அவர் கூறினார் நமது சாயலாகவும் நமது ரூபத்தின்படியேயும் மனுஷனை உண்டாக்குவோமாக, ஆணும் (மனிதன்) பெண்ணுமாக அவர்களை சிருஷ்டித்தார். அவர் பலமிகுந்த ஆவியை மனிதனுக்கு உண்டாக்கினார். அவர் மிருதுவும், எளிமையும், புலன்களுக்கு இனியதான, பெண்மையின் ஆவியை பெண்ணிற்கு உண்டாக்கினார். ஆகையால், ஒரு ஸ்திரீ மனிதனைப் போன்று நடப்பதை நீங்கள் கவனிப்பீர்களானால், அவள் ஆதியிலிருந்த தன் ஸ்தானத்தை விட்டு இடம் மாறிவிட்டாள். பாருங்கள்? அது சரி. அவள்... ஸ்திரீ தன் புனிதமான, பெண்மைக்குரிய இடத்தை இழந்து போயிருப்பது வெட்கத்திற்குரியது என்று நான் எண்ணுகிறேன். அது ஒரு பெருத்த அவமானம். நான் கூறுகிறேன் அது... நான் இதைக் கூறுவேன் என்பதை நீங்கள் அறிவீர்கள். இப்பொழுது, இங்கிருக்கும் ஸ்திரீகளாகிய உங்களைக் குறித்து நான் கூறவில்லை, பேசவில்லை. ஆனால், உண்மையில், அது உங்களைப் புண்படுத்தும், அது அவ்விதமே செய்யும். ஆனால் பாருங்கள், உங்களை ஒன்று நான் கேட்கட்டும். ஸ்திரீகள் அவ்வளவு பெண்மை தன்மை வாய்ந்தவர்களாய் இருந்திருந்தார்கள். ஒரு மனிதன் அவர்களிடம் சென்று பேசினால், ஹம்! அவர்கள் முகம் சிவந்து நாணம் கொள்வார்கள். எப்படியாயினும், நாணம் கொள்வதென்றால் என்ன? அநேக காலமாக அதை நான் காண்பதில்லை. சில ஸ்திரீகள் நாணம் கொண்டாலும் கூட அது எனக்கு தெரியாமல் போகின்றது. ஏனென்றால் நீண்ட காலமாக அதை நான் கண்டதில்லை, காண்பதில்லை. அந்த மதிப்பிற்குரிய காரியத்தை அந்த அருமையான பெண்மைக்குரிய ஆவியை இன்னுமாய் அவர்கள் உடையவர்களாய் இல்லை. அவர்கள் ஒரு... அவர்களால்... அவர்கள் மனிதனைப் போல உடையணிந்து கொள்கின்றனர். மனிதனைப் போன்று மயிரை வெட்டுகின்றனர். மனிதனைப் போல புகைப் பிடிக்கின்றனர், குடிக்கின்றனர், மனிதனைப் போல வக்கிரம் கொள்கின்றனர், மனிதனைப் போல வாக்களிக்கின்றனர், மனிதனைப்போல வேலை செய்கின்றனர். கடினமாகி, வலுவாகி இன்னுமாய் இருக்கின்றனர். ஓ, என்னே! அது நீங்கள் எப்படி இருக்க வேண்டும் என்பதைக் காட்டுகிறது. முற்றிலும் சரி. 21அப்படிப்பட்ட ஒரு ஸ்திரீயைக் காண்பதென்பது இப்பொழுது கடினமான ஒரு காரியமாகும். இன்னுமாக அதே போன்று காணமுடியாது. அது சரிதானே? ஆம். அது உண்மையாகும். ஆகையால் ஒரு ஸ்திரீ எழுந்து ஒரு மனிதனைப்போல வலுவுள்ளதாகவும், பெரியவளாகவும், இருக்கும்படி எண்ணப்படவில்லை. ஏனென்றால் அவள் மதுரமுள்ள தன்மை கொண்டவள். தேவன் அவ்வாறேதான் அவளை உண்டாக்கினார். வேதவாக்கியங்களின் மூலமாக அதை என்னால் நிரூபிக்க முடியும். ஆம் ஐயா. அது சரி. ஆகையால்... நாம் இந்தக் கேள்வியை விட்டு அப்புறம் செல்கிறோம். ஆனால் இந்தக் கேள்வியிலிருந்து அநேக காரியங்களை எடுக்க நான் விரும்பவில்லை. ஆனால் பாருங்கள், அங்குதான் அவர் தம்முடைய ரூபத்தின்படியே முதலாவது மனிதனை உண்டாக்கினார். 22ஆகவே பிறகு, தேவன் ஒரு நட்சத்திரத்தையும் கூட உருவாக்கு முன்பே, உலகம் இருக்கும் என்று அறிந்திருந்தார். அவருக்கு, நான் வில்லியம் பிரான்ஹாமாக இருந்து, அந்த முற்பட உருப்படுத்திக் காட்டுதலில் (prefigure) சுவிசேஷத்தை பிரசங்க பீடத்திலிருந்து பிரசங்கித்துக் கொண்டிருப்பேன் என்றும், நீங்கள் ஜான் டோவைப் போல அங்கு உட்கார்ந்து கேட்டுக் கொண்டிருப்பீர்களென்றும் உலகம் தோன்றுவதற்கு முன்னரே அவருக்கு தெரியும். அல்லேலூயா! இப்பொழுது, இங்கே தான் சட்ட கால்வீனிஸ்டுகள் குழம்பிப் போகிறார்கள். பாருங்கள்? ''ஏன் முன்குறிக்கப்பட்ட சிலர் இழந்து போகப்பட வேண்டும்?'' என்று கூறுகிறார்கள். யாராவது சிலர் அழிய வேண்டும் என்பது தேவனுடைய சித்தமல்ல. ஒருவரும் அழியக் கூடாது என்று தான் அவர் விரும்புகிறார். ஆனாலும் அவர் தேவனாயிருப்பதால், சிலர் அதை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்பதையும் அவர் அறிவார். பாருங்கள்? பாருங்கள், அவர் தேவனாய் இருப்பாரானால் துவக்கம் முதல் முடிவு வரை அவர் அறிந்திருக்க வேண்டும். அப்படித்தானே? 23ஆகையால் சில ஸ்திரீகளை அவர் உடையவராய் இருக்கப் போகிறார் என்று அவர் அறிவார். ஆதலால் அவர்களுடைய ஆவியை சரியாக அங்கே உண்டாக்கினார். ''அவர் அவனை, மனிதனை, ஆணும் பெண்ணுமாகச் சிருஷ்டித்தார்“ என்று வேதம் ஆதியாகமம் 1:26-ல் கூறுகின்றது. ஆமென். பாருங்கள்? அவர் ஒரு முன்வடிவில், அவர்கள் பூமியின் மண்ணினாலே உருவாக்கப்படும் முன்பே, அவர் அவர்களை ஒரு முன்வடிவில் ஆணும் பெண்ணுமாக உண்டாக்கினார். அதன்பின் தேவன் மனிதனை உண்டாக்கினார், தம்முடைய சொந்த சாயலில் அல்ல. இந்த சரீரமானது தேவனுடைய சாயலின்படி இல்லை. இந்த சரீரமானது மிருகங்களின் சாயிலின்படிதான் உள்ளது. 24(என்னுடைய கோட்டை நான் கழற்றிவிடட்டுமா? இங்கு உஷ்ணமாக இருக்கின்றது. உள்ளே ஒரு கிழிந்த சட்டையை அணிந்திருக்கிறேன். ஆனால் நீங்கள் அதைக் காண முடியாது. ஏனென்றால் அது ஒரு ஜெஸிசலவையிலிருந்து எடுத்து வரவில்லை, ஆகையால். ஆனால் கவனியுங்கள், நாம் ஒரு பொருளின்மேல், பாகத்தில் மேல் கவனம் செலுத்திக் கொண்டிருக்கிறோம். பிரசங்க பீடத்தில் கிழிந்த சட்டை ஒரு பொருட்டல்ல. அப்படித்தானே? அது நித்திய ஜீவன் ஆகும்). 25இப்பொழுது, மனிதனைக் கவனியுங்கள். தாம் ஒரு மனிதனையும், ஸ்திரீகளையும் உடையவராய் இருக்கப் போகிறார் என்பதை தேவன் ஆதியிலேயே அறிந்திருந்தார், ஒரு இரட்சகர் இங்கு இருக்கப் போகிறார் என்றும், அவர் இயேசுவைக் கொண்டு வர வேண்டும் என்பதையும் அவர் சிலுவையில் அறையப்படுவார் என்றும் அவர் அறிந்திருந்தார். இப்பூமியிலே இயேசு இருந்தபோது தம்முடைய சீஷர்களிடத்திலே அவர்களை, “உலகம் தோன்றுவதற்கு முன்பே அறிந்திருந்தார்'' என்று கூறினார். உலகம் என்பது உண்டாவதற்கு முன்னரே. ஆகவே தேவன் கூறினார், அல்லது பவுல் கலாத்தியரிலே “உலகம் உருவாக்கப்படுவதற்கு முன்பே அவர் நம்மை நியமித்து அவனுக்குள்ளாக அழைத்தார்'' என்று கூறுகிறார். அதை நினைத்துப் பாருங்கள்! தேவன். இதைக் குறித்த வேத வாக்கியங்கள் என்ன கூறுகிறதென்று கேட்க எத்தனை பேர் விரும்புகிறீர்கள், உங்கள் கரங்களை உயர்த்துங்கள். கேள்வியோடு சரியாக அது செல்கின்றதாய் இருக்கின்றது. இப்பொழுது என்னுடனேயே கலாத்தியர் 1-ஆம் அதிகாரத்தை புரட்டுங்கள், இங்கு கவனியுங்கள் கலாத்தியர், இல்லை. எபேசியர். இப்பொழுது எபேசியர் 1-ல் தேவன் என்ன கூறுகிறார் என்பதை கவனமாகக் கேளுங்கள்: தேவனுடைய சித்தத்தினாலே இயேசு கிறிஸ்துவினுடைய அப்போஸ்தலனாகிய பவுல், எபேசுவிலே இயேசு கிறிஸ்துவுக்குள் விசுவாசிகளாயிருக்கிற பரிசுத்தவான்களுக்கு எழுதுகிறதாவது: நம்முடைய பிதாவாகிய தேவனாலும், கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவினாலும் உங்களுக்கு கிருபையும் சமாதானமும் உண்டாவதாக. நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் பிதாவாகிய தேவனுக்கு ஸ்தோத்திரம்; அவர் கிறிஸ்துவிற்குள் உன்னதங்களிலே ஆவிக்குரிய சகல ஆசீர்வாதத்தினாலும் நம்மை ஆசீர் வதித்திருக்கிறார். இங்கிருக்கிறது, இப்பொழுது கவனியுங்கள்: அவர் உலகத்தோற்றத்திற்கு முன்னே கிறிஸ்துவுக்குள் நம்மைத் தெரிந்து கொண்டபடியே... (வியூ!) அது மிகவும் அருமையானது அல்லவா? அது மிகவும் அருமையானது அல்ல, அது உண்மையாகவே மிகவும் அருமையானது. உலகம் தோன்று முன்பே தேவன் ஆர்மன் நெவிலை அறிந்திருந்தார். அவர் சுவிசேஷத்தைப் பிரசங்கிப்பார் என்றும் தேவன் அறிந்திருந்தார். ஆர்மன் நெவில் சுவிசேஷத்தை பிரசங்கிப்பார் என்று உலகத் தோற்றத்திற்கு முன்பே தேவன் அறிவார். அது ஆச்சரியமானதல்லவா? அவர் தெரிந்தெடுத்தார். ''ஏன், அவர் சபையின் ஒரு அங்கத்தினர், தாம் அந்த சபையை உடையவராய் இருக்கப் போகிறார் என்பதை தேவன் அறிவார். அவர் தமக்குள் நம்மைத் தெரிந்து கொண்டார்'' என்று, எபேசு சபைக்கு பவுல் கூறினான். இப்பொழுது நாம் எல்லாரும் கிறிஸ்துவினுடைய சரீரத்தின் அங்கத்தினராய் இருக்கிறோம். அது சரிதானே? உலகம் தோன்றுவதற்கு முன்னரே தேவன் உன்னையும், என்னையும் தமக்குள் தெரிந்து கொண்டார். வியூ என்னே! அது ஆச்சரியமானதல்லவா? 26இப்பொழுது முதலாவது மனிதன், அவர் முதலாவது மனிதனை தம்முடைய ரூபத்தின்படியே உண்டாக்கினார், நாம் அந்த ரூபத்திற்கு திரும்பிக் கொண்டிருக்கின்றோம், அது சரி, உண்டாக்கப்பட்ட நம்முடைய முதலாம் ரூபத்திற்கு. வில்லியம் பிரன்ஹாமாகிய என்னை தேவன் உண்டாக்கின போது, உலகம் தோன்றுவதற்கு முன்பாகவே நான் இருந்தேன், அவர் என் சரீரத்தையும், ஆவியையும் உண்டாக்கினார். எனக்குத் தெரிந்தவரை என்ன நடந்தது என்பதை நான் அறியாதவனாய் இருந்தேன், ஆனால் நான் அங்கு இருந்தேன். ஓ, நீங்கள் அதைப் புரிந்து கொள்ளவில்லை என்று நான் நம்புகிறேன். ஆகையால் இப்பொழுது, ஒரு நிமிடம், இயேசு தம்முடைய சீஷர்களிடம் ''உலகம் தோன்றுவதற்கு முன்னரே அவர்களை அறிந்திருந்தேன்'' என்று கூறினார். இங்கே பவுல், ''உலகம் தோன்று முன்னரே, தமக்குள் நம்மைத் தெரிந்து கொண்டார்,'' என்று கூறுகிறான். இப்பொழுது அங்கே என்னுடைய ஒருபாகம், சகோதரன் ஆர்மன் நெவில் மற்றும் உங்கள் எல்லாருடைய ஒரு பாகம் உலகம் தோன்றுவதற்கு முன்பே கிறிஸ்து இயேசுவிற்குள் இருந்தது. இப்பொழுது அதைக் குறித்த என்னுடைய மதிப்பீடு என்னவென்றால், இன்றைக்கு இந்த ஆவியைப் பெற்றுள்ள மக்கள், அல்லது அந்த ஆவி தேவனை சுற்றியிருந்த முறைப்படி மாற்றி மாற்றி சுழன்ற (Rotated), பரலோகத்திலே சாத்தானுடைய பொய்யை எதிர்த்த, ஆதியிலே விழுந்து போகாத தூதர்கள் ஆவியை மக்கள் உடையவர்களாய் இருக்கிறார்கள் என்றே நினைக்கிறேன். 27பூமியின் மூன்றில் இரண்டு பாகம், அதற்கும் மேலாக பாவத்தில் உள்ளது. மூன்றில் இரண்டு பாகமான தூதர்கள் உதைத்து தள்ளப்பட்டனர். ஆகையால் அந்த பிசாசின் ஆவிகள் ஜனங்களுக்குள் வந்து அவர்கள் சரீரங்களில் குடிகொண்டன. நான் என்ன கூற விழைகிறேன் என்பதைப் பாருங்கள்? அவைகள் பிசாசுகள்... அவைகள் ஜனங்களுக்குள் வந்து ஒரு சுபாவத்தை, தன்மையை அளிக்கின்றன. இயேசு மகதலேனா மரியாளிடத்திலிருந்து ஏழு பிசாசுகளை விரட்டினார். பெருமை, அகங்காரம் (நீங்கள் பாருங்கள், பெரிய மக்கள்) அசுத்தம், ஆபாசம், தீய ஒழுக்கம், மிஞ்சும் தன்மை, சச்சரவு, இவைகள் எல்லாம், பாருங்கள். தேவன் மனிதனை தம்முடைய சொந்த சாயலின்படியே உண்டாக்க துவங்கின போது இந்த ஆவிகளெல்லாம் அங்கே உண்டாக்கப்பட்டிருந்தன. இயற்கை முறைக்குளடங்காத, அந்த ஆவிகள் உண்டாக்கப்பட்டன. 28பிறகு அவர் மனிதனை பூமியின் மண்ணிலே வைத்தார், அவன் தான் முதலாவது மனிதன், ஆதாம் ஆவான். அந்த மனிதன் அந்த ரூபத்தின்படியே உருவாக்கப்பட்டான், இங்கிருக்கும் இந்த மானிட மனிதன், அவன் ஒரு மிருகத்தின் ரூபத்தின்படி உண்டாக்கப்பட்டவன் ஆகும். இந்த மனித சரீரங்கள் மிருகங்களின் ரூபத்தின்படி உருவாக்கப்பட்டதாகும். நமக்கு ஒரு குரங்கிற்கு இருப்பது போன்ற கையும், ஒரு கரடிக்கு இருக்கும் காலைப் போலவும் இருக்கின்றது. ஒரு சிறிய கரடிக் குட்டியை எடுத்து, அதன் தோல்களையெல்லாம் உரித்து, ஒரு சிறிய பெண் குழந்தைக்கு பக்கத்திலே தலைகீழாக படுக்கவைத்து அதில் வித்தியாசம் உள்ளதா என்றுபார். ஹம்! சகோதரனே, நீங்கள் கூர்ந்து கவனிக்க வேண்டும். அதன் மார்பு, வயிறு பாகத்திற்கு இடையே உள்ள தடித்த தசைச்சுவர், உதரவிதானம் (Diaphram), மற்றும் அதன் முழு அமைப்பும், அது உருவாக்கப்பட்ட விதமும், அதன் ரூபமும், மற்ற எல்லாமுமே சரியாக ஒன்று போலவே இருக்கும். அது மிருகத்தின் ரூபத்தின்படியே உள்ளது, மிருகங்களை வழி நடத்துவது அவனுடைய கடமையாக இருந்ததால். அவன் மிருகத்தின் சாயலைப் போன்ற ஓன்றாக உண்டாக்கப்பட்டான். 29ஆகவே பரிசுத்த ஆவி ஒரு மனிதனிடத்திலிருந்து எடுக்கப்படுமானால், அவன் மிருகத்தைக் காட்டிலும் தாழ்ந்தவனாயிருப்பான், அவன் மிருகத்தை விட மோசமானவனாயிருப்பான். அவ்விதம் கூறுவது ஒரு கடினமான காரியம் ஆகும். ஆனால், நீங்கள், தன் சிந்தையிலே மறுஜென்மமடையாத அவன் நினைவுகளை வழிநடத்த பரிசுத்த ஆவியற்ற ஒரு மனிதனைக் காண்பீர்களானால், அவன் ஒருதாயின் கையில் உள்ள ஒரு குழந்தையை பிடுங்கி எறிந்து, மிருக இச்சை கொண்டு அவளை மானபங்கப்படுத்திவிடுகிறவனாக இருப்பான். அது முற்றிலும் சரியே. ஒரு கெட்ட ஸ்திரீயை எடுத்துக்கொண்டால் - நீ ஒரு வயதான தாய் காட்டுப் பன்றியை (hog) அல்லது ஒரு வயதான நாயை (dog) எடுத்துக் கொண்டால், அதற்கு எல்லா பெயர்களையும் சொல்லி அழைப்போம்... ஆனால் அதனுடைய ஒழுக்கமானது தன் குட்டி நாய்களுக்காக, காட்டுப்பன்றி தன்னுடைய குட்டிகளுக்காக இருக்கின்றன. ஆனால் ஒரு சாதாரண ஒழுக்கமில்லாத ஸ்திரீ... எப்பொழுதுமே, எல்லா நேரமும் நாற்றமெடுக்கும் ஒருவள் ஆவாள். அது சரி. ஆகவே ஞாபகங்கொள்ளுங்கள், கிறிஸ்து இல்லாமல், உன்னுடைய ஒழுக்கமானது. ஒரு நாய்க்குக் கீழாகச் சென்றுவிடும். அது சரி. ஒரு நாயோ, அல்லது மற்ற மிருகமோ ஆடையினால் தன்னை மூடிக்கொள்ளத் தேவையில்லை. மனிதன்தான் விழுந்து போனவன் ஆவான், மிருக ஜீவன்கள் அல்ல. ஆனால், மிருக ஜீவனானது மனிதனுக்கு (மனித ஜீவனுக்கு) கீழாக உள்ளது, ஏனென்றால் அதற்கு வழிகாட்டியும், சிறந்த தலைவனும் மனிதனே ஆவான். பூமியில் உள்ள எல்லா மிருகமும் மனிதனுக்கு பயப்படுகின்றன. யாரோ ஒருவர், முன்பு ஒரு சமயம், வேட்டையைப் பற்றி என்னிடம், “நீங்கள் அதற்கு பயம் கொள்வதில்லையா?”, என்று கேட்டார். ஏன், சிருஷ்டிக்கப்பட்ட ஒவ்வொரு மிருகமும் ஆதியிலிருந்து மனிதனைக் கண்டு பயப்படுகின்றது, ஏனெனில் ஆதியிலிருந்து அது அப்படித்தான் இருக்க வேண்டும். பாருங்கள்? நிச்சயமாக, நீ ஓடுவாயானால், உனக்கு பின்னாலே அது ஓடிவரும், அது சரியே. ஒரு நாய் அல்லது நீ செய்ய வேண்டும் என்று விரும்பும் எதுவும் அவ்விதமேயாகும். அதுசரி. 30ஆனால் இப்பொழுது கவனியுங்கள், ஒரு மனிதன் இங்கே வருவானானால்... நீங்கள், “இப்பொழுது அதைக் குறித்து என்ன சகோதரன் பிரான்ஹாமே?'' என்று கூறலாம். இப்பொழுது, நீ தேவனை சரியாகக் காணலாம், ஒருத்துவத்திற்கும் திரித்துவத்திற்கும் நடுவில் சரியாக அதை இப்பொழுது காண்பாய். இப்பொழுது கவனியுங்கள், தேவன் தம்மைத்தாமே தாழ்த்திக் கொண்டார், அவர் கீழேயுள்ள இந்த மனிதனிடம் வரும் அளவிற்கு தம்மைத் தாழ்த்தி தம்மை வெளிப்படுத்தினார். இப்பொழுது, மனிதன் பாவம் செய்தான், தன்னுடைய ஆவியினால் அல்ல, ஆனால் அவன் தன்னுடைய சரீரத்தின் இச்சை, ஆசையில் பாவம் செய்தான். அவன் பாவம் செய்தபொழுது தன்னுடைய சிருஷ்டிகரிடத்திலிருந்து தன்னை வேறு பிரித்துக் கொண்டான். ஆகவே பிறகு தேவன், அந்த லோகாஸ், அவனை சிருஷ்டித்த அதே சிருஷ்டிகர், கீழே வந்து மனிதனுடைய சாயலின் படியே உருவாக்கப்பட்டார். மனிதன் தேவனுடைய சாயலின்படி உருவாக்கப்பட்டான். பிறகு மிருகத்தின் சாயலின்படி அவன் உண்டாக்கப்பட்டு விழுந்து போனான். ஆகவே தேவன் மனித சாயலின்படியே கிறிஸ்து இயேசு என்னும் மனிதனுக்குள் வந்து பாடு அனுபவிக்க கீழே வந்தார். தேவன் ஆவியிலே பாடு அனுபவிக்க முடியாது. தேவன் ஆவியில் எவ்விதம் சரீரபூர்வமான பாடனுபவிக்க முடியும்? அவரால் அதைச் செய்ய முடியவில்லை. ஆகவே தேவன் மனித சாயலின்படியே உருவாக்கப்பட்டு இழந்து போனவர்களை மீட்க தம்மை வெளிப்படுத்தினார். பாருங்கள்? பிறகு தேவன் மாம்சத்திலே பாடனுபவித்தார். 1தீமோத்மேயு 3:16, “அன்றியும் தேவபக்திக்குரிய இரகசியமானது யாவரும் ஒப்புக் கொள்ளுகிறபடியே மகா மேன்மையுள்ளது. தேவன் மாம்சத்திலே வெளிப்பட்டார், தேவ தூதர்களால் காணப்பட்டார், சிலுவையிலறையப்பட்டார் பிரசங்கிக்கப்பட்டார், விசுவாசிக்கப்பட்டார், தேவனுடைய வலதுபாரிசத்திற்கு ஏறெடுத்துக் கொள்ளப்பட்டார்'' அது சரிதானே? தேவன் தாமே கீழிறங்கி வந்து மனித சரீரத்திலே வாசம் பண்ணி சோதனையை அனுபவித்தார். ''தேவன் கிறிஸ்துவிற்குள் இருந்து, உலகத்தை தம்மோடே ஓப்புரவாக்கினார்'' அன்பு என்றால் என்னவென்று பாருங்கள்? தேவனுடைய அன்பு! 31இப்பொழுது, இப்பொழுது, மனிதனும், ஸ்திரீயும், அதை நாம் காண்போம் என்று நம்புகிறேன். இப்பொழுது ஒரு ஸ்திரி... இப்பொழுது இதை நீங்கள் காணும் விதத்தில் இதை நான் சரியாகக் கூறட்டும், பாருங்கள். “ஸ்திரீ தன்னுடைய புருஷனுக்கு உட்பட்டவளாவாள். ஒரு மனிதன் தன்னுடைய மனைவியை ஆளுகை செய்ய வேண்டும்'' என்று வேதம் கூறுகின்றது. ஆனால் அவர்கள் அதை எப்படி மாற்றிப்போட்டுவிட்டார்கள்! ஸ்திரீ மனிதன் மீது ஆளுகை செலுத்துகிறாள், ''இப்பொழுது, ஜான் நீ வீட்டில் இரு நீ வெளியில் செல்லக்கூடாது!'' ''சரி என் அன்பே'' அதுதான் காரியம், பாருங்கள்? திரு. அவர்களே, உன்னிடம் ஒன்றை நான் கூறட்டும். உன் மனைவிக்காக நீதான் பதில் கூறப் போகிறாய், ஆனால் உன்னுடைய மனைவி உனக்காக பதில் சொல்லப் போவதில்லை. நீ தான் ஸ்திரீக்குத் தலை, தேவன் மனிதனுக்குத் தலையாய் இருக்கிறார். ஆதலால் அவர், ஒரு மனிதன் கிறிஸ்துவுக்காக தன் மயிரைக் கத்தரிக்ககடவன். ஒரு ஸ்திரீ தன் மயிரை கத்தரிக்காதிருக்கக்கடவள். அவள் அவ்விதம் தன் மயிரைக் கத்தரித்தால், “அவள் தன் புருஷனை அவமதிக்கிறாள்'' என்று கூறினார். பாருங்கள்? வேதவாக்கியம் கூறுகிறபடி நான் என்ன கூற விழைகிறேன் என்று உங்களால் காணமுடிகின்றதா? 32ஷ்ரீவ்போர்டில் ஒருநாள் அதைக் குறித்து சூடாக பேசினேன். ஸ்திரீகளுக்கு நீண்ட மயிர் இருக்கலாமா என்று அவர்கள் பேசிக் கொண்டிருந்தார்கள். நான், ''கத்தரிக்கப்பட்ட குட்டை மயிர் உடைய ஸ்திரீகளை விவாகரத்து செய்ய புருஷனுக்கு, அதிகாரம் உண்டு. அது வேதாகம அதிகாரம்“ என்றேன். அது சரியே. வேதாகமம் அதைத்தான் உங்கள் கண்களால் தேவனைக் காணமுடியாது. அதைச் செய்ய உங்களுக்கு அவைகளை அவர் அளிக்கவில்லை. நீங்கள்... கூறுகின்றது. அது முற்றிலும் சரியே. ஓ, என்னே! தங்களுக்கு போதிக்கப்பட்டபடியே பரிசுத்த ஆவிபெற்ற ஸ்திரீகள் அங்கு உட்கார்ந்து கொண்டிருக்கிறார்கள், அதுதான். பாருங்கள்? ஆம், அதில் சிறிது தளர்ந்தால். பிறகு... அவர், ''இப்பொழுது, அவர்கள் அதைக் கத்திரிக்க வேண்டுமெனில், ஏதோ ஒரு கோளாறு இருந்து தங்கள் மயிரைக் கத்தரித்துத் தான் ஆகவேண்டுமென்று இருந்தால், ஒரு சவரக்கத்தியை எடுத்து முழுவதுமாக மொட்டை அடித்து பிறகு அவளுடைய மயிரை வழவழப்பாகக் செய்யுங்கள்'' என்றார். நீ அவ்வழியாக வருவது சிறந்ததாகும். அது சரி. வேதவாக்கியமும் அதைத்தான் கூறினது. அது, ''அவள் தன் மயிரைக் கத்தரித்து, தன் புருஷனை கனவீனப்படுத்துகிறாள். கனவீனமான ஒரு ஸ்திரீயை சட்டப்பூர்வமாக விவாகரத்து செய்து தள்ளிவிடலாம்'' என்று கூறுகின்றது. ஆனால், இப்பொழுது அவன் திரும்பவும் விவாகம் செய்யக் கூடாது. ஆனால் அவன் அவளை விவாகரத்து செய்யலாம். அது சரி. அது வேதப் பூர்வமானது. ஓ சகோதரனே, நமக்கு தேவை என்னவென்றால் இன்னும் கேள்விகளுக்கான சில இரவுகள் வேண்டும்! அது சரி. நீங்கள் அதைப் படிக்க விரும்பினால் அது 1கொரிந்தியர் 14 ஆம் அதிகாரம் ஆகும். அது சரி. இப்பொழுது இந்த ஸ்திரீ... 33தேவன் மனிதனை ஆணும் பெண்ணுமாக சிருஷ்டித்தார். அவர் என்ன செய்தார் என்பதைக் காண்கிறீர்களா? அவர் மனிதனை உருவாக்கினார். அவர் உருவாக்கினார்... இப்பொழுது, அதுதான் முதலாம் கேள்வி, பாருங்கள், “அவர்களைச் சிருஷ்டித்தார்'' ஆதியாகமம் 1:26 ஆதியாகமம் 2:7-ல் ”அவர் அவர்களை பூமியின் மண்ணினாலே உருவாக்கி, ஜீவ சுவாசத்தை அவன் நாசியிலே ஊதினார்''. கேள்வி: என்ன வித்தியாசம் உள்ளது, அல்லது மேற்கூறப்பட்ட வேத வாக்கியத்தில் தொடர்பு, இணைப்பு எங்குள்ளது? முதலாம் மனிதன் இரண்டாம் மனிதனிடத்தில் எப்படிப்பட்ட தொடர்பு கொண்டிருந்தான்? இரண்டாம் மனிதன், உண்டாக்கப்பட்ட, ஐந்து புலன்களில் வெளிப்படையான முதலாம் மனுஷனாய் இருக்கிறான். பாருங்கள்? இப்பொழுது தேவனை உங்கள் கைகளினால் அவ்விதம் தொட முடியாது, 34ஒரு வயதான பரிசுத்தவான் மரிக்கும்போது ''அங்கே தாயார் உள்ளார், நான் அவர்களை அநேக ஆண்டுகளாகக் காணவில்லை?'' என்று கூறுவதை நீங்கள் கேட்டிருக்கிறீர்களா? மக்கள் இப்படி கூறுவதை கேட்டிருக்கிறீர்களா...? பாருங்கள், அது என்ன, அவர்களுடைய கண்கள் மங்கி, இயற்கைக்கு மேம்பட்ட கண்கள் உள் வருகின்றன. பாருங்கள்? ஆகவே சில சமயங்களில் நாம்... தேவன் அவ்வாறு செய்வாரானால்... இயற்கைக் கண்கள் மங்கும்போது நாம் தரிசனங்களைக் காண்கிறோம். சரியாக நமக்கு முன்பாக, நாம் நேராகப் பார்க்கையில், அங்கே நமக்கு முன்பாக ஒரு தரிசனம் தோன்றி தேவனுடைய இயற்கைக்கு மேம்பட்ட காரியங்களை நமக்கு காண்பிக்கிறது. நான் என்ன கூற விழைகிறேன் என்பதைப் பாருங்கள்? ஆகவே பாருங்கள், ''இங்கு பூமிக்குரிய கூடாரமாகிய...'' இப்பொழுது இங்குள்ள ஆண்கள் பெண்களில் சிலர் முதிர்வயதை அடைந்துக் கொண்டிருக்கின்றனர். கவனியுங்கள். ''இந்த பூமிக்குரிய கூடாரமாகிய..'' அங்கிருக்கும் தொண்ணூற்றிரண்டு வயது நிரம்பிய தந்தையைக் குறித்து நான் நினைக்கிறேன். “பூமிக்குரிய கூடாரமாகிய நம்முடைய வீடு அழிந்து போனாலும், அங்கே (அழியாத) ஒரு ஆவிக்குரிய மனிதன், ஒரு ஆவிக்குரிய சரீரம் நமக்காகக் காத்துக் கொண்டிருக்கின்றது. நான் உங்களை அங்கு காண்பேன். நான் நடந்து செல்வேன்... 35அங்கே சகோதரன் நெவிலை என்னால் தொட இயலாது, ஏனென்றால் அவர்கள் பலிபீடத்தின் கீழே உள்ள ஆத்துமாக்களாய், அவர்கள் ''எவ்வளவு காலம் ஆண்டவரே, எவ்வளவு காலம்?'' என்று கதறுவதை யோவான் கண்டான். அது ஏனென்று நாம் வெளிப்படுத்தலை ஆராய்ந்தோம். அவர்கள் திரும்பி வரவும், தங்கள் சரீரங்கள், அழிவில்லாத சரீரங்களாகிய அங்கியால் போர்த்தப்படவும், அவர்கள் எவ்வளவாய் வாஞ்சித்தனர். அவர்கள், “எவ்வளவு காலம் ஆண்டவரே?'' என்று கதறினர். இப்பொழுது, ஒருவரையொருவர் அவர்கள் அறிந்திருந்தனர், ஆனால் பேசவோ, கைகளைக் குலுக்கவோ அவர்களால் இயலவில்லை அல்லது என்னை மன்னிக்... அவர்களால் பேச முடிந்தது, ஆனால் அவர்களால் கைகுலுக்குதலையோ, மற்றவைகளையோ செய்ய முடியவில்லை. இங்கே அதை நிரூபிக்க ஒரு காட்சி உள்ளது. எந்தோரின் அஞ்சனம் பார்க்கிற ஸ்திரீ சாமுவேலின் ஆவியை அழைத்தபோது, சவுல் அதைக் கண்டு அது சாமுவேலின் ஆவி என்று அடையாளம் கண்டுகொண்டான். சாமுவேல் சவுலை அடையாளங்கண்டு, ''நீ என்னை எழுப்பி வரப்பண்ணி என்னைக் கலைத்தது என்ன, கர்த்தர் உன்னை விட்டு விலகி உனக்கு சத்துருவாய் இருக்கும்போது நீ என்னிடத்தில் கேட்பானேன்?'' என்று கூறினான். அது சரிதானே? அங்கே வயதான சாமுவேல் தீர்க்கதரிசியின் சால்வையைப் போர்த்திக் கொண்டு அவனை நோக்கிப் பார்த்தான். அவன் ஆவியாய் இருந்தான். “அந்த அஞ்சனம் பார்க்கிற ஸ்திரீ தேவர்கள் பூமிக்குள்ளிருந்து ஏறி வருவதைக் காண்கிறேன்'' என்று கூறி தரையில் விழுந்தாள். ''ஏன் என்னை கலைத்தாய்?“ என்று அவன் கூறினான். அதற்கு அவன் “நல்லது, யுத்தம் எப்படி நடக்கின்றது என்று நான் அறிந்து கொள்ள விரும்புகிறேன்,'' என்றான். அவன், ''நாளை நீ யுத்தத்தில் மரிக்கப்போகிறாய், நீயும் உன்னுடைய குமாரரும் நாளைய இரவு இந்நேரத்தில் என்னோடிருப்பீர்கள் என்றான்'' பாருங்கள்? அவன் சுயநினைவு கொண்டவனாய் இருந்தான், அவனைப் பார்த்துக் கொண்டிருந்த அந்த அஞ்சனம் பார்க்கிற ஸ்திரீக்கும், சவுலுக்கும், அவன் இங்கே பூமியில் இருந்தபொழுது அவர்களுக்குச் செய்ததையே மறுபடியும் செய்தான். 36இப்பொழுது கவனியுங்கள். அநேக சமயங்களில்... தாயும் தந்தையும் மரிக்கும்போது தாங்கள் நேசித்தவர்கள் அருகில் நிற்பதைக் கண்டார்களே அதைக் குறித்தென்ன? ஆனால் இயற்கைக்கு மேம்பட்ட சரீரத்தில், அவர்கள் அவர்களை அறிந்து கொண்டார்கள். ஆனால் இப்பொழுது மகிமையான பாகம் இங்குள்ளது. இயேசு திரும்பவுமாக உயிர்த்தெழுதலில் வருகையில், அது அந்த சரீரமாக இருக்காது. அந்த சரீரம் அப்போது, பூமிக்கு வந்து ஸ்திரீயினால் பிறப்பிக்கப்படாத, தேவனால் சிருஷ்டிக்கப்பட்ட (அல்லேலுயா!) வயது ஆகாத, அல்லது சுருக்கம் விழாத, வேறொரு சரீரத்தை பெற்றுக் கொள்ள வரும், உன்னுடைய தலையில் நரைத்தமயிர் உண்டாகாது. எப்போதுமே பரிபூரணமாக இருக்க, அல்லேலுயா! ஓ, சகோதரனே, இந்த உஷ்ணமான இரவில் அது என்னை கூச்சலிடச் செய்யும்! அது சரி! ஓ, என்னுடைய இந்த மாம்சப் போர்வையானது விழுந்து, நான் எழுந்து, நித்தியமான பரிசைப் பற்றிக் கொள்வேன்! கவலை கொள்ள உலகத்தில் நமக்கு என்ன இருக்கிறது? 37தேவன் என்னை எவ்விதம் ஆதியிலே சிருஷ்டித்தார் என்ற முழு திட்டமும் அங்கே இருக்கின்றது. நான் இங்கே பூமிக்கு இறங்கி வந்து, சுவிசேஷ பிரசங்கியாக என் ஸ்தானத்தை எடுத்துக் கொண்டேன், அல்லது உங்களைப் போல, நீங்கள் ஆண் அல்லது பெண்ணாக இரட்சிப்பைப் பெற்று, பிறகு தேவனுடைய கிருபையால் நீங்கள் ஜீவிக்கின்றீர்கள். அல்லேலூயா! ஆதியிலே இருந்த அதே ஆவிதான் இங்கேயிருந்து செல்கின்றது. நான் இங்கே இருந்தேன் என்ற நினைவோடு (அல்லேலுயா!) பீடத்தின் கீழாக காத்திருந்து, எப்போதுமாக ஆசீர்வாதிக்கப்பட்டு இளைப்பாறுவேன். மறுபடியுமாக திரும்பி நான் வரும்போது, மரணம் என் சரீரத்தைத் தாக்கினதற்கு முன்னிருந்த அந்த மிகச் சிறப்பின் சரீரத்தை நான் எடுத்துக் கொள்வேன், அப்படியே அதை எடுத்துக் கொள்வேன். உனக்கு இருபத்திரண்டு அல்லது இருபத்தி மூன்று வயதாகையில் நீ தளர ஆரம்பிக்கின்றாய், மரணம் உன்னை தாக்குகின்றது. உனக்கு இருபத்தைந்து வயது ஆனபிறகு நீ முன்பிருந்த மனிதனைப் போலவோ அல்லது ஸ்திரீயைப் போலவோ உன்னால் இருக்கமுடியாது, ஏதோ ஒன்று உள் வருகின்றது. உன் கண்களுக்கு கீழாக சுருக்கம் ஆரம்பிக்கின்றது. நீ முன்பிருந்தது போலவே உன்னால் சலவைசெய்ய முடியாது. உனக்கு முப்பது வயதாகும் போது அதை அதிகமாகக் காணலாம். என்னைப் போல நாற்பத்து நான்கு வயதாகும் வரை காத்திரு, அப்பொழுது நீ உண்மையாகவே அதைக் காண்பாய். ஆனால் ஓ சகோதரனே! நான் எண்பது, தொண்ணூறு வயதாகி கோலுன்றி அங்கு நிற்கும் வரை காத்திரு. அது என்ன? தேவன் அவனை ஒரு ஓட்டப் பந்தயத்திற்கு ஓட வைக்கிறார். ஆனால் மகிமையான ஒரு நாளிலே மரணம் உள் வருகின்றது. 38ஒரு சமயத்தில் நான் அகன்ற தோள்களையும், கருமை நிற மயிரையும் (தலை முழுவதுமாக) என் கண்களின் கீழே சுருக்கம் விழாதவனாக இருந்தேன்; இப்பொழுது என்னைப் பாருங்கள். தளர்ந்து கொண்டிருக்கிறவனாக, தோள்கள் சரிந்தவனாக, பருமனாகிக் கொண்டு, கண்களின் கீழ் சுருக்கம் விழுந்தவனாக, வழுக்கைத் தலையாக இருக்கிறேன். ஏன், இந்த கடைசி இருபது ஆண்டுகளாக மரணம் எனக்கு என்ன செய்து கொண்டிருக்கிறது என்பதைப் பாருங்கள். மரணம்தான் அதைச் செய்து கொண்டிருக்கின்றது.தேவன் என்னை வாழ அனுமதிப்பாரானால், நான் எண்பது வயதாகும் வரை பொறுத்திருங்கள், காண்பதற்கு நான் எப்படியிருப்பேன், இந்த பழைய கோலை ஊன்றிக் கொண்டிருப்பேன், அதைப்போல எங்கேயோ நடுங்கிக் கொண்டிருப்பேன். ஆனால், அல்லேலுயா, மகிமையான ஒரு நாளில் மரணம் தன்னுடைய முழுவதையுமே எடுத்துக் கொள்ளும். பிறகு நான் உயிர்த்தெழுதலிலே எழுந்திருக்கையில், நான் எப்படி இருந்தேனோ அப்படியே இருப்பேன், திருமதி. பிரான்ஹாம், திரு பிரான்ஹாம் அவர்களால் உண்டாக்கப்பட்ட சரீரத்தில் அல்ல, ஆனால் தேவன் இந்த பூமியில் எப்படி சிறந்ததாக என்னைச் சிருஷ்டித்தாரோ, அதேபோன்று இருப்பேன். நான் சோதனைகளிலிருந்தும், பாவத்திலிருந்தும், மற்ற எல்லாக் காரியத்திலிருந்தும் விடுதலையடைந்தவனாக, இருதய கோளாறு, வியாதி எப்போதுமே வராதவாறு தேவன் தாமே சிருஷ்டித்த ஒன்றாக இருப்பேன். ஓ, என்னே! பிறகு நான் என்னுடைய சிறிய மனைவியின் கையைப் பிடித்துக் கொண்டு தேவனுடைய பரதீசியிலே புதியவனாக நடந்து செல்வேன். நீங்களும் அதைப் போன்றே செய்வீர்கள். இப்பொழுது இன்றிரவு நீங்கள் கூட்டிக்கொண்டு செல்லும் தலை நரைத்துப் போன வயதான மனைவி என்று நீங்கள் அழைக்கும் அவள், நீங்கள் பீடத்தின் அருகே விவாகம் செய்தபோது எப்படி இருந்தாளோ அதைப் போலவே அழகாக இருப்பாள். அல்லேலுயா! வ்யூ! அது ஒரு மனிதனைக் கூச்சலிடச் செய்யப் போதுமானதாக இருக்கும். அப்படித்தானே? பாருங்கள்? 39அது சரி, அதுதான் அந்த தொடர்பு, இணைப்பு. தேவன் உறுதியுள்ளவர் ஆவார். தேவன் ஒரு காரியத்தைச் செய்ய முடிவு செய்வாரானால் எண்ணம் கொள்வாரானால், அது அப்படியே ஆகவேண்டும். சாத்தான் இக்காரியத்தை பாலுணர்ச்சியின் மூலமும், ஸ்திரியின் மூலமும், பிள்ளை பெறச் செய்து அதைப் பாழாக்கினான். அவன் இதைப் பாழாக்கினான். ஆனால் அதனோடே முன் செல்லுங்கள், அது சரிதான். இந்த ஜீவியமானது இதை எடுத்துக் கொள்ளவேண்டும். ஏனெனில், நீ அந்த உருவையும், சாயலையும் எடுத்துக் கொள்ளுகிறாய் என்பது தான் நீ இந்த ஜீவியத்தில் செய்கின்ற ஒரே காரியமாகும். இப்பொழுது நீ சிகப்பு நிற மயிரையுடைய தலையுடன் இருந்தால், நீ அங்கு அவ்விதமே இருப்பாய். நீ கருமை நிற மயிரையுடைய தலையுடன் இருந்தால், அங்கு அவ்விதமே இருப்பாய். பாருங்கள், நீ சிறந்த முறையில் எப்படியெல்லாம் இருந்தாயோ. நீ... சாத்தான் இந்த காரியத்தில் குறுக்கீடு செய்தான், குறுக்கே வந்து, அதை நீ பெற்றுக் கொள்ளவே இல்லை... தேவன் நீ எப்படி இருக்க வேண்டும் என்று விரும்பியிருந்தாரோ, எண்ணங் கொண்டாரோ, அப்படி இருக்கப் போகிறாய். ஓ, எவ்வளவு மகிமையானது! அதோ உன்னுடைய மனிதன். 40இப்பொழுது ஆதியாகமம் 2. நான் விரைவாய் செல்லவேண்டும், நான் அதை எடுப்பேன் (உங்களுக்கு ஏதாவது உண்டா ? நீங்கள்... பதிலைப் பெற்றுக் கொண்டீர்களா?) அது சரி, ஆதியாகமம் 2: 18-21. கேள்வி: 2. தேவன் ஏவாளைஆதாமின் எலும்பிலிருந்து உருவாக்கினார், ஆதியாகமம் 2:18-21. தேவன் ஆணையும் பெண்ணையும் சிருஷ்டித்து, பிறகு ஆதாமையும் ஏவாளையும் உருவாக்கினாரா? கேள்வி: 3. காயீன் பெண் கொள்ள அப்பொழுது சிருஷ்டிக்கப்பட்ட ஆண், பெண்ணிடத்திற்குச் சென்றானா? இப்பொழுது, எனக்குத் தெரிய... இதை எழுதிய நபர் இங்குதான் இருக்க வேண்டும். இப்பொழுது, தேவன். இங்குள்ள முதலாவது கேள்வியில்! ஆதியாகமம் 2:18-21-ல் உள்ள கேள்வி: ஆணையும் பெண்ணையும் தேவன் உண்டாக்கினாரா? இல்லை. நான் 2:18-21-ல் இங்கே நீங்கள் காண்கின்றபடி, கவனியுங்கள். பின்பு, தேவனாகிய கர்த்தர்; மனுஷன் தனிமையாயிருப்பது நல்லதல்ல; ஏற்ற துணையை அவனுக்கு உண்டாக்குவேன் என்றார். தேவனாகிய கர்த்தர் வெளியின் சகலவித மிருகங்களையும்... மற்ற எல்லாவற்றையும். மண்ணினாலே உருவாக்கி... மேலும் இன்னுமாக இப்பொழுது, தேவன் ஏவாளை ஆதாமின் விலா எலும்பிலிருந்து உருவாக்கினார். ஏனென்றால் ஆதாமின் சரீரத்திலிருந்து ஒரு விலா எலும்பு எடுக்கப்பட்டபடியால், ஸ்திரீகளின் உடல் உள்ளமைப்பில் மனிதனின் அமைப்பில் இருப்பதைவிட கூடுதலான ஒரு விலா எலும்பு உள்ளது. ஆதாம் ஏற்கனவே உண்டாக்கப்பட்டு, தனிமையாக வாழ்ந்து கொண்டிருந்தான், “ஆகையால் தேவன். மனிதன் தனிமையாய் இருப்பது நல்லதல்ல'' என்று கூறினார். 41ஒரு மனைவியைப் பெற்றுக் கொள்கின்ற உரிமைகள் பாதிரியார்களுக்கு, குருமார்களுக்கு மறுக்கப்படுகிறது. இப்பொழுது, அந்த ரோம சபையானது என்ன வேண்டுமானாலும் செய்யலாம். அவர்கள்தான், அவர்கள்தான் அதற்கு பதில் கூறவேண்டும், நானல்ல. நல்லது, சமீபத்தில் ஒரு மனிதன் என்னை இவ்விதம் கேட்டார், ''பாதிரியார்களைப் பற்றி நீர் என்ன நினைக்கிறீர்? அங்கே அந்த வாலிபப் பாதிரியார் அந்த ஸ்திரீயை, பெண்ணை இங்கு ஜெபர்சன்வில்லைச் சேர்ந்தவளை கூட்டிச் சென்று விவாகம் செய்ததைக் குறித்து நீர் என்ன நினைக்கிறீர்?“ அது அந்த ஐரிஸ் சபையில், ஞாபகமிருக்கிறதா. அவர் பெயர் என்னவென்று நான் மறந்துவிட்டேன். நான் ''விவாகம் செய்ய எனக்கு எவ்வளவு உரிமை இருக்கின்றதோ, விவாகம் செய்துக் கொள்ள அவருக்கும் உரிமை உண்டு. நான் அதைக் குறித்து அவ்விதமாகத்தான் சரியாக நினைக்கிறேன். ஒரே ஒரு காரியம் தவறு என்று நான் எண்ணுகிறேன், அவர் தன்னுடைய சபைக்குச் சென்று தன் பொறுப்பை ராஜினாமா செய்துவிட்டு, பிறகு சென்று அப்பெண்ணை விவாகம் செய்திருக்க வேண்டும். அப்படி ஓடியதற்கு பதிலாக அவர் அதைச் செய்திருக்க வேண்டும்,'' என்றேன். இப்பொழுது சில வாரங்களுக்கு முன்பாக இங்கே ஜெபர்சன்வில்லில், அங்கிருந்த ஐரிஷ் கத்தோலிக்கப் பாதிரியார் சம்பவத்தை நீங்கள் நினைவில் கொண்டுள்ளீர்களா! அவர் ஒரு இளம் வயதுக்காரர். அவர் சென்று கொண்டிருந்தார். அங்கே ஒரு பெண்ணை நேசித்தவராய் இருந்தார். அப்போது அவர்... அவருக்கு ஒரு பெரிய அன்பின் காணிக்கை அளித்தார்கள், அவரை இண்டியானா போலீஸிற்கு (Indiana polis) வேறெங்கேயோ சபை மாற்றம் செய்யப் போகிறார்கள். அவர் அப்பெண்ணின் அன்பைப் பெற்று அவளுடன் சென்று விவாகம் செய்து கொண்டார், பிறகு அவரிடமிருந்து ஒரு செய்தியும் வரவில்லை. நல்லது, விவாகம் செய்து கொள்ள அவருக்கு உரிமை உண்டு. ஆனால் அதை அவர் செய்திருக்கக் கூடாது. அவர் சபைக்குச் சென்று பாதிரியார் என்னும் என்னுடைய பொறுப்பை நான் ராஜினாமா செய்கிறேன். நான் விவாகம் செய்து கொள்ளப் போகிறேன், அவ்வளவுதான், அது முடிந்து விட்டது'' என்று இவ்வாறு கூறியிருக்க வேண்டும். 42ஆனால் இப்பொழுது, தேவன் ஏவாளை உருவாக்கினார். ஆவியான ஆதாமையும், ஆவியான ஏவாளையும், ஆதாமையும் ஏவாளையும் மனிதனும் ஸ்திரீயும், ஓரே நேரத்தில் உண்டாக்கியது தான் தேவன் செய்த இயற்கைக்கு மேம்பட்ட காரியமாகும். பிறகு அவர்... ஆதாமை உண்டாக்கி இங்கே வைத்தார். அது நல்லதல்ல என்று பாருங்கள், எல்லா நேரத்திலும் தேவனுடைய காட்சி வெளியாகின்றது. இதைப் போல எல்லாமும், அது சரியாக கீழ் வருகிறது, சரியாக வெளியாகின்றது, ஆயிர வருட அரசாட்சியினுள் வந்து நித்தியத்திற்குள் செல்கின்றது. தேவனுடைய காட்சி திறக்கப்படுகின்றது, தேவன் தம்மைத்தாமே திறந்து காண்பிக்கின்றார். இங்கே, தேவன் தம்மைதாமே இயேசு கிறிஸ்துவுக்குள் வெளிப்படுத்துகின்றார். அது அவர் யார் என்பதைக் காண்பித்தது. இயேசு என்பவர் யார்? துன்பம், துயரம் நிறைந்து அதனுடன் இருந்த, அன்புடைய ஒரு மனிதன். அவர் வேசியை நோக்கி ''உன் மேல் குற்றம் சாட்டினவர்கள் எங்கே?' என்று கேட்டார். ''ஒருவரும் இல்லை ஆண்டவரே'' ''நான் உன்னை குற்றம் சாட்டப் போவதில்லை, நீ போ, இனி பாவம் செய்யாதே.'' அவர் அந்நாளிலே சுமார் முப்பது மைல்கள் வனாந்திரம், பாலைவனம் வழியாக நடந்ததால் மிகவும் சோர்வாயிருந்து களைப்புற்றிருந்தார்; அங்கே நாயின் என்னும் ஊரிலிருந்த ஒரு ஸ்திரீ வந்து கொண்டிருந்தாள்; அவளுடைய ஒரே மகன் மரித்துப்போய் இருந்தான். அவர் அடக்க ஊர்வலத்தை நிறுத்தினார். அவன் மேல் கைகளை வைத்து ''எழுந்திரு'' என்றார். மரித்த அந்தப் பையன் மறுபடியும் எழுந்து உட்கார்ந்தான். அது - அது நம்முடைய கர்த்தராகிய இயேசு. (நன்றி டெட்டி, மகனே) அங்கே, ஏதேனும் நன்மை செய்வதற்காக ஒருபோதும் சோர்வோ களைப்போ இல்லாமல் இருந்தவர் நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்து ஆகும். அது, சரி. 43இங்கே வேறொரு காரியம்: கேள்வி: காயீன் தன்னுடைய மனைவியை தெரிந்து கொள்ள முதலாம் சிருஷ்டிப்பாகிய ஆண், பெண்ணிடத்திற்கு சென்றானா? இப்பொழுது, இது ஒரு சிக்கலான கேள்வி, ஆகையால் இப்பொழுது கூர்ந்து கவனியுங்கள். இப்பொழுது, ஓ, நான்... “காயீன் எங்கிருந்து தன் மனைவியைப் பெற்றுக் கொண்டான்?'' இதை மக்கள் தாள்களில் எழுதுவதை நீங்கள் பார்த்துள்ளீர்கள். ஓ நான் அதைக் கூறுவது உண்டு. நான் மனந்திரும்பி நான்கு வருடங்கள் ஆன பிறகும் எரிகின்ற நரகம் ஒன்றுண்டு என்று நான் போதித்ததில்லை. நான் வேதத்திலிருந்து அதைக் காண வேண்டியதாய் இருந்தது. எனக்கு எதுவும் தெரியவில்லை என்றால், அதைக் குறித்து எதையும் நான் கூறமாட்டேன். பாருங்கள்? ஆனால், இப்பொழுது, “காயீன் தன் மனைவியை எங்கிருந்து பெற்றுக் கொண்டான்?'' இப்பொழுது இக்கேள்விக்கான ஆராய்ச்சி அதுதான். ''காயீன் தன் மனைவிக்காக சிருஷ்டிப்பான ஆண், பெண்ணிடத்திற்கு சென்றானா?'' பாருங்கள்? இப்பொழுது, இப்பொழுது, இது முதலாவதான... 44இந்த திருமதி. டீ ஆர்க், இவர்கள் சுகமானதைப் பற்றியும், எவ்விதம் தேவன் அவர்களை ஆசீர்வதித்தார் என்றும், மற்றும் எல்லாவற்றையும் நீங்கள் கடந்த இரவு கேட்டீர்கள். அந்த பெண்மணி மரித்துக் கொண்டிருந்தார்கள், அவர்கள் சுமார் காலை இரண்டு மணி அளவில் வந்தனர். ஆகையால், இப்பொழுது, அப்படித்தான் நான் வருவதுண்டு. அவனுடைய மகன் ஜார்ஜ், எட்-ம் கூட மரித்த ஆவிகளுடன் தொடர்பு கொள்கிறவர்களாயிருந்தனர் (அவர்கள் திரும்பக் கொண்டு வரப்பட்டனர். நான் அங்கே ஒரு விவாதத்தை கேட்டேன், அங்கு முதல்... காயீன் தன் மனைவியை எங்கிருந்து பெற்றுக் கொண்டான். நல்லது, அங்கு பங்கேற்ற விவாதத்தில் மிகவும் சிறப்பாகக் காணப்படும்படியான விதத்தில் பேசினவன், காயீன் தன் மனைவியை எங்கிருந்து பெற்றுக் கொண்டான் என்று நான் கூறுகிறேன். காயீன் சென்று ஒரு பெரிய பெண் குரங்கை விவாகம் செய்தான், அந்த குரங்கினின்று கறுப்பர் இனம் வெளிவந்தது, நீங்கள் கவனிப்பீர்களானால் கறுப்பர் இனமக்களில் தலை அதைப் போன்று ஒரு குரங்கின் தலையைப் போன்று கூர்மையாக உள்ளது'' என்று கூறினான். நல்லது, நான் அங்கு நின்று கொண்டிருந்தேன், நான் சுவிசேஷத்தில் இரண்டு மாத வயது கொண்டவனாய் இருந்தேன். நான் “மனிதனே, நான் உன்னுடன் வேறுபாடு கொள்ள விரும்பவில்லை, ஏனெனில் நான் ஒரு மாணவன் அல்ல, நான் இப்பொழுதுதான் இரட்சிக்கப்பட்டேன், ஆனால் அது அப்படித்தான் என்றால், கறுப்பர் இனமக்கள், நோவாவின் காலத்து பெரு வெள்ளத்தின் அழிவில் (Antediluvian Destruction) அழிந்து போயிருப்பார்கள், உலகமானது தண்ணீரினால் அழிக்கப்பட்டபோது, நோவாவும் அவனுடைய குடும்பம் மாத்திரமே பேழையில் இருந்தது. இக்குடும்பம் ஒன்றுதான் பேழைக்குள் இருந்தது. கறுப்பர் இனமோ அழிந்து போயிருக்கும்'' என்று நான் கூறினேன். ”அப்படித்தான் இருக்குமென்றால், இல்லை ஐயா! கறுப்பர் இனம் அங்கிருந்து ஒருபோதும் வந்ததே அல்ல. இல்லை ஐயா. நாம் எல்லாரும் ஒரே மரத்திலிருந்து வந்தவர்கள், கறுப்பர் இனமும், ஒவ்வொரு மனித பிறவியும் ஒன்றே'' என்றேன். வித்தியாசம் என்பதே கிடையாது. சரியாக நாம் எல்லாரும். ஒருவர் மஞ்சள் நிறம் கொண்டவராயும், மற்றொருவர் பழுப்பு நிறம் கொண்டவராயும், ஒருவர் கறுப்புநிறம் கொண்டவராகவும், வெள்ளை நிறம் கொண்டவராயும், வேறொருவர் மங்கின நிறம் கொண்டவராயும், இன்னொருவர் சிகப்பு நிறம் கொண்டவராயும் இருக்கலாம், ஆனால் நீங்கள் எல்லாருமே அதே மரத்திலிருந்து வந்தவர்கள். அது இங்குள்ள சரீர பாகம் மட்டுமே ஆகும். அது சரி. அவர்கள் எல்லாரும் தேவனால் சிருஷ்டிக்கப்பட்ட மனித பிறவிகள் தான். 45இப்பொழுது, கவனியுங்கள், சில நாட்களுக்கு முன்பு, நான் இங்கே நின்று கொண்டிருந்தேன். லூயிவில்லிருந்து சில மருத்துவர்கள் வந்திருந்தனர். ஆப்பிரிக்காவிலுள்ள அந்த ஏழை ஜனங்கள் எப்படி என்பதைக் குறித்து நான் பேசிக் கொண்டிருந்தேன். மனித இனத்தை தின்னுகிற வகையினர் எப்படி அங்கிருந்த ஒரு ஸ்திரீ ஒரு சிறிய குழந்தையை எடுத்து - அதை அடித்து... வேலியில் தொங்க விட்டு சில நாட்களுக்கு அதை அழுகவிடுவார்கள், அது சிறிதாக அழுக ஆரம்பிக்கும்போது அதைத் தின்பார்கள் என்பது உங்களுக்குத் தெரியுமா. அதைப் போன்ற ஏதாவதொன்றை அவர்கள் சிறிது அழுகிப்போக விடுவார்கள். அது மிருதுவாகும். மனித இனத்தை தின்னும் வகையினரைப் (Cannibals) பற்றியே அதிகம் நினைக்காதீர்கள். இங்கிலாந்திலும் அதே போன்றுதான் செய்கின்றனர், அவர்கள் நெடுவால் பகட்டு வண்ணக் கோழி வகைகளைக் (Pheasants) கொன்று அதை மரத்தில் தொங்கவிடுகின்றனர், அதன் இறகுகள் கீழே விழ ஆரம்பிக்கும்போது அவைகளை சாப்பிடுகின்றனர். அது ஆங்கிலோ-சாக்ஸன் இனத்து மக்களின் தாய் இனமாகும், அது இங்கிலாந்தின் பழங்குடியினர் - நீங்கள் எண்ண வேண்டாம். நீங்கள் இங்கிலாந்திற்கு செல்லவேண்டாம், நீங்கள் தென் மாநிலங்களுக்கு சென்று அதே காரியத்தை நீங்கள் காணலாம். நிச்சயமாக. எந்த ஒரு மனிதனும் ஒரு நத்தையையோ, அல்லது ஒரு பாம்பையோ, அல்லது ஏதாவதொன்றையோ உண்ண முடியும். ஆம்... 46இப்பொழுது கவனியுங்கள், இதைநான் உங்களுக்கு கூறட்டும். இங்கே நடந்தது இதுதான். கறுப்பர்... கறுப்பர் இனம் இதனுடன் செய்வதற்கு ஒன்றுமில்லை. காயீன்... இப்பொழுது, நீங்கள் கவனிக்க வேண்டுமென்று நான் விரும்புகிறேன். அவர்கள் “அவன் நோத் என்னும் தேசத்திற்கு சென்றான்'' என்றனர். இப்பொழுது, காயீன் ஏதேனில் இருந்தான். ஏதேன் தோட்டம், ஏதேனிற்கு கிழக்கில் இருந்தது. ஏதேனிற்கு கிழக்கு, அது சரியா? கேருபீன்கள் அங்கு வைக்கப்பட்டது, ஜீவ விருட்சம் தோட்டத்தின் கிழக்கு வாசலில் இருந்தது, அங்கே தான் காயீனும் ஆபேலும் தங்கள் பலிகளைச் செலுத்தினர் என்று நான் எண்ணுகிறேன். அங்கே தான் சுடரொளிப் பட்டயத்தை வைத்திருந்த கேரூபின் வாசலின் கிழக்கே இனி மேலுமாய் அவர்களை உள்ளே விடாமல் தடுத்தது! நீங்கள் கவனித்தீர்களா, இயேசு கிழக்கிலிருந்து வருவார். வெளிச்சம் கிழக்கிலிருந்து உதிக்கின்றது. எல்லாம் வருகின்றது... நாகரீகம் கிழக்கில் துவங்கி மேற்கு பிரயாணித்து சுற்றிச் சென்று அதே இடத்தை அடைகின்றது. நாம் நிலவுலக மேற்கு அரைக் கோளத்தில் இருக்கின்றோம். அது கிழக்கு, கிழக்கு பழையான நாகரீகம் ஆகும். வரலாற்று அறிஞர்களுக்கு தெரிந்தவரை சீன நாகரீகம்தான், இன்றைக்கு உலகத்திலேயே மிகவும் பழமையானது. கிழக்கு! 47ஓ, இக்கேள்விகளின் பேரில் மணிக்கணக்கில் நாம் தங்கியிருக்கலாம். ஆனால் நான் மற்றவர்களின் கேள்விகளைப் பார்க்க முடியாது. இங்கே கவனியுங்கள். நாம் காயீனைக் குறித்தும் காயீனுடைய மனைவியார் என்றும், எங்கிருந்தவள் என்றும் நாம் என்ன விசுவாசிக்கிறோம் என்பதை எத்தனைப் பேர் அறிந்து கொள்ள விரும்புகிறீர்கள்? நாம் இப்பொழுது பார்க்கலாம். அது சரி. காயின் என்ன செய்தான் என்பதை நான் கூறுகிறேன், அது தான் சரியான பதிலாக நீங்கள் காணக்கூடும்: காயீன் தன்னுடைய சொந்த சகோதரியையே மணந்தான். அவன் அப்படி செய்ய வேண்டியதாயிற்று, ஏனென்றால் அப்பொழுது பூமியில் ஒரு பெண் மாத்திரமே இருந்தாள்; மூன்று பேர் பிறந்தனர் என்று வேதம் கூறுகின்றது. காம் சேம்... இல்லை... என்னை மன்னிக்கவும், அது காயீன், ஆபேல், சேத் ஆகும். ஆனால் அங்கு யாருமே... ஒரு பெண்ணின் பிறப்பைக் குறித்து வேதம் எப்போதுமே குறித்துக் காட்டுவதில்லை. நீங்கள் அதை அறிவீர்கள். 48இப்பொழுது, இன்றிரவு நான் ஸ்திரீகளைக் குறித்து பேச நிச்சயப்படுகிறேன். ஆனால் பாருங்கள், உலகமானது ஸ்திரீயை வழிபடுகிறது, ஆனால் ஆதியிலிருந்தே ஸ்திரீயானவள் சாத்தானுடைய கருவியாக இருக்கின்றாள். இன்றைக்கு நல்ஒழுக்கம் குன்றிய ஒன்றைத்தான் அவன் சிறந்த கருவியாகப் பெற்றிருக்கிறான். அங்கே உலகத்தில் உள்ள எல்லா திருட்டு வியாபாரக் குழுக்களைக் காட்டிலும் இன்னும் அதிகமான பிரசங்கிகளை அவள் தான் நரகத்திற்கு அனுப்பிவிடுவாள். ஒரு துடுக்கான பெண் தன் வாயின் முனையில் ஒரு சிகரெட்டை வைத்துக் கொண்டு, அதைப் போன்று மயிரை வெட்டிக் கொண்டு, நீண்ட பெரிய கண்மையிட்டுக் கொண்டு மேலும் கீழுமாக கண்ணடித்துக் கொண்டு, சகோதரனே, ஒரு சிறிய... அழகாகக் காணப்படுகின்ற உடலமைப்பைப் பெற்றிருப்பாளானால், அவள் என்ன செய்வாள் என்பதைக் கவனியுங்கள். பிரசங்கியே, நீ இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தினால் மூடிக் கொள்வாயனால் நலமாயிருக்கும். அது சரி. நான் ஒரு மனிதன் என்று, இப்பொழுது நீ எனக்கு ஒன்றும் கூறாதே, நான் அதைக் குறித்து நிறையவே பார்த்துவிட்டேன். இப்பொழுது, இங்கே கவனியுங்கள்; உங்கள் சிந்தையை இயேசு கிறிஸ்துவின் மேல் மையம் கொள்ளச் செய்து, உங்கள் சிந்தனையை தூய்மையாக வைத்திருப்பதுதான் நீங்கள் செய்ய வேண்டிய சிறந்த காரியம் ஆகும். 49பவுல் அங்கே கூறினது போல... பவுல், “அது... ஒரு சகோதரியை கூட்டிக் கொண்டு திரிய எங்களுக்கு அதிகாரம் உண்டென்று நீங்கள் அறிவீர்கள். அதைச் செய்ய எனக்கு அதிகாரம் உண்டு. ஆனால், நான் அதைச் செய்யமாட்டேன்'' என்றான். பாருங்கள், அவன் அதைச் செய்யவில்லை. அவன், ”ஊழியமானது அவர்களுடைய சுவிசேஷம் பிழைக்க வேண்டுமென்பதை நான் அறிவேன், போரடிக்கிற மாட்டை வாய்க்கட்டாயாக,'' என்றான். நாம் பிரசங்கியாயிருப்பதால் நாம் சில சமயங்களில் இவ்வாறு நினைப்பதுண்டு என்று நீங்கள் அறிவீர்கள் (சகோதரனே, அது உங்களையும் என்னையும் குறித்தல்ல), ஆனால் பிரசங்கிமார்கள், தாங்கள் பிரசங்கிகள் என்றும் அவர்கள் சபை அங்கத்தினர்களைக் காட்டிலும் பெரியவர்கள் என்றும் நினைக்கிறார்கள். நீங்கள் பெரியவர்கள் அல்ல, ஒரு மணி நேரத்திற்கு முன்பாக மனம் மாறின குடிகாரனைக் காட்டிலும் தேவனுடைய பார்வையில் நீங்கள் பெரியவர்களும் அல்ல. இதுபோன்ற காரியங்களைத்தான் சீர்திருத்தங்கள் களைந்தெடுக்கவில்லை. “மறைதிரு” என்று நான் என் பெயரை கையொப்பமிடுகிறேன் என்று எனக்குத் தெரியும். அது முற்றிலுமாக இன்றைக்கு ஒரு வழக்கமாக இருக்கின்றது, ஆனால் அவ்விதமாக செய்தல் கூடாது. “மறை திரு”, “பிஷப்”, “டாக்டர்” ஆகிய இவை எல்லாம் மனிதனால் ஏற்படுத்தப்பட்ட பட்டப் பெயர்கள், அவை முட்டாள்தனம்! வேதாகமத்தில் அவைகள் “பேதுரு” “யாக்கோபு'', ”பவுல்'', ''யோவான்“ என்றே இருக்கின்றன. இன்னும் மற்ற எல்லாமும் அவ்வாறே இருக்கின்றன. 50பவுல், “இப்பொழுது, இங்கே, அது எனக்குத் தெரியும். நான் சுவிசேஷத்தைப் பிரசங்கிக்கிறேன். அது அது - அது என்னுடைய கடமை” என்றான். நான் ஒரு பிரசங்கி, அவனும் ஒரு பிரசங்கி, சகோதரன் நெவில் ஒரு பிரசங்கி, ஆனால் அது பிரசங்கியாய் இருப்பது, அது நமது கடமை. நல்லது, நாம் செய்யவேண்டியது அது மாத்திரமே. ''ஆனால் நான் வேறெதாவதைச் செய்யவிடுங்கள்'' என்ற பவுல், “அது அதற்கும் மேலானது”. இப்பொழுது பணத்தை எடுக்க எனக்கு உரிமை உண்டு, நான் தியாகம் செய்ய முடியும் என்று உங்களுக்குக் காண்பிக்க நான் கூடாரத் தொழில் செய்கிறேன். விவாகம் யாவருக்குள்ளும் கனமுள்ளதாயும், விவாகமஞ்சம் அசுசிப்படாததாயும் இருப்பதாக. ஒரு மனிதன் விவாகம் செய்வது நலமாயிருக்கும். விவாகம் செய்து கொள்ள எனக்கு உரிமையுண்டு. இப்பொழுது நான் - நான் விவாகம் செய்து கொள்ள முடியும், விவாகம் செய்து கொள்ள சட்டபூர்வமாக எனக்கு உரிமையுண்டு. ஆனால் நான் விவாகம் செய்து கொள்ளமாட்டேன். கர்த்தருக்கு என்று வேறொரு தியாகத்தை செய்ய நான் விரும்புகிறேன்'' என்றான். பாருங்கள்? பிறகு அவன், ''ஒவ்வொருவனும் தன்னுடைய அழைப்பை அறிந்திருக்கிறான். அவன் செய்ய... சிலர் தேவனுடைய வார்த்தைக்காக அண்ணகர்களாக உள்ளனர், இன்னுமாக...'' என்றான். நமது கடமைக்கு அப்பாலும் ஏதாவதொன்றை செய்ய விரும்புகிறோம். நீங்கள் உண்மையாக தேவனுடைய ஆவியினால் மறுபிறப்பு அடைந்தவராயின், “சபைக்கு செல்வது என் கடமை. அதை நான் செய்ய வேண்டுமென்று நினைக்கிறேன்'' என்று கூறுவீர்களானால், ஓ, என்னே! நல்லது, நான் அதை விட அதிகமாகச் செய்ய விரும்புகிறேன், நான் கிறிஸ்துவிற்கு சில ஆத்துமாக்களை சம்பாதிக்க விரும்புகிறேன். நான் ஏதாவதொன்றைச் செய்யவேண்டும்! நான் பிணியாளிகளைச் சந்தித்து அவருக்கு ஏதாவதொன்றைச் செய்யவேண்டும். அடக்க ஆராதனையில் பிரசங்கிப்பது என்னுடைய கடமை, சுவிசேஷத்தைப் பிரசங்கிப்பது என்னுடைய கடமை, வியாதியஸ்தர்களுக்காக ஜெபிப்பது என்னுடைய கடமை. ஏதாவதொன்றை நான் செய்யட்டும், நான் ஏதாவதொன்றைச் செய்யட்டும், அதன் மூலமாக தேவன் என்னைக் கனப்படுத்தட்டும். 51இப்பொழுது காயினுக்கு திரும்புவோம் (ஒலி நாடாவில் காலி இடம் - ஆசி) தேவனால் சிருஷ்டிக்கப்பட்ட ஒரே ஸ்திரீ ஏவாள் ஆகும், ஆகையால் அவளுக்கு குமாரத்திகள் இல்லாதிருக்கும் பட்சத்தில், அந்த கடைசி பெண், (ஒரே பெண்) மரித்திருப்பாளானால் மானிட இனமே அழிந்து போயிருக்கும். அது சரிதானே? அங்கே இன்னுமாய் பெண்கள் இருந்திருக்க மாட்டார்களே. ஆகையால் அவளுக்கு குமாரத்திகள் இருந்திருக்க வேண்டும். காயீன் தன்னுடைய சொந்த சகோதரியை மணந்தான், அவன் அப்படித்தான் செய்தாக வேண்டும். வேறெந்த வழியிலும் பெண்கள் வந்திருக்க முடியாது. அந்நாட்களில் அது சட்டப் பூர்வமாகவும் நியாயப் பூர்வமாகவும் இருந்தது, ஆபிரகாமுக்கும் சரி, ஈசாக்கிற்கும் சரி. ஈசாக்கு தன்னுடைய சொந்த ரத்தமாகிய மாமன் மகளை மணந்தான். ஆபிரகாம் தன்னுடைய சொந்த ரத்த சம்பந்தப்பட்ட சகோதரியையே மணந்தான். அவன் தகப்பனார். வித்தியாசப்பட்ட தாய்மார்கள், ஆனால் ஒரு தகப்பன். அணு ஆண்பாலிடத்திலிருந்துதான் வருகிறது. சாராள், அற்புதமான ஈசாக்கை பெற்றெடுத்தாள். அது சரியா? அங்கே அப்போது பூமியில் யாரும் இல்லை . அது எல்லாம் நிழலாயிருக்கின்றன, காண்பித்து... இங்கேயிருக்கிறது சகோதரனே! ஈசாக்கு... ரெபெக்காள், சபைக்கு அடையாளமாயிருகின்றாள், ஈசாக்கு மணவாட்டி, கிறிஸ்துவிற்கு நிழலாயிருக்கின்றான். அது சரிதானே? அவர்கள் இரத்த சம்பந்தமான உறவு கொண்டவர்களாய் இருத்தல் வேண்டும்! அல்லேலுயா! ஆமென்! இரத்த சம்பந்தமான உறவு! 52ஆகையால் காயீன் தன் சகோதரியை விவாகம் செய்தான், அது... பிறகு அவர்கள் நோத் தேசத்திற்குச் சென்றார்கள். இப்பொழுது, தொடர்ந்து செல்வோமானால், நாம் ஒரு ஆழமான பொருளிற்குச் செல்வோம், நீங்கள் இன்னும் அதற்கு மேல் கேட்காததற்கு நான் மகிழ்ச்சியுறுகிறேன். (அந்த தேசத்தில் இருந்த ராட்சதர்கள் எங்கேயிருந்தனர்? போன்றவைகள். ஜோசபஸும் மற்றவரும் அதைக் குறித்து நிறைய விவாதித்தனர்) ஆமென்! சகோதரனே, அதை நான் சரியாக எடுக்கவில்லையெனில், ஞாயிறு காலையில் மறுபடியுமாக அதை என் கையில் கொடுங்கள். அது சரி. 53கேள்வி: ஞாயிறு வாரத்தின் முதல் நாள், சனிக்கிழமை ஏழாவது நாள் இதை நீர் விளக்க முடியுமா? வாரத்தின் முதல் நாளான ஞாயிற்று கிழமையில் கிறிஸ்தவர்கள் சபைக்குச் செல்கின்றனர். வாரத்தின் ஏழாம் நாளான சனிக்கிழமையில் அவர்கள் செல்ல வேண்டுமல்லவா? நல்லது, இப்பொழுது அருமை நண்பரே, இதைக் கேட்ட எவராயினும், இது ஒரு அருமையான கேள்வி. இது ஆயிரக்கணக்கான மாணவர்கள் மத்தியில் விவாதிக்கப்படும் ஒரு பழைய கேள்வியாகும். ஆனால் இன்றிரவில் இதைக் குறித்த என்னுடைய கருத்தை நான் கூறட்டும். நீங்கள் பாருங்கள், அதைத்தான் என்னால் செய்யகூடும். நான் சரியாயில்லையெனில், நல்லது, நீங்கள் என்னுடனே பொறுத்துக் கொள்ளுங்கள்; தேவன் என்னை மன்னிப்பாராக, நீங்கள் பாருங்கள் நான் - நான் அதைத் தவறுபடுத்துவேனானால்... 54இப்பொழுது நியாயப்பிரமாணத்தைப் பொறுத்த வரையில்... இப்பொழுது, அநேகமாக ஒரு ஏழாம் நாள்ஆசாரிப்புக் கூட்டத்தைச் சேர்ந்த ஒரு நபர் இங்கு அமர்ந்திருக்கிறார். நானும் முதன்முதலாக ஏழாம் நாள் ஆசாரிப்புக் கொள்கையை படித்திருந்தேன். அது சரி. ஏழாம் நாள் ஆசாரிப்புக் காரியத்தைத்தான் நான் முதலாவதாகப் படித்திருந்தேன். ''சனிக்கிழமை தான் ஏழாம் நாள்'' என்று என்னிடம் கூறினார்கள், சகோதரனே, அது யூத மாத அட்டவணையின் படியாக இருந்தது. ரோமகால அட்டவணை அதனுடன் பொருந்தவில்லை, ஆகையால் உண்மையாகவே சனிக்கிழமை ஞாயிற்றுக் கிழமையாக இருக்க வேண்டியதாயிற்று. நல்லது, நான் சரியென்று நினைத்திருந்த ஒன்றை அவர்கள் என்னிடம் அளித்திருந்தனர். அவர்களது ஏட்டுச் சுவடிகளை நான் சில காலம் படித்துக் கொண்டிருந்தவரை அது சரி என்று நான் எண்ணியிருந்தேன், நூறு சதவீதம், ஆனால் ஒரு நாள் வேதத்தைக் கையில் எடுத்தபோது, வித்தியாசமாக இருப்பதை நான் கண்டேன். பாருங்கள்? இப்பொழுது, வாரச் சக்கரத்தை, சுழற்சியைப் பொருத்தவரை சனிக்கிழமை ஓய்வு நாளாக இருக்கின்றது. இப்பொழுது, நமக்கு தெரியாது. அது மாற்றப்பட்டுள்ளது, நீங்கள் அறியக் கூடாத நிறைய மாற்றங்கள் நமக்கு நிகழ்ந்துள்ளது. பாருங்கள்? ஏனென்றால்... இப்பொழுது, யூதர்கள் கூறுகிறார்கள் நாம் இப்பொழுது. இப்பொழுது அவர்களுடைய அட்டவணைச் சுழற்சிப் பிரகாரமாக நாம் சரியாக 1970-ல் இருக்கிறோம். ரோம கால அட்டவணை 1953 என்று காட்டுகின்றது. அதை எங்கோ கொண்டு செல்கின்ற வேறொரு கால அட்டவணை அவர்கள் வைத்துள்ளனர். ஆனால் அதுதான் கிறிஸ்துவ மதத்திற்கு சரியான ஆதாரத்தைக் காட்டுகின்றது, எல்லாம் கிறிஸ்துவின் பிறப்பை ஒட்டி அமைந்துள்ளது. நீங்கள் பாருங்கள், அங்கேயிருந்துதான் நாம் எடுக்கின்றோம். 55இப்பொழுது, ஏழாம் நாளாய் இருக்கும் பட்சத்தில், “அங்கே அநேக பெந்தெகோஸ்தே மக்கள் ஓய்வு நாளை மிகத் தீவிரமாக ஆசரிக்கின்றனர், சனிக்கிழமையை ஓய்வு நாளாக வைத்திருக்கின்றனர். இப்பொழுது அவர்கள் ஞாயிற்றுக் கிழமையை ஓய்வு நாளாக வைத்திருக்க வேண்டுமென்று வேதத்தில் ஒரு வார்த்தை கூட இல்லை'' என்று கூறுகின்றனர். இப்பொழுது, புதிய ஏற்பாட்டில் ஓய்வு நாளைக் குறித்தும் அதையே நான் கூறுவேன், பாருங்கள்? இப்பொழுது, சனிக்கிழமை, யூதர்களுக்கு கொடுக்கப்பட்ட ஓய்வு நாளாய் இருந்தது. இப்பொழுது, இடைப்பட்ட வேளையில் அது கொடுக்கப்பட்டது. இப்பொழுது, இது வேறு கேள்வி கேட்கப்படவிழைகின்றதாய் இருக்கின்றது. ஆனால் இப்பொழுது கவனியுங்கள். தேவன் ஏழாம் நாளிலே ஓய்ந்திருந்தபோது, வேதத்தைப் பொருத்த வரையில் சுமார் ஆயிரத்து ஐந்நூறு ஆண்டுகளாக ஏழாவது நாளானது கடைபிடிக்கப்படவில்லை. ஆகவே வனாந்திரத்தில் இஸ்ரவேலிற்கு தேவன் ஏழாவது நாளை ஒரு அடையாளமாக அளித்தார், தேவனுக்கும்... 56ஆகவே தேவன் ஏழாம் நாளிலே ஓய்திருந்தார், அவருடைய ஓய்வு நாளின் ஞாபகச் சின்னம் (memorial). நான் அதை ஏன் கூறுகிறேனென்றால் இந்தக் கேள்வியைக் கேட்ட ஏழாம் நாள் ஆசரிப்பு கூட்டத்தின் சகோதரனோ அல்லது சகோதரிக்கு இது ஏதுவாயிருக்கும், அவர்கள் ஒரு அருமையான சபையை வைத்திருக்கின்றனர். ஆகவே இப்பொழுது கவனியுங்கள், இந்த கேள்வியின் பேரில் அவர்களுடன் இது சிறிதளவு வேறுபடுகின்றது. தேவன் ஏழாம் நாளை பரிசுத்தமாக்கினார். ஆறு நாட்கள் மனிதனுடையதாய் இருந்தது. ஏழாம் நாள் தேவனுடைய ஓய்வு நாளாய் இருந்தது, அது ஆயிர வருட அரசாட்சிக்கு நிழலாய் இருக்கின்றது. இப்பொழுது இது எப்படி பொருந்துகின்றது என்பதைக் கவனியுங்கள். இயேசு பூமியில் வந்தபொழுது, அவர் ஓய்வுநாளைக் கைக்கொள்ளவில்லை என்று சிலுவையில் அறைந்தார்கள்; இரண்டு குற்றச் சாட்டுகள்தான் இயேசுவின் மீது கூறப்பட்டன. அது என்னவென்றால் “அவர் ஓய்வு நாள் ஆசரிப்பை மீறினார், தம்மை தேவனாக்கிக் கொண்டார்” என்பதே. அவர் தாம் ஓய்வு நாளின் தேவன் என்று கூறினார், அவர்... அவர் தேவனின் ஓய்வு நாளும் கூட, அவர் தேவன். ஆகவே அவர் மேல் குற்றம் சுமத்த அவர்களால் முடியாதிருந்தது. 57இப்பொழுது, நீங்கள் எந்த நாளை வைத்திருக்க வேண்டும் என்று இதை நான் உங்களுக்குத் தெளிவாக்கட்டும், நான் இதை உங்கள் நன்மைகென்று கேட்கிறேன். அதைக் குறித்த வேதவாக்கியம் உள்ளதா? கேள்வி: சகோதரன். பிரான்ஹாம், யூதர்கள் சனிக்கிழமையை வைத்திருப்பது போல நாம் ஞாயிற்றுக் கிழமையை ஆசரிக்க வேண்டும் என்று நமக்கு கூறும் வேதவாக்கியம் ஏதாகிலும் உண்டா? இல்லை, ஐயா, அவ்வாறு இல்லை. வேதத்தில் ஒரு வசனம் கூட இல்லை, சனிக்கிழமையா அல்லது ஞாயிற்றுக் கிழமையா என்று நமக்கு புதிய ஏற்பாட்டில் ஒன்றும் இல்லை. ஆனால் நாம் ஞாயிற்றுக் கிழமையை ஆசரிக்கும் காரணம் என்னவென்றால் அது உயிர்த்தெழுதலின் நினைவுச் சின்னமாக உள்ளது. வேறொன்றுமில்லை... ''ரோமன் கத்தோலிக்க சபை அதைச் செய்தது'' என்று இப்பொழுது நீங்கள் கூறப் போகிறீர்கள். அவர்கள் அதைச் செய்ததாக உரிமை கோருகிறார்கள், அப்படி அவர்கள் செய்திருப்பார்களானால், பரிசுத்த பவுல் ரோமன் கத்தோலிக்கனாயிருப்பான், அவ்வாறே பேதுரு, யோவான், யாக்கோபும் மற்ற அனைவரும் இருந்திருக்க வேண்டும். ஏனென்றால் அவர்கள் வாரத்தின் முதல் நாளிலே ஆராதிக்க கூடினார்கள். ஆகையால், சரித்திர ஆராய்ச்சியாளர்களைப் பொருத்தவரையில் ஒரு கிறிஸ்தவ யூதனுக்கும், வைதீக யூதனுக்கும் உள்ள வித்தியாசம் என்னவெனில் (இருவரும் ஒரே ஜெப ஆலயத்திற்கு சென்றனர்). ஒருவன் சனிக்கிழமை சென்றான் (இயேசுவின் உயிர்த்தெழுதலை மறுதலிப்பவன்) வேறொருவன் ஞாயிற்றுக் கிழமையன்று செல்வான் (இயேசு மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்தார் என்று விசுவாசிப்பவன்) அதுதான் முத்திரை. அது அவ்வாறே இருக்கவேண்டும், அது இன்னும் ஒரு முத்திரையாயிருக்கிறது, அது மிருகத்தின் முத்திரையாக வெளி வரலாம். 58இப்பொழுது அதை எனக்கு... ஏழாம் நாள் ஆசாரிப்பு கூட்ட சகோதரர் அதுதான் தேவனுடைய முத்திரை என்று எண்ணுகிறதாக நான் கேள்விப்பட்டேன். அவர்கள், ''நீ ஓய்வு நாளை கைகொள்வதன் மூலம் முத்தரிக்கப்படுகிறாய்'' என்று கூறுகின்றனர். அவ்வாறு வேதாகமம் கூறுகிறதாக ஒரு வேதவாக்கியம் கூட கிடையாது. நீங்கள் முத்தரிக்கப்பட்டதாக கூறும் ஒரு வேதவாக்கியம் இங்கே உள்ளது. எபேசியர் 4:30, “அன்றியும் நீங்கள் மீட்கப்படும் நாளுக்கென்று முத்திரையாகப் பெற்ற தேவனுடைய பரிசுத்த ஆவியை துக்கப்படுத்தாதிருங்கள்” என்று கூறுகிறது, பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானம். பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானம் தான் தேவனுடைய முத்திரை என்பதை நான் இப்பொழுது உங்களுக்கு நிரூபிப்பேன். பாருங்கள்? அதுதான் ஆவியின் ஞானஸ்நானம், அதுதான் தேவனுடைய முத்திரையாகும். இப்பொழுது, ஏசாயா 28-ல் அவர், ''கற்பனையின் மேல் கற்பனையும், பிரமாணத்தின் மேல் பிரமாணமும், இங்கே கொஞ்சமும், அங்கே கொஞ்சமும்,'' என்று கூறினார். 59இப்பொழுது என் அன்பு நண்பனே, இப்பொழுது கவனியுங்கள். இப்பொழுது, தங்கள் வேலைகளை விட்டுவிடுபவர்கள்... பாருங்கள், மனிதர் தங்களைத் தாங்களே இரட்சித்துக் கொள்ளும்படி ஏதோவொன்றைக் கண்டுபிடிக்க முயற்சித்துக் கொண்டுள்ளனர். அதைக் குறித்துச் செய்யும்படியாக உங்களால் கூடுமான காரியம் ஒன்றுமில்லை. நீங்கள் கிருபையினால் இரட்சிக்கப்பட்டீர்கள். உங்களை அழைப்பவரும் தேவனே, உங்களை இரட்சிக்கிறவரும் தேவனே. நீங்கள் தேவனுடைய அடிச்சுவடுகளை மாத்திரம் பின்பற்றுகிறீர்கள், அவ்வளவே. உங்களால் ஒன்றும் கூறமுடியாது. அதுதான் மனிதனின் சுபாவமாகும். அவர்கள் மாம்சம் புசிப்பதை நிறுத்த முயற்சிக்கின்றனர், ஓய்வு நாட்களை ஆசரிக்க முயற்சிக்கின்றனர், ''நீ இதை விட்டுவிட்டால்'' என்கின்றனர். அது நீங்கள் மாம்சம் புசியாதிருப்பதால் இரட்சிக்கப்படவில்லை. நீங்கள் இதனால், அதனால் அல்லது அந்த மற்றதால் இரட்சிக்கப்படவில்லை. நீங்கள் கிருபையால் இரட்சிக்கப்பட்டீர்கள். தேவன் தமது கிருபையால் அந்த மாம்சத்தை, நித்திய ஜீவனை அளிக்கிறார். நான் என்ன கருதுகிறேன் என்று நீங்கள் காண்கிறீர்களா? நித்திய ஜீவன்தான் பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானம் ஆகும். 60இதை நான் உங்களுக்குக் காண்பிக்கட்டும். ஓய்வு நாள் (Sabbath) என்னும் வார்த்தையின் அர்த்தம் என்ன? தெரிந்தவர்கள் யாராவது ஒருவர் உங்கள் கைகளை உயர்த்துங்கள்? ஓய்வு நாள், (Sabbath?) (ஒரு சகோதரி ''இளைப்பாறுதல்“ என்கிறார்கள் -ஆசி) இளைப்பாறுதல். சரியாக. ஓ-ய்-வு-நா-ள். S-a-b-b-a-t-h, ஓய்வு நாள் என்றால் ”இ-ளை-ப்-பா-று-த-ல்“ R-e-s-t, ஓய்வு நாள். உங்கள் வேதத்தை எடுத்து ஓரக் குறிப்பில் ''இளைப்பாறுதல்'' நாள் என்ன என்பதை சிறிது பாருங்கள். இப்பொழுது நாம் விரைவாக எபிரெயர் 4-ஆம் அதிகாரத்திற்கு செல்வோம். நாம்... இது என்னுடைய கடைசி கேள்வி. சகோதரன் நெவில் சிலவற்றை அங்கு வைத்துள்ளார். சில கேள்விகள் சுருக்கமானவை என்று எனக்குத் தெரியும். ஆகையால் உங்களை நான் நீண்ட நேரம் வைத்திருக்க மாட்டேன். நான் அவைகளை எடுக்கும் வரையில் சற்று பொறுத்துக் கொள்ளுங்கள். இப்பொழுது இளைப்பாறுதல் என்ற வார்த்தையை நீங்கள் காணும் போது அதன் அர்த்தம் ஓய்வு நாள் (Sabbath) என்று அறிவீர்கள். இப்பொழுது புதிய ஏற்பாட்டில் இங்கே, இயேசு பரிசுத்த மத்தேயு 5-ஆம் அதிகாரத்தில் இவ்வாறு ஆரம்பிக்கின்றார். ''விபசாரஞ் செய்யாதிருப்பாயாக என்பது பூர்வத்தாருக்கு உரைக்கப்பட்டதென்று கேள்விப்பட்டிருக்கிறீர்கள்'' அது என்ன? நியாயப்பிரமாணம், கட்டளைகள். “நான் உங்களுக்குச் சொல்லுகிறேன். ஒரு ஸ்திரீயை இச்சையோடு பார்க்கிற எவனும் அவர் அதை மாற்றினார், அப்படித்தானே? ''பூர்வத்தாருக்கு உரைக்கப்பட்டதென்று கேள்விப்பட்டிருக்கிறீர்கள், நீங்கள் கொலை செய்யக்கூடாது”, ஆனால் நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்!''அதை மாற்றினார், மாற்றினார் அல்லவா? (அவர் பிரமாணத்தை மாற்றவில்லையா?) அது சரி. அவர், ''நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; தன் சகோதானை நியாயமில்லாமல் கோபித்துக் கொள்பவன் கொலைபாதகத்திற்கு உள்ளவனாயிருக்கிறான்'' என்றார். அது ஒருபோதும் பழைய ஏற்பாட்டில் இல்லை, அது புதிய ஏற்பாடு. அவர் அதற்கு மேலாகக் கடந்து சென்றார். பாருங்கள்? அவர் மேற்சென்று அந்த கட்டளைகளைக் கொடுத்தார். ஆனால் அவர் நான்காவதைக் கடந்தார், அதை விட்டுவிட்டார். அதுதான் ஏழாவது நாளாய் இருந்தது. இப்பொழுது இங்கே 7-ஆம் அதிகாரத்தில்... 61அவர் மலைப் பிரசங்கத்தில் கூறினவைகள் இதோ இங்கிருக்கின்றன. அவர், ''இதைச் செய், இதை நீ செய்யாதே“, என்று பழைய காலத்தில் கூறப்பட்டதை நீங்கள் கேட்டிருப்பீர்கள், ''நான் உங்களுக்கு வித்தியாசமானதைக் கூறுகிறேன் என்றார். ''பல்லுக்கு பல், கண்ணுக்கு கண்'' என்று அவர்கள் கூறுகிறதைக் கேட்டிருக்கிறீர்கள், ”ஆனால் நான் உங்களுக்குச் சொல்லுகிறதாவது! அவர்கள் வித்தியாசமாகக் கூறினதைக் கேட்டிருக்கிறீர்கள், ஆனால் நான் உங்களுக்குச் சொல்லுகிறதாவது...'' எல்லாவற்றிற்கும் பிறகு கடைசியாக, அவர் நான்காவது கட்டளையை விட்டுவிட்டார், அது என்னவென்றால் “ஓய்வுநாளை பரிசுத்தமாய் ஆசரிக்க நினைப்பாயாக'' என்பதாகும். இப்பொழுது அவர் கூறினார். வருத்தப்பட்டு பாரஞ்சுமக்கிறவர்களே! நீங்கள் எல்லோரும் என்னிடத்தில் வாருங்கள். நான் உங்கள் ஆத்துமாவிற்கு இளைப்பாறுதல் தருவேன்''. 62இப்பொழுது கவனியுங்கள், ''விபசாரம் செய்கிறவர்கள் கல்லெறியப்பட வேண்டும்,'' அவர்கள் விபசாரம் செய்வதாக சரியாகக் கண்டுபிடிக்கப்பட வேண்டும். அது சரிதானே? அது சரீரப்பூர்வமாக செய்யப்பட வேண்டும். ''கொலை செய்கிறவர்கள்'', அவன் ஒரு கொலைகாரனாக இருக்கவேண்டும். ஆனால் இயேசு, “ஒரு ஸ்திரீயை இச்சையோடு பார்க்கிற எவனும்” என்றார், அவனுடைய ஆத்துமாவும், ஆவியும் - இப்பொழுது சரீரத்தில் அல்ல. அவன் ஆத்துமா மீட்கப்பட்டது, அப்பொழுது அவ்வாறே இருக்கவில்லை; அது (நியாயப்பிரமாணம் - தமிழாக்கியோன்) ஒரு பள்ளிக்கூட ஆசிரியரைப்போல, பாருங்கள், நியாயப்பிரமாணம். இப்பொழுது அவர், ஒரு ஸ்திரீயை இச்சையோடு பார்க்கிற எவனும் தன் இருதயத்தில் ஏற்கனவே அவளோடே விபசாரஞ் செய்தாயிற்று'' என்றார். இப்பொழுது அவர், ''கொலை செய்யாதிருப்பாயாக என்று அவர்கள் கூறினதைக் கேட்டிருக்கிறீர்கள், ஆனால் நான் கூறுகிறேன், தன் சகோதரனை நியாயமில்லாமல் கோபித்துக் கொள்ளுகிறவன் ஏற்கெனவே கொலைபாதகத்துக்கு உள்ளவனாயிருக்கிறான்“ என்று கூறினார். 63இப்பொழுது அவர் ஓய்வு நாளைக் குறித்து வேறு வார்த்தைகளில் கூறுகிறார், அவர் கூறினார். வருத்தப்பட்டுப் பாரஞ்சுமக்கிறவர்களே! நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள். நான் உங்கள் ஆத்துமாக்களுக்கு இளைப்பாறுதல் (rest) தருவேன், உங்கள் ஆத்துமாக்களுக்கு ஓய்வுநாள். (உங்கள் சரீரத்திற்கு அல்ல, உங்கள் ஆத்துமாவிற்கு) இப்பொழுது கேளுங்கள் - பவுலிற்கு செவி கொடுங்கள். உங்களால் சற்று முடிந்தால்... இப்பொழுது கவனியுங்கள், இங்கும் மற்ற எல்லா இடத்திலும், இங்கேயும் கூட உஷ்ணமாய் உள்ளது. ஆனால் இப்பொழுது, இதை சரிபடுத்திக் கொள்ள மிக கவனமாகக் கேளுங்கள். இப்பொழுது பவுல், எபிரெயருக்கு எழுதுகிறான். அந்த எபிரெயர்கள் யார்? பதில் கூறுங்கள். யூதர்கள். அது சரிதானே? இப்பொழுது, அவர்கள் பிரமாணத்தைக் கைக் கொண்டவர்கள், ஓய்வு நாளைக் கைக்கொண்டவர்கள். அது சரியா? சகோதரனே, பிரசங்கியே, அது சரி தானே? அவர்கள் ஓய்வு நாளைக் கைக்கொண்டவர்கள், அவர்கள் நியாயப்பிரமாணத்தைக் கைக்கொண்டவர்கள், அது சரி. இப்பொழுது, பவுல் யூதர்களுக்கு நியாயப்பிரமாணம் எதற்கு நிழலாக இருந்தது என்று நிழல்களாகவும், அடையாளமாகவும், காண்பிக்கின்றான். ''நியாயப்பிரமாணமானது வரப்போகிற நன்மைகளின் நிழலாய் மாத்திரம் இருக்கிறபடியால்“ என்று கூறி, ஓரிடத்தில் இன்னும் மேலே சென்று அது சந்திரனும் சூரியனும் போல என்று அங்கே விளக்குகிறான். வேறொரு நாட்டின் மீது அல்லது வேறொரு உலகத்தின் மீது பிரகாசிக்கும் சூரியனின் ஒரு நிழல் தான் சந்திரன், அது இங்கே பிரதிபலிக்கின்றது. இப்பொழுது... ஆனால் எபிரெயர் 9, 64இப்பொழுது கவனியுங்கள் எபிரெயர் 4-ல் அவர் ஓய்வுநாள் ஆய்வுப் பொருளிற்கு வருகிறார். இப்பொழுது பாருங்கள். ஆனபடியினாலே, அவருடைய இளைப்பாறுதலில் பிரவேசிப்பதற்கேதுவான வாக்குத்தத்தம் நமக்குண்டாயிருக்க... இப்பொழுது, பவுல் ஓய்வு நாளை ஆசரிக்கிற, கைக்கொள்ளுகின்ற மக்களிடையே பேசுகின்றான். வேறு விதத்தில் கூறுவோமானால், “ஆனபடியினாலே, அவருடைய இளைப்பாறுதலில் பிரவேசிப்பதற்கேதுவான வாக்குத்தத்தம் நமக்குண்டாயிருக்க... பயந்திருக்கக் கடவோம்'', அல்லது நீங்கள் வேதத்தில் உள்ள குறிப்புகளை கவனித்தீர்களானால், என்னுடைய ஸ்கோ .ஃபில்ட் (Scoffield) வேதாகமத்தில் ''ஜே” (J) என்றிருக்கிறது, அது ஒரு “ஓய்வு நாளைக் கைகொள்ளுதல் பாருங்கள்?” அது சரி. ஆனபடியினாலே, அவருடைய இளைப்பாறுதலில் பிரவேசிப்பதற்கான வாக்குத்தத்தம் நமக்குண்டாயிருக்க பின்வாங்கிப் போனவனாக காணப்படாதபடிக்கு பயந்திருக்க கடவோம். ஏனெனில் சுவிசேஷம் அவர்களுக்கு அறிவிக்கப்பட்டது போல நமக்கும் அறிவிக்கப்பட்டது; (அங்கே நியாயப் பிரமாணத்தின்) கேட்டவர்கள் விசுவாசமில்லாமல் கேட்டபடியினால், அவர்கள் கேட்ட வசனம் அவர்களுக்குப் பிரயோஜனப்படவில்லை. இப்பொழுது, அது நியாயப்பிரமாணத்தின் கீழிருந்த நாள் ஆகும். அவர்கள் விசுவாசத்தைப் பெற்றிருக்கவில்லை. ஏனெனில் அதை எழுப்ப எந்த அடிப்படையும் இல்லை. இப்பொழுது அவருடைய “இளைப்பாறுதல்”. இப்பொழுது, “அவருடைய” அது கிறிஸ்துவின் இளைப்பாறுதல். சரி, அவருடைய இளைப்பாறுதல் அவருடைய “ஓய்வு”. நான் ஒவ்வொரு முறையும் இளைப்பாறுதல் (“Rest”) என்று அங்கு எழுதப்பட்டுள்ளபடி நான் உபயோகப்படுத்துவதற்குப் பதிலாக, ஒரு நாளை ஆசரிப்பது என்ன என்பதை நீங்கள் புரிந்து கொள்ளும்படியாக “ஓய்வு” என்னும் பதத்தை உபயோகப்படுத்தப் போகிறேன். விசுவாசித்தவர்களாகிய நாமோ அந்த ஓய்வில், இளைப்பாறுதலில் பிரவேசிக்கிறோம்; அவருடைய கிரியைகள் உலகத் தோற்றமுதல் முடிந்திருந்தும்: இவர்கள் என்னுடைய இளைப்பாறுதலில் பிரவேசிப்பதில்லையென்று என்னுடைய கோபத்திலே...?... ஆணையிட்டேன் என்றார். (இப்பொழுது, பரிசுத்தமாக்கப்பட்ட நாளைக் குறித்து பவுலின் செய்தியைக் கவனியுங்கள்) மேலும், தேவன் தம்முடைய கிரியைகளையெல்லாம் முடித்து ஏழாம் நாளிலே இளைப்பாறுதல் அல்லது ஓய்வு... (அது சரியா? நான் அதை அங்கு குறிப்பிட விரும்புகிறேன், பாருங்கள்) மேலும், தேவன் தம்முடைய கிரியைகளையெல்லாம் முடித்து ஏழாம் நாளிலே இளைப்பாறுதல் என்று ஏழாம் நாளைக் குறித்து ஓரிடத்தில் (நியாயப் பிரமாணத்தில்) சொல்லியிருக்கிறார். 65அதுதான் அவருடைய ஏழாவது நாளாகும். இப்பொழுது, தேவன் அவர்களுக்கு அந்த நாளை கொடுத்தார் என்று பவுல் ஒப்புக் கொள்ளுகிறான். அதுதான் அந்த ஏழாவது நாளாகும். தேவன் ஏழாம் நாளை ஓய்வாக்கினார், அதை அவர் ஆசீர்வதித்தார், அதைத் பரிசுத்தப்படுத்தினார். அதைப் பரிசுத்தமாக்கினார், அதை ஒரு இளைப்பாறும் நாளாக்கினார். தேவன் தம்முடைய கிரியைகளெல்லாம் முடித்து, ஓய்ந்திருந்தார். அன்றியும், அவர்கள் என்னுடைய இளைப்பாறுதலில் பிரவேசிப்பதில்லை என்றும் அந்த இடத்திலேதானே சொல்லியிருக்கிறார். (இயேசு பேசிக் கொண்டிருக்கிறார்). இப்பொழுது, வேறொரு ஓய்வு எங்கோ இருக்கின்றது. அது எங்குள்ளது? இப்பொழுது, ''தேவனுடைய இளைப்பாறுதல்“ (”God's Rest“) அது ஏழாவது நாள் என்பதை நீங்கள் இங்கே ஞாபகங்கொள்ளுங்கள். பவுல், ''அவர்கள் அதை ஒரு குறிப்பிட்ட இடத்தில் பெற்றிருந்தனர்”, என்று கூறுகிறான். ஆனால் அவன் மறுபடியும் இங்கே, “அவர்கள் என்னுடைய இளைப்பாறுதலில் (My Rest) பிரவேசிப்பார்களானால்'' என்று கூறுகிறான் - மத்தேயுவில் இயேசுவைப் பற்றி பேசுகின்றதே, சரியாக அதுவே. ஆகையால், சிலர் அதில் பிரவேசிப்பது இன்னும் வரப்போகிற காரியமாயிருக்கிறபடியினாலும், சுவிசேஷத்தை முதலாவது கேட்டவர்கள் கீழ்ப்படியாமையினாலே அதில் பிரவேசியாமற் போனபடியினாலும், மறுபடியும். இப்பொழுது கூர்ந்து கவனியுங்கள். கவனிக்கின்ற அனைவரும் ஆமென் என்று கூறுங்கள் (சபையார் “ஆமென்” என்கிறார்கள் - ஆசி ) கவனியுங்கள்: மறுபடியும், வெகு காலத்திற்குப்பின்... அவர் இங்கே ஒரு நாளைக் குறித்திருக்கிறார். அது என்ன? நீங்கள் எல்லாரும் அதை அப்படியே கூறுங்கள். ஓய்வுநாள்! அது சரியா? அவர், இங்கே, இந்த இடத்தில், வாரத்தின் ஏழாவது நாளை ஓய்வு நாள் என்று குறித்தார். இன்று அவருடைய சத்தத்தைக் கேட்பீர்களாகில் உங்கள் இருதயங்களைக் கடினப்படுத்தாதிருங்கள் என்று வெகு காலத்திற்குப் பின்பு தாவீதின் (சங்கீதத்தில்), சங்கீதத்திலே சொல்லியிருக்கிறபடி, (இயேசு வருவது, நீங்கள் பாருங்கள் அவரது முதலாம் வருகை) இன்று என்று சொல்வதினாலே பின்னும் ஒரு நாளைக் குறித்திருக்கிறார். (வேறொரு வருகை வரவிருக்கின்றது: சரீரப் பிரகாரமானதல்ல, ஆவிக்குரியது) 66இப்பொழுது, கவனியுங்கள், “ஆகையால், நாங்கள் ஏழாவது நாளையும் பெற்றுள்ளோம்'' என்று நீங்கள் கூறலாம். இப்பொழுது, ஒரு நிமிடம் பொறுத்திருப்போம். நாம் அடுத்த வசனத்தை வாசிப்போம். பாருங்கள், நாம் அதை மிக வேகமாகப் படிக்க வேண்டாம். சரி. யோசுவா (ஆங்கில வேதாகமத்தில் 'இயேசு' என்றுள்ளது) அவர்களை இளைப்பாறுதலுக்குட்படுத்தியிருந்தால், இளைப்பாறும் நாள், இளைப்பாறுதல் பின்பு அவர் பிறகு வேறொரு நாளைக் குறித்துச் சொல்லியிருக்க மாட்டாரே அவர் நியாயப்பிரமாணத்தை மாற்றியபோது, நியாயப்பிரமாணத்திலிருந்து கிருபைக்கு மாற்றியபோது, அவர்களுக்கு இளைப்பாற ஒரு நாளை, இளைப்பாறும் நாளை, ஒரு குறிப்பிட்ட நாளை அவர் அளிக்காமல் இருந்திருப்பாரா? ஆனால் அவரோ ஒய்வு நாளைக் குறித்து ஒன்றுமே கூறவில்லை. அவர் ஞாயிற்றுக்கிழமையைக் குறித்து ஒன்றும் கூறவில்லை. அவர் சனிக்கிழமையைக் குறித்தும் ஒன்றுமே கூறவில்லை. ஆனால் அவர் கூறியது இதோ இங்குள்ளது, என்று பவுல் கூறுகிறான். இப்பொழுது கவனியுங்கள். ''அங்கே...“ 19-வது வசனம்... அல்லது 9-வது வசனம். ஆகையால், தேவனுடைய ஜனங்களுக்கு இளைப்பாறுகிற காலம் இனி வருகிறதாயிருக்கிறது. (அது இந்த நாள்)... வரவிருக்கிறது... தேவனுடைய ஜனங்களுக்கு இளைப்பாறுகிற காலம். ஏனெனில், அவருடைய (“வருத்தப்பட்டுபாரம் சுமக்கிறவர்களே, நீங்கள் என்னிடத்தில் வாருங்கள், நான் உங்களுக்கு இளைப்பாறுதலைத் தருவேன்'' - இயேசுவின் இளைப்பாறுதல்) இளைப்பாறுதலில் பிரவேசித்தவன் (நீங்கள் அல்லது நான்), தேவன் தம்முடைய கிரியைகளை முடித்து ஓய்ந்தது போல, தானும் (நீங்கள் அல்லது நான்) தன் கிரியைகளை முடித்து ஓய்ந்திருப்பான். ஆமென்! இதோ உங்கள் ஓய்வு. அது சரியா? ஆகையால், அந்தத் திருஷ்டாந்தத்தின்படி, ஒருவனாகிலும் கீழ்ப்படியாமையினாலே (நாட்கள், மற்றவை பாருங்கள்) விழுந்து போகாதபடிக்கு, நாம் இந்த இளைப்பாறுதலில் பிரவேசிக்க ஜாக்கிரதையாயிருக்கக் கடவோம். (பவுல் கூறினான்) தேவனுடைய வார்த்தையானது ஜீவனும் வல்லமையும் உள்ளதாயும், இருபுறமும் கருக்குள்ள எந்தப் பட்டயத்திலும் கருக்கானதாயும், ஆத்துமாவையும் ஆவியையும், கணுக்களையும் ஊனையும் பிரிக்கத்தக்கதாக உருவக் குத்துகிறதாயும், இருதயத்தின் நினைவுகளையும் யோசனைகளையும் வகையறுக்கிறதாயும் இருக்கிறது. அவருடைய பார்வைக்கு மறைவான சிருஷ்டி ஒன்றுமில்லை; சகலமும் அவருடைய கண்களுக்கு முன்பாக நிர்வாணமாயும் வெளியரங்கமாயுமிருக்கிறது, அவருக்கே நாம் கணக்கு ஒப்புவிக்க வேண்டும். 67இப்பொழுது, கவனியுங்கள், தேவன் ஏழாம் நாளில் ஓய்ந்திருந்தார். அவர் ஏழாம் நாளைச் சிருஷ்டித்து, அதை நினைவு கூரும்படியாய் யூதருக்கு அளித்தார். பாருங்கள், நான் இப்பொழுது பவுல் பேசினதைக் கூறிக் கொண்டிருக்கிறேன். அதைக் கேளுங்கள். இப்பொழுது, அவன் அதைக் கொண்டு வருகிறான் என்று நீங்கள் நினைக்கிறீர்களா? அவனுக்கு உரிமையுண்டு என்று நீங்கள் எண்ணுகிறீர்களா? இப்பொழுது, அவன் கலாத்தியர் 1:8-ல் கூறியது என்ன? நாங்கள் உங்களுக்குப் பிரசங்கித்த சுவிசேஷத்தையல்லாமல், நாங்களாவது வானத்திலிருந்து வருகிற ஒரு தாதனாவது, வேறொரு சுவிசேஷத்தை உங்களுக்குப் பிரசங்கித்தால், அவன் சபிக்கப்பட்டவனாயிருக்கக் கடவன். பாருங்கள், சுவிசேஷங்கள் வெளிப்படையாய் இருக்கின்றன. இப்பொழுது, கவனியுங்கள். ''நல்லது, சகோதரன் பிரான்ஹாம், இப்பொழுது நான் என்ன செய்யட்டும், இயேசு கிறுஸ்துவையே விசுவாசிக்க வேண்டுமா?'' இல்லை. அது இளைப்பாறுதல் அல்ல. 68இப்பொழுது, அது என்னவென்று அறிய நீங்கள் விரும்பினால் கிறிஸ்தவனின் இளைப்பாறுதல் என்பது என்னவென்று அறிந்துகொள்ள விரும்புகிறவர்கள் அனைவரும் “ஆமென்'' என்று கூறுங்கள். (சபையார் ''ஆமென்'' என்று கூறுகின்றனர்- ஆசி) இப்பொழுது ஏசாயா 28, அதைக் குறித்துக் கொள்ள விரும்புவோர் அதைக் குறித்துக் கொள்ளலாம். அவன், ''கற்பனையின் மேல் கற்பனையும் - கற்பனை” என்று பேசுகின்றான். ''கற்பனையின் மேல் கற்பனையும், பிரமாணத்தின் மேல் பிரமாணமும், இங்கே கொஞ்சமும் அங்கே கொஞ்சமும், நலமானது என்னவோ அதை பிடித்துக் கொள்ளுங்கள்'' என்று கூறுகிறான் வரயிருக்கின்ற இளைப்பாறுதல், ஓய்வின் காலத்தைக் குறித்து இங்கே தீர்க்கதரிசி பேசிக் கொண்டிருக்கிறான். நீங்கள் அந்த முழு அதிகாரத்தையும் வாசித்து பாருங்கள், பாருங்கள். அவன் ''அந்த ஓய்வு நாள் என்பது ஓய்ந்து போகும் காலங்கள் வரும்'', என்று கூறுகிறான். ஆகையால், அவர்கள் திங்கட்கிழமை காலணிகளையோ அல்லது மற்றவைகளையோ விற்றது போல் சனிக்கிழமையிலும் விற்பனை செய்வார்கள். நீங்கள் அதைக் காண்கிறீர்களா? அவன், ''இந்த அடையாளம் எப்பொழுது இருக்கும்?'' என்றான். அவன்: “கற்பனையின் மேல் கற்பனையும், பிராமணத்தின் மேல் பிர மாணமும், இங்கே கொஞ்சமும், அங்கே கொஞ்சமும் என்பார்கள்: நலமாய்த் தோன்றுகிறது எதுவோ அதைப் பிடித்தக் கொள்ளுங்கள். ஏனெனில் பரியாச உதடுகளினாலும் அந்நிய பாஷைகளினாலும் இந்த ஜனத்தோடு பேசுவார். அவர்கள் எதற்குள் பிரவேசிக்க வேண்டுமென்று நான் கூறினேனோ இதுவே அந்த ஓய்வு, அந்த இளைப்பாறுதல். அவர்கள் இது எல்லாவற்றிற்கெல்லாம் தங்கள் இருதயங்களைக் கடினப்படுத்தி, தங்கள் தலைகளைத் துலக்கி, அதைப் புறக்கணித்தார்கள். அவர்கள் அப்படியே (பெந்தெகொஸ்தே நாளில், பரிசுத்த ஆவி ஜனங்கள் மீது இறங்கிய போது, அவர்கள் அந்த நாளில் செய்ததைப் போலவே - பெந்தெகொஸ்தே நாளிலே பரிசுத்த ஆவிதான் ஜனங்களுக்கு கொடுக்கப்பட்ட முதன்மையானதாகும். அதுதான் தேவனுடைய ஜனங்களுக்கு அருளப்பட்ட இளைப்பாறுதல், ஓய்வாகும்.) 69ஆனபடியால், இக்காரணத்தால்தான் நாம் ஞாயிற்றுக் கிழமையை கைக் கொள்கிறோம், இது நம்முடைய வேதாகமத்தின் ஆதி முற்பிதாக்களாகிய பரிசுத்த பவுல், யோவான், மத்தேயு, மாற்கு, லூக்கா, மற்ற எல்லாராலும் துவக்கப்பட்டது, அவர்கள் வீடு வீடாகச் சென்று, வாரத்தின் முதல் நாளிலே பந்தியைக் கைக்கொண்டார்கள், சீஷர்கள் எல்லாம் ஒன்றாய் கூடினபோது, அது ஓய்வு நாள் என்று அழைக்கப்படவில்லை, ஆனால் கர்த்தருடைய நாள் என்று அழைக்கப்பட்டது. அங்கே சபையிலே, ஓய்வு நாளின் பண்டிகையானது ஏற்கனவே இருந்தது. பத்மு தீவிலே யோவான் கர்த்தருடைய நாளில் ஆவிக்குள்ளானேன்'' என்றான். அது சரி. பாருங்கள்? அவன் பார்த்தபோது... ஆகவே இப்பொழுது, கர்த்தருடைய நாள் என்றால் அது கர்த்தர் உயிர்த்தெழுந்த நாளாகும். இப்பொழுது நீங்கள், வரலாற்று அறிஞர்களாகிய ஜோஸிபஸ், ஆக்டிபஸ் அல்லது மற்ற அநேகரை அணுகிப் பாருங்கள். அல்லது அது ஆக்டிபஸ் அல்ல, ஓ என்னால் முடியவில்லை... கிழக்கைச் சேர்ந்த எழுத்தாளர்களை நீங்கள் பார்த்தால் கண்டு கொள்வீர்கள். சபை வரலாற்று அறிஞர்கள், ஃபாக்ஸினுடைய இரத்தச் சாட்சி புத்தகம் (Foxe's Book of Martyrs), இன்னும் அநேகவற்றைப் பார்ப்பீர்களானால், ஒரே ஒரு வித்தியாசத்தைத்தான் நீங்கள் காணமுடியும்... அவர்கள் ஒரு கூட்ட யூதர்கள். அவர்கள், அவர்களில் ஒருவர் (அந்த வரலாற்று அறிஞரில் ஒருவர் - தமிழாக்கியோன்) கிறிஸ்தவர்களை ''தன்னினத்தை தின்னுகிறவர்கள்“ (”Cannibals“) என்று அழைத்தனர். அவர்கள் ''ஒரு மனிதன் பொந்தியுபிலாத்துவால் கொல்லப்பட்டார். சீஷர்கள் வந்து அவருடைய சரீரத்தைத் திருடிச் சென்று, ஒளித்து வைத்து, ஒவ்வொரு ஞாயிறும் சென்று அச்சரீரத்தின் பாகத்தை சாப்பிட்டனர்'' என்றனர். அவர்கள் இராப்போஜனத்தைக் கைக்கொண்டனர். அவர்கள் மாத்திரம். அவருடைய சரீரத்தை உட்கொண்டனர். அவர்கள் பாருங்கள், கர்த்தருடைய சரீரத்தை உட்கொண்டிருந்தனர் என்று அவர்கள் கூறினார்கள். இராப்போஜனம். அது என்ன என்பது இவர்கள் அறியவில்லை, ஆகவே அவன், ”அவர்கள் தன்னினத்தைத் தின்கிறவர்கள் அவர்கள் வாரத்தின் முதல்நாள் சென்று, ஒன்று கூடி, “இம்மனிதனின் சரீரத்தை புசிக்கின்றனர்'' என்றான். 70அவர்கள் நியாயப்பிரமாணத்தைக் கைக்கொண்டு ஆக்ரோஷமாக உயிர்த்தெழுதலை மறுதலிக்கிறவர்களா, அல்லது அவர்கள் கிறிஸ்தவர்களாயிருந்து, உயிர்த்தெழுதலை விசுவாசிக்கிறவர்களா, என்பதை நீங்கள் கண்டுபிடித்துக் கூற இருக்கின்ற ஒரே ஒரு வழி, ஒருவன் சபைக்கு சனிக்கிழமை செல்வான், மற்றொருவன் சபைக்கு ஞாயிற்றுக்கிழமையன்று செல்வான், அது தான் அவர்கள் நடுவே இருந்த ஒரு அடையாளமாகும். அது ஆணித்தரமான ஒன்றல்லவா, அப்படித்தானே? அது சரி. அது செய்யும் என்று நம்புவோமாக. பரிசுத்த ஆவி ஒரு... உங்களிடம் ஏதாவது இப்பொழுது உள்ளதா சகோதரனே? நீர் விரும்புவது... அதற்கு பதிலுரைக்கப்பட்ட நீர் விரும்புகிறீரா? சரி, பார்க்கலாம், இங்கே ஓ, ஆமாம். 71கேள்வி: புறஜாதிகளின் யுகம் முடிவுற்ற பின்னர் யூதர்கள் இரட்சிக்கப்பட வாய்ப்பு இருக்குமா? ஓ என்னே, இது முதல்தரமான ஒன்றல்லவா! ஹ ஹூம். நாம் அதற்குள் அதிகமாக செல்ல போதுமான நேரம் நமக்கு இல்லை, ஆனாலும் இதை நான் உங்களுக்குக் கூறட்டும். என்னுடைய வார்த்தையை நீங்கள் எடுத்துக் கொள்ளுங்கள். நான் அதை உங்களுக்குக் காண்பிக்கட்டும். இதனால் நீங்கள் என்னுடைய வார்த்தையை எடுப்பீர்களானால், நான் தேவனிடத்தில் விவரித்தது போல், நீங்கள் பிறகு இதைப் பார்ப்பீர்களானால், நீங்கள் இதை கண்டு கொள்வீர்கள், பாருங்கள். ஏனெனில் நான் கற்பனை... என்னால் அந்த கடிகாரத்தைக் காண முடியவில்லை, ஆனால் அதை என்னால் கற்பனை செய்ய முடிகிறது. (என்ன நேரம் ஆகிறது? என்ன? ஒன்பதரை. நான் மருத்துவமனைக்குச் செல்ல வேண்டும், பிறகு நியூ ஆல்பனிக்கு செல்ல வேண்டும், நான் காலை மூன்று மணி இருபத்தைந்து நிமிடங்களுக்கு ஜெபர்சன்வில்லுக்கு வெளியில் செல்லவேண்டும். ஆகையால்... நான் இந்த வாரம் இரவு முழுவதும் இரண்டு அல்லது மூன்றுமணி வரை படுக்கைக்குச் செல்ல முடியவில்லை). 72இப்பொழுது இதைப் பெற்றுக்கொள்ள, இதை இங்கே சீக்கிரம் கவனியுங்கள். ஆம். என் கிறிஸ்தவ நண்பனே, புறஜாதிகளின் நாட்கள் முடிவுற்றது, இப்பொழுது சரியாக முடிவடைகிறது. ஆகையால் தேவன் யூதர்களிடத்திற்கு திரும்புவார். நான் தொடர்ந்து ஜெபித்து வருகின்ற இந்த சிறிய சபைக்கு நான் இதைக் கூறட்டும். இதைக் குறித்த அநேக தீர்க்கதரிசனங்கள் தேசத்தின் மற்ற பாகங்களிலிருந்து வந்து குவிந்த வண்ணம் இருக்கின்றது. நான் விசுவாசிக்கிறேன், யூதர்... இப்பொழுது சிறிது நேரம் பொறுங்கள். கிறிஸ்தவ சபையைக் குறித்த இந்த ஒன்றை யூதனால் பெறமுடியவில்லை. யூதன் அநேக முறை “சகோதரனே, நீங்கள் தேவனை மூன்று கூறுகளாக வெட்டி அவரை எனக்கு அளிக்க முடியாது” என்று என்னிடம் கூறியுள்ளான். யூதன் ஒரே தேவனைத்தான் கொண்டிருக்கிறான், அது யெகோவா. ஆகவே புறஜாதியார் அதைத் தவறாகப் பொருள் கொள்கின்றனர். அவர்கள் அதை இவ்வளவாக ஞானத்தினால் குழப்பி இவ்வாறு அவரை ஆக்கியுள்ளனர். அது மூன்று தேவர்கள் அல்ல என்று அதைக் குறித்த ஒரு கருத்தைக் கொண்டிருக்கிறான் என்று - நான் விசுவாசிக்கிறேன் ஒரே தேவன், மூன்று அவதாரங்கள் (Manifestations) ஒரே நபருக்குள் மூன்று இயல்புகள். நீங்கள் அந்த செய்தியை பெற்றுக் கொள்ளும்போது, நான் ஹைமான் ஆப்பிள்மேனிடம் (Hyman Appleman) கூறினேன். (உங்களில் அநேகர் அவரை அறிவீர்கள்). அவர், ''சகோதரன் பிரான்ஹாம், நீர் அந்த செய்தியை அற்புதங்களுடனும் அடையாளங்களுடனும் பாலஸ்தீனர்களுக்கு எடுத்துச் செல்வீரானால், பத்து லட்சம் யூதர்கள் இயேசு கிறிஸ்துவை தங்கள் சொந்த இரட்சகராக ஏற்றுக் கொள்வார்கள்'' என்றார். பாருங்கள், அது சரி. 73இப்பொழுது நான் கூறினேன்... நாம் கொண்டிருக்கும் செய்தி இதோ இங்குள்ளது. இயேசு தான் மாம்சத்தில் மறைந்திருந்த யெகோவா, மறைந்து கீழிறங்கி வந்தவர். இப்பொழுது தேவன் (பிதா, குமாரன், பரிசுத்த ஆவி) சில மக்கள் நினைப்பதுபோல, உங்கள் விரல்களைப்போல் அல்ல. முழு காரியமும்... இல்லை, தேவன் என்பதை நான் சற்று முன்பு உங்களுக்கு வெளியாக்கிக் காண்பித்தேன், பாருங்கள், அங்கே அந்த ஒன்றில் திரித்துவம் அமைந்துள்ளது. நான் ஒன்றில் உள்ள திரித்துவமாயிருக்கிறேன். நான், ஆத்துமா, சரீரம், ஆவியுள்ள ஓர் நபராக இருக்கிறேன். அது சரிதானே? நிச்சயமாக. நான் அணுக்களாலும், இரத்தத்தாலும், நரம்புகளாலும் உருவாக்கப்பட்டுள்ளேன், ஆனாலும் ஒரே நபராயிருக்கிறேன். பாருங்கள்? நீங்கள் காணும் எல்லாவற்றிலும் திரித்துவம் உள்ளது, ஒன்றில் உள்ள திரித்துவம். பேழையிலும் ஒரு திரித்துவம் இருந்தது. கீழ் அறை, ஊறும் அறை, ஊறும் பிராணிகளுக்கு, இரண்டாவது அறை, கோழிகள், பறக்கும் பட்சிகள்; மூன்றாவது அறை நோவாவும் அவனுடைய குடுபத்தினருக்கும். எல்லாம்! ஆசரிப்பு கூடாரத்தில், அங்கு ஒரு சபை, பரிசுத்த ஸ்தலம், மகா பரிசுத்த ஸ்தலம். பாருங்கள்? மூன்று யுகங்கள் இருக்கின்றன. பிதாத்துவம், குமாரத்துவம், பரிசுத்த ஆவியின் யுகம். நான் என்ன கூற விழைகிறேன் என்று பாருங்கள்? ஆனால் அந்த மூன்றும்... ''நம் தேவர்கள்'' என்று நாம் கூறுவதில்லை. அது அஞ்ஞான வழக்கம், யூதர்களும் அதை அறிவார்கள். ஆனால் அவனுக்கு இந்த இயேசு தான் தேவன், யெகோவா தேவன், இரண்டாவது அல்லது மூன்றாவது நபர் அல்ல, அது எல்லா காலத்திலும் எல்லா நேரத்திலும் தம்மை வெளிப்படுத்தும் ஒரே நபர்தான் என்று நீ கூறலாம். பாருங்கள்? அதன் பிறகு மரித்தோரிலிருந்து இயேசு உயிரோடெழுந்தார் என்று அற்புதங்களாலும் அடையாளங்களாலும் நிரூபிக்கமுடியும். 74ஆகவே இந்த டாக்டர் ரீட்ஹெட்... பின்னால் இருக்கும் சகோதரன், சபையில் இருக்கும் ஒரு போதகர். பள்ளி ஆசிரியர், நான் அவரை இங்கே சபையில் கேட்டேன்... அங்கேயுள்ள அவருடைய மனைவியுடனும், குழந்தையுடனும் நான் கைகுலுக்கினேன். அவர் அந்த இரவு நான் பிரசங்கிப்பதைக் கேட்க வந்திருந்தார். அவர்கள் இங்கிருக்கிறார்கள் என்று நான் நினைக்கிறேன். அவர்கள் செல்லவில்லை என்றால், அவர் லூயிவில்லில் உள்ள ஒரு பள்ளிக்கூட ஆசிரியர் என்று நான் நம்புகிறேன். எப்படியாயினும், அவர் பேசுவதைக் கேட்க சென்றிருந்தனர். அது முக்கியம் வாய்ந்தது. அநேக மாதங்களுக்கு முன்பாக அந்த மனிதன் ஒரு யூதனுடன் என் வீட்டிற்கு வந்தார். அவர் சகோதரன் பிரான்ஹாமே, “பாப் ஜோன்ஸில் அநேக பட்டங்களை நான் பெற்றிருக்கிறேன். நான் வீட்டனிலிருந்து (Wheaton) வந்தவன்.'' என்றார். எல்லா கல்வியும் அவருக்குள் குவிக்கப்பட்டிருந்தது. அவர், ''நான் சிறிய பையனாய் இருக்கும் போதிலிருந்தே தேவனை விசுவாசித்து வருகிறேன், ஆனால் இன்னுமாய் என் வாழ்க்கை வெறுமையாயிருக்கிறது!'' என்றார் அவர் ''போதகர்கள் தவறாய் இருக்கிறார்களா?'' என்று கேட்டார் 75ஆகவே அந்த கருத்து இங்கே இருக்கிறது. எப்படியாவது... அந்த இரவு திறந்த வெளியில் பிரசங்கம் செய்யப்பட்ட போது அங்கிருந்திருப்பீர்களானால், அவர், ''நான் என்னுடைய அதை - இதை பெற்ற போது... என்றார் இப்பொழுது கவனியுங்கள், சிறிய சபையே, உங்களுடைய ஜெபங்களும் மற்றவைகளும் உதவி புரிந்தன, இதற்கு செவிகொடுங்கள். அவர் இதை இங்கே இந்த வீட்டிலே என்னிடம் முன்பு கூறினார். அவர் என் வீட்டிற்கு வந்து “சகோதரன் பிரான்ஹாம், நான் மூர்ச்சையடைந்தேன், கிறிஸ்துவை என் சொந்த இரட்சகராக, விசுவாசித்து ஏற்றுக் கொண்டுள்ளேன், இதைவிட மேலானது ஒன்று உண்டோ? நான் ஆவியினாலே மறுபடியும் பிறந்திருக்கிறேன் என்று விசுவாசிக்கிறேன், அதற்காக சாட்சிகள் எனக்கு இல்லை'' என்று கூறினார். நான், ''சகோதரனே, நான் இதைக் கூறுவது சற்று மோசமாக இருக்கும், உங்களுடைய போதகர்களும், பள்ளிகளும் உங்களை ஏமாற்றியுள்ளன'' என்றேன். கவனியுங்கள், நான் - நான் அதைக் கூறமுடியும், உன் கட்டை விரலை அசைத்துக் கொண்டு நீ பரலோகம் செல்ல முடியாது என்று நான் விசுவாசிக்கிறேன், “உங்களுடைய சபைகளிலே நீங்கள் இதை விசுவாசிக்கின்றீர்களா?'' இங்கே உள்ள எதையும் நான் அறியேன் ஆனால்... ”வேதம் இதை கூறுகிறது, அதை நீ விசுவாசிக்கிறாயா?'' பிசாசும் விசுவாசித்து நடுங்குகிறான்! நீ என்ன விசுவாசிக்கிறாய் என்பதல்ல. நீங்கள் மறுபடியும் பிறந்த, பரிசுத்த ஆவியினால் ஞானஸ்நானம் பெற்று தேவனுடைய குமாரரும் குமாரத்திகளுமாயிருக்கிறீர்கள் என்பதற்கு உங்களுடைய ஆவி அவருடைய ஆவியுடன் சாட்சியிட்டாக வேண்டும். 76அவர், ''சகோ பிரான்ஹாம், பெந்தெகோஸ்தேயினரைப் பற்றி என்ன நினைக்கிறீர்களா?“ என்றார். நான், “அதன் காரணத்தால்தான் நான் அவர்களுடன் தொடர்பு வைத்திருக்கிறேன், உங்களிடம் இல்லாத ஏதோ ஒன்றை அவர்கள் கொண்டிருக்கின்றனர், தங்களுடைய விடாப்பிடியான சமய நெறிக் கொள்கை மற்றும் எல்லாவற்றாலும், நீங்கள் அறியாத ஒரு உண்மையை அவர்கள் கொண்டிருக்கின்றனர்” என்றேன். நான் அமெரிக்காவின் மகத்தான மனிதர்களில் ஒருவரான ஒரு நபருடன் பேசிக் கொண்டிருந்தேன். ஆம் ஐயா, அடிப்படையில் மிகவும் உறுதியான, உலகத்திலேயே மிகவும் சிறந்ததான சுடான் மிஷன்ஸ் (Sudan Mission) தலைவர் அவர். அவர் வேத வசனங்களை அறிந்திருந்தார், மரணம், அடக்கம், உயிர்த்தெழுதல் போன்றவற்றை ஒரு வீடு தீப்பற்றி எரிவதைப் போல பிரசங்கம் செய்வார். ஆனால் அது அல்ல. பிசாசும் கூட அதைச் செய்வான். பிசாசும் அடிப்படையில் எப்படி இருக்க முடியுமோ அப்படியே இருப்பான். ஆனால், சகோதரனே, இயேசுகிறிஸ்து, “ஒரு மனிதன் தேவனுடைய ஆவியினாலே மறுபடியும் பிறவாவிட்டால் தேவனுடைய இராஜ்ஜியத்தைக் காணமாட்டான்'' என்றான். “ஆம், நான் அதை விசுவாசிக்கிறேன். ஆமாம், நான் - நான் அந்த விதமாக விசுவாசிக்கிறேன். அதை விசுவாசிக்கிறேன். ஆம்” என்று நீங்கள் கூறுவதால் மாத்திரம் அல்ல. அது அதைச் செய்யாது. புதிய பிறப்பின் சரியான அனுபவமாக அது இருத்தல் வேண் டும். அது, உங்களுக்கும் தேவனுக்கும் இடையே ஏதோ ஒன்றாக இருந்து மரணத்தை விட்டு ஜீவனுக்குள் வந்துவிட்டீர்கள் என்று நீங்கள் அறியும்படியாக இருத்தல் வேண்டும். 77அவர் ''சகோதரன் பிரான்ஹாம், பரிசுத்த ஆவியை நான் பெற முடியுமா?'' என்று கேட்டார். நான் “ஹைமேன் ஆப்பிள்மேன் மீது அங்கே கைகள் வைக்கப்பட்ட போது அவர் பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானதைப் பெற்றுக் கொண்டார்'' என்றேன். இந்த யூதன் அழ ஆரம்பித்து அங்கே இருந்த சிறிய மேஜை மேல் இருந்த கண்ணாடியை உடைத்து, மிகவுமாக அழுதார். அவர்கள் இருவரும் “சகோதரன் பிரான்ஹாமே, நாங்கள் எப்படி அந்த பரிசுத்த ஆவியைப் பெறுவது? என்று கேட்டனர். படிப்பாளிகள்! சிறந்தவர்கள், சாமர்த்தியசாலிகள்! அந்த ஊரிலேயே சிறந்தவர்கள். ஆகையால் நான், ''பரிசுத்த ஆவியைப் பெறுவதற்கான அப்போஸ்தல வழி கைகள் மேலே வைக்கப்படுதலே'“என்றேன். அது சரி. “கைகள் மேலே வைக்கப்படுதல்'' பவுல் தன் பார்வையைத் திரும்பப் பெறுவதற்காகவும், பரிசுத்த ஆவியினால் நிறையப்படுவதற் காகவும் அனனியா அவன் மீது கைகளை வைக்க வந்தான். பிலிப்பு அங்கே சென்று பிரசங்கித்து ஒரு முழு கூட்டத்திற்கே இயேசு கிறிஸ்துவின் நாமத்திலே ஞானஸ்நானம் கொடுத்தான். பரிசுத்த ஆவி யார் மீதும் வரவில்லை, ஏனெனில் பேதுருவிடம் தான் திறவுகோல்கள் இருந்தன. அவன் வந்து அவர்கள் மீது கைகளை வைத்தான், அவர்கள் பரிசுத்த ஆவியைப் பெற்றுக் கொண்டனர். அது சரிதானே? 78பவுல் அப்போஸ்தலர் 19-ல், அவன் அங்கே கடந்து சென்ற போது பில்லி கிரகாமிற்கு நிழலாயிருக்கிற அப்போல்லோ என்பவன் அங்கே பெரிய மகத்தான எழுப்புதலையும் மகத்தான ஒரு சமயத்தையும் கொண்டிருந்தான். அந்த பாப்டிஸ்டு குழுவினரிடம் “விசுவாசிகளான போது நீங்கள் பரிசுத்த ஆவியைப்பெற்றீர்களா?'' என்று கேட்டான். அவர்கள் “நாங்கள் யோவானைப் பின்பற்றுகிறவர்கள். எங்களுக்குத் தெரியும்! அப்போல்லோ எங்களுடைய பிரசங்கி ஆவார், அவர் மனந்திரும்பிய ஒரு சட்ட நிபுணர் (lawyer). இந்த தேசத்திலேயே சாமார்த்தியசாலி,'' என்று கூறினர். அவன்“ ஆனால் நீங்கள் விசுவாசிகளானபோது பரிசுத்த ஆவியை பெற்றீர்களா?' என்று கேட்டான். அதற்கு அவன், “பரிசுத்த ஆவி உண்டென்பதை நாங்கள் கேள்விப்படவே இல்லை'' என்று கூறினான். அதற்கு அவன் (பவுல்) ''நீங்கள் எந்த ஞானஸ்நானம் பெற்றீர்கள்?'' என்று கேட்டான். அவன் “யோவான் கொடுத்த ஞானஸ்நானம் பெற்றோம்'' என்றான். அவன், ''யோவான் தனக்குப்பின் வருகிறவராகிய கிறிஸ்து இயேசுவில் விசுவாசிகளாய் இருக்கவேண்டும் என்று ஜனங்களுக்கு சொல்லி, மனந்திரும்புதலுக்கு ஏற்ற ஞானஸ்நானம் கொடுத்தானே'' என்றான். ஆகவே, அவர்கள் இதைக் கேட்டபோது அவர்கள் இயேசு கிறிஸ்துவின் நாமத்திலே ஞானஸ்நானம் பண்ணப்பட்டார்கள். பவுல் தன் கைகளை அவர்கள் மீது வைத்தபோது அவர்கள் பரிசுத்த ஆவியை பெற்று அந்நிய பாஷைகள் பேசி தேவனை பிரதிபலித்தார்கள். நான் வேதவசனங்களை அறிந்தவரையில் இது தெளிவான ஒரு காரியமாகும். 79இப்பொழுது, கவனி நண்பனே! உன்னுடைய கருத்துக்களில் சிறிது வேறுபாடு இருக்கலாம், ஏனெனில் நீ எல்லாவற்றிலும் கலக்கப்பட்டுள்ளாய். ஆனால் அதை விட்டுவிடு, உன்னுடைய வியாக்கியனத்தை அதில் சேர்க்க முயற்சிக்காதே. வேதம் என்ன கூறுகிறதோ அதை மாத்திரம் கூறு, அதை இந்த வழியிலேயே விட்டுவிடு. ஆகவே நான், “இருக்கட்டும் சகோதரனே, பரிசுத்த ஆவியைப் பெற விரும்புபவர்கள் மீது கைகள் வைக்கப்படுதலே எனக்குத் தெரிந்த ஒரே வழி'' ஆகும் என்று கூறினேன். அவர் “நீர் எங்கள் மீது கைகளை வைத்து தேவன் எங்களை ஆசிர்வதித்து பரிசுத்த ஆவியை அருளுமாறு கேட்பீரா?'' என்று கேட்டார். நான் ''நான் செய்வேன்“ என்றேன். நாங்கள் தரையில் முழங்காற்படியிட்டோம், நான் ஜெபித்து அவர்கள் மீது கைகளை வைத்தேன். அதற்குப் பிறகு சிறிது வாரங்கள் கழித்து, இருவரும் பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தைப் பெற்றுக் கொண்டனர். ஆகவே இந்த டாக்டர் ரீட்ஹெட் பரிசுத்த ஆவியைப் பெற்றுக் கொண்டு, அந்நிய பாஷைகள் பேசுவதன் வழியாகக் கடந்து வந்தார். ஆம், ஐயா. 80ஆகையால் உங்கள் சுடான் மிஷன், “அந்நிய பாஷைகள் பேசும் ஒரு மனிதனுக்கு எங்களிடத்தில் இடமில்லை'' என்று கூறுகின்றது. அவர் என்னிடம் வந்து, “எவராவது அந்நிய பாஷைகளில் பேசுகின்றனரா?'' என்று கேட்டார். ''ஏன், ஏன்,'' நான், “அவர்களிடத்தில் இயேசு கிறிஸ்துவிற்கு இடமில்லை, ஏனெனில் இயேசு கிறிஸ்து யாரும் அறியாத பாஷைகளில் பேசினார்; அந்நியபாஷைகள் பேசியவாறு மரித்தார்'' என்றேன். பவுலின் போதகத்தை அவர்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை, அவர்களை விட பவுல் அதிகமாக அந்நிய பாஷைகள் பேசினான். நேற்று ஒருவர் என்னிடம் வந்து, “அதைக்காட்டிலும் புரிந்து கொள்ளப்படுகிற வகையில் நான் ஐந்து வார்த்தைகளைப் பேசுவேன்'' என்றார். ஆனால் பவுலின் உபதேசம், ''தீர்க்கதரிசனச் சொல்ல நாடுங்கள், அந்நிய பாஷைகளைப் பேசுவதற்கும் தடைபண்ணாதிருங்கள்'' என்று கூறுகின்றது. ஆனால் அந்நிய பாஷைகளைப் பேச அவர்கள் தடை செய்யப்பட்டனர். 81பாஷைகளில் பேசுவது சபைக்கு அளிக்கப்பட்ட ஒரு தெய்வீக வரமாகும். ஆதியில் எப்படி இருந்ததோ அவ்வாறு இன்றைக்கும் அது சபைக்கு சொந்தமாயிருக்கிறது. அது முற்றிலும் உண்மையானது. ஆம், அப்படித்தான் அது வேத போதகமாகும். அது ஒரு தெய்வீக வரம் ஆகும். நீ அதை மறுதலிப்பாயானால் நீ அதை வெட்ட முயற்சிக்கும் பொழுது நீ புதிய பிறப்பையும், இயேசு போதித்த எல்லாவற்றையும் நீ மறுதலிக்கிறவனாகக் காணப்படுவாய் இப்பொழுது, “அதை நீ தாறுமாறாக்கக் கூடாது, அநேகர் அவ்வாறு செய்துள்ளனர். ஆனால் அது தன் இடத்தை உடையதாய் இருக்கிறது'' என்று நான் கூறுகிறேன். அது ஒரு ஜோடி காலணிகளைப் போன்றது. நீ ஒரு ஜதை காலணிகளை வாங்கும்போது, அதற்குள் நாக்குகள் இருக்கும். அது சரி. நீ கிறிஸ்துவின் சரீரத்தில் இருக்கும்போது, தேவன் எல்லா காரியத்தையுயும் சரியாக அமைத்துள்ளார். சகோதரனே, சகோதரனே, அவரிடம் அன்பு உள்ளது, சந்தோஷம் உள்ளது. நான் அங்கே இருக்கின்ற உங்கள் மேஜையின் அருகே அமரும் போது, “நீங்கள் பிரசங்கியாரே என்னுடன் வந்து உணவு உண்ணுங்கள்” என்று கூறுவீர்களானால், நீங்கள் என்னை நேசிக்கிறீர்கள் என்று நான் நம்புவேன். மேஜையின் மீது பீன்ஸ், உருளைக் கிழங்கு, காரட்டு, வறுத்த கோழிகறி, பூசனிக்காய் பொறியல், ஐஸ்கிரீம், மற்றும் எல்லாம் இருக்கையில் உருளைக் கிழங்கினிடத்தில் நான் வரவேற்கப்படுவேன் என்று நான் நம்புகிறேன். அதே போன்று கோழிகறியினிடத்திற்கும்; பூசனிக்காய் பொறியலிடத்திற்கும் நான் வரவேற்கப்படுவேன் என்று நான் நம்புகிறேன். நான் செய்யவேண்டிய ஒரே ஒரு காரியம் என்ன வென்றால், “அந்த பொறியலை சிறிது என்னிடத்திற்கு அனுப்பமுடியுமா?'' என்று கூறுவது மாத்திரமே. சுத்தமுள்ள இருதயத்துடனும், நீங்கள் என்னை நேசித்து ”நிச்சயமாக என் சகோதரனே நிறைய எடுத்துக் கொள்ளுங்கள்'' என்று கூறுகிறீர்கள் என்று நான் நம்புவேன். அது சரிதானே? ''உருளைக்கிழங்குளை என்னிடம் கொடுங்கள்?'' என்று நான் கூறும்போது, ''ஏன், நிச்சயமாக என் சகோதரனே இங்கே இருக்கிறது'' என்று நீங்கள் கூறுவீர்கள். இயேசு கிறிஸ்து தமது பிராயசித்த பலியில் கல்வாரியில் மரித்து சம்பாதித்த ஒவ்வொரு மீட்பின் ஆசிர்வாதமும், மேஜையின் மேல் வைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு விசுவாசியும் அதன் முன் அமர்ந்துக் கொண்டிருக்கிறான். அல்லேலுயா! எனக்கு சுகமாகுதல் தேவையெனில் பிதாவே, “சுகமாகுதலை என்னிடம் அனுப்பும்,'' என்று நான் கூறி என்னுடைய தட்டில் அதை ஊற்றி, சிறப்பான ஆகாரத்தைப் புசித்து. இப்பொழுது, நீங்கள் சாப்பிடாமல் மரிக்க வேண்டுமென்று விரும்பினால், அப்படியே செய்யுங்கள். ஆம், ஐயா. தீர்க்கதரிசனம், பாஷைகளில் பேசுதல் 82இந்த மனிதன் இவ்வாறு எழுதியுள்ளான். நான் பேசினேன் என்று அவன் அறியாதிருந்தான். நான் அந்நிய பாஷைகளைப் பேசினேன் என்று அவன் அறியாதிருந்தான். அவர் இந்த புஸ்தகத்தை எழுதிக் கொண்டிருக்கிறார். அது தேசங்களை சிதறடிக்கும் என்பதை நீங்கள் கண்டு கொள்வீர்கள். அது மட்டுமல்லாமல், மூடி வேதாகம சங்கத்தில் அந்நிய பாஷைகளில் பேசும் வரத்தை நாடிக்கொண்டிருக்கின்ற இருபத்தைந்து ஊழியர் இந்த மனிதனிடத்தில் இருக்கின்றனர். அடிப்படைவாதிகள் தலைகீழாக மாற்றிவிட்டனர். இந்த மாதத்தில் வெளிவந்துள்ள கிறிஸ்துவ ஜீவியம் (Christian life) என்னும் பத்திரிகை, கிறிஸ்துவ ஜீவியம் பத்திரிகையின் 19-வது பக்கத்தில் வேதத்தில் டாக்டர் பட்டம் பெற்ற அந்தப் பெரிய மனிதர் கூறுவதைக் கவனியுங்கள். அவர், ''இதை நாம் ஏற்றுக் கொள்ளலாமா? நாம் ஏதாவது ஒன்றை இழந்துவிட்டோமா?'' என்று கூறுகிறார். நான் அபரிதமான மழை வருதலின் சத்தத்தைக் கேட்கிறேன். நிறைய மக்கள் அதை கோணலாக்கிக் கொண்டிருக்கின்றனர். ஆனால் பரிசுத்தஆவியின் அபிஷேகம் முழுமையாக ஊற்றப்பட்டு, வல்லமையோடும், அடையாளங்களோடும், அற்புதங்களோடும் நிறையப்பட்டு இந்த புறஜாதி உலகத்தை குலுக்கும். இதன் காரணத்தால் நான்... பெந்தெகொஸ்தேயினரும் மூலைக்குத் தள்ளப்பட்டு, அதைப் போன்ற வெவ்வேறு காரியங்கள் மேல் வெறிபிடித்தவர்கள் போலாகிவிட்டனர், ஏற்ற காலம் இன்னுமாய் வரவில்லை. அதன் காரணமாகத்தான் அவர்கள் இவ்விதமான எல்லா அதி தீவிர மூடபக்தி வைராக்கியத்தைக் கொண்டிருந்தனர் ஆனால் அதுதான். தேவனுடைய தெய்வீக வாக்குத்தத்தமும், தேவனுடைய தெய்வீக வார்த்தையுமாயுள்ளது, அது நடந்தேறியாக வேண்டும். ஏனென்றால் தேவன் அவ்வாறு கூறியுள்ளார். புறஜாதியாரின் யுகம் முடிவுபெறும் சற்று நேரத்திற்கு முன்பு அந்நிய பாஷைகளில் பேசுதலையும் தேவன் இங்கே மேஜையின் மீது வைத்துள்ளார். அடிப்படை வாதிகளின் மேல் தேவன் ஊற்றுவார் என நான் நம்புகிறேன். 83இந்த ஆகஸ்ட் மாதம் வெளிவந்த ரீடர்ஸ் டைஜெஸ்ட் (Reader's Digest) இதழில் நீங்கள் படிக்கலாம். எவ்விதம் அந்த மெதொடிஸ்ட் பிரசங்கியார் பிரசங்க பீடத்திலிருந்து, மருத்துவமனையில் மரித்துக்கொண்டிருந்த ஒரு மனிதனுக்காக ஜெபித்தபோது, பரிசுத்த ஆவியின் பிரசன்னம் இறங்கி வந்து அந்த மனிதனை அந்தப் பொழுதில் சுகமாக்கிற்று என்பதை நீங்கள் அதில் படியுங்கள். அல்லேலூயா! நிச்சயமாக. இங்கிருக்கும் மேஜையின் மேல் தேவன் தெய்வீக சுகமளித்தலை வைத்திருக்கிறார்! தீர்க்கதரிசனத்தையும் அவர் இங்கே மேஜையின் மீது வைத்துள்ளார்! அந்நிய பாஷைகளில் பேசுதலையும் தேவன் இங்கே மேஜையின் மீது வைத்துள்ளார். சரீரத்தில் ஆவிக்குரிய ஒன்பது வரங்களையும் வைத்துள்ளார், நீங்கள் இந்த ஒவ்வொன்றிற்கும் வரவேற்கப்படுகின்றீர்கள்! அல்லேலூயா! ஆம், ஐயா, அவைகள் இங்கே உள்ளன. கேள்வி: புறஜாதியாரின் முடிவில், யூதர் திரும்பிவிட்டுருப்பார்களா? ஆம், ஐயா, சகோதரனே, சகோதரியே, அது யாராயிரப்பினும் அநேக வேதவாக்கியங்கள் உள்ளன. ஒன்றைச் சொல்வோமானால், அந்த மரத்தைக் குறித்து யோவேல், “பச்சைப்புழு விட்டதை முசுக்கட்டைப் பூச்சி தின்றது'', என்றான். இன்னும் மற்ற வசனங்களும் உள்ளன. அவர்கள் எவ்விதம் திரும்ப அனுப்பப்படுவார்கள் என்றும் இன்னும் மற்ற எல்லாவற்றையும் குறித்து இயேசு தாமே கூறியுள்ளார். ஓ, தானியேல் உட்பட, முழு வேதவசனங்களும், எல்லா இடங்களிலும் அதைக் குறித்துப் பேசுகின்றன. ஆம், ”அதன் அத்திமரம் துளிர்கள், தன்னுடைய துளிர்விடும்போது, காலம் சமீபமாயிற்று என்று அறிவீர்கள்,'' என்று இயேசு கூறினார். இங்கேயுள்ள மற்றொன்றும் அதைத் குறித்தாகவே உள்ளது என்று நான் நம்புகிறேன். 84கேள்வி: நீர் விசுவாசிக்கிறீரா யூதர்களுடைய பாலஸ்தினாவிற்கு யூதர்களுடைய திரும்ப வருதலானது, வேதாகம தீர்க்கதரிசனத்தின் நிறைவேறுதலா? நீர் பாலஸ்தீனாவிற்குப் போகவிருப்பதாக நாங்கள் கேள்விப்பட்டடோம், அது உண்மையா? ஆம், ஆம், ஐயா. நான் உங்களுக்கு ஒன்றைச் சொல்லட்டும். மிக மகத்தானவைகளில் ஒன்று வருடத்தின் எந்த நேரம் என்று நீங்கள் காணவிரும்பினால், நீங்கள் நாட்காட்டியைப் பார்க்கின்றீர்கள். இரவின் எந்த நேரம் என்று நீங்கள் காணவிரும்பினால், நீங்கள் கடிகாரத்தைக் காண்கிறீர்கள். நீங்கள் எந்த நாளில் வாழுகிறீர்கள் என்பதைக் காண விரும்பினால் யூதர் எங்கே இருக்கின்றார்களோ அங்கே பாருங்கள். அதுதான் தேவனுடைய மணிக்காட்டி ஆகும். பாருங்கள்! அதே இரவில், அதே நாளில் கர்த்தருடைய தூதன் 1946-ஆம் வருடம், மே மாதம் 7-ஆம் தேதி அன்று கிரீன் மில், இன்டியானாவில் என்னை சந்தித்தார், அந்த அதே நாளில் யூதர்களுக்கு சமாதான உடன்படிக்கை கையெழுத்தானது, இரண்டாயிரத்து ஐந்நூறு ஆண்டுகள் கழித்து முதன் முதலாக ஒரு ஸ்தாபிக்கப்பட்ட தேசமானது. அல்லேலூயா! இன்றிரவு, உலகத்திலேயே மிகவும் பழமையான கொடியாகிய, ஆறு முனை கொண்ட தாவீதின் நட்சத்திரக் கொடி, பாபிலோன் கொண்டு போகப்பட்டதிலிருந்து இரண்டாயிரத்து ஐந்நூறு ஆண்டுகள் கழித்து, முதல் முறையாக இப்பொழுது எருசலேம் நகரத்தின் மீது பறக்கின்றது. இயேசு, ''அத்திமரம் துளிர்விடுவதை நீங்கள் காணும்போது...'' என்றார். இதோ இது இங்குள்ளது. அவர்! அங்கே அவர், “ஒரு உவமையைக் கற்றுக் கொள்ளுங்கள், 'கோடைகாலம்' சமீபமாயிற்று என்று கூறுகிறீர்கள். இதை நீங்கள் காணும்போது அந்த நேரமானது வாசல் அருகே இருக்கிறது என்பதை அறிவீர்கள்'' என்று கூறினார். 85இயேசு, “தானியேலின் அருவருப்பைக்” குறித்து கூறினபொழுதும், இன்னும் மற்றவையையும் நீங்கள் அறிவீர்கள். ''வரப் போகிற அந்த மகா பிரபு - அவர் ஆயிரத்து இருநூற்று அறுபது நாட்கள் தீர்க்கதரிசனம் உரைப்பார்'', என்பது அந்த மூன்றரை வருடங்களாகும். இயேசு சரியாக அதைத்தான் பிரசங்கித்தார். அவர் யூதரிடம் தனியாகவே வந்தார் - அதன் பின்பு அவர் ஜனங்களுக்காக சங்கரிக்கப்படுவார் - ஜனங்களுக்காக பலியாவார். ''பாழாக்கும் அருவருப்பை“, ”முகமதியர் ஓமர் மசூதியை அங்கு கட்டினார்கள். அவர்கள் எருசலேமின் மதில்களை மிதிப்பார்கள்'' (வ்யூ! எதுவரையிலும்?) புறஜாதிகளின் யுகம் நிறைவேறும் வரையிலும்“. அப்பொழுது அவர் யூதரிடம் திரும்ப வருவார். அங்கேதான் ஆர்மகெதோன் யுத்தமானது... தேவன் புறஜாதிகளின்று தமது நாமத்திற்காக ஒரு ஜனத்தை அவருடைய மணவாட்டியை அழைத்தார். கவனியுங்கள். ஆம், ஐயா. அங்கு இன்னும் நிறைவேண்டிய ஒரு லட்சத்து நாற்பத்த நான்காயிரம் பேர் (1,44,000) மீட்கப்பட்ட யூதராவார்கள். இவைகள் யாவும்... 86அதன்பின் சபையானது மேலே எடுக்கப்பட்ட பிறகு, வெளிப்படுத்தல் 11-ல் மோசேயும், எலியாவும் தோன்றி இயேசு கிறிஸ்துவை அவர்களுக்கு பிரசங்கிக்கின்றனர். சபை மேலே எடுக்கப்படுவதற்கென எடுத்துக் கொள்ளப்படுதல் வருகிறது, பரிசுத்த ஆவி புறஜாதியாரிடமிருந்து எடுக்கப்படுகிறது. ஆகவே மீதம் உள்ள யூதர்களுக்கு மூன்றரை வருடம் பிரசங்கம் செய்யப்படுகிறது, ஏனெனில் அவர் “உன் ஜனத்தின் மேல், எழுபது வாரங்கள் செல்லும்படி குறிக்கப்பட்டிருக்கிறது. அவைகளின் நடுவில் மேசியா சங்கரிக்கப்படுவார்,'' என்றான். அவர் எடுக்கும்போது, புறஜாதிகளுக்கு ஒரு இடம் அளிக்கப்படுகிறது, பிறகு அவர்களுக்கு இயேசு கிறிஸ்துவைப் பற்றி பிரசங்கிக்கப்பட இன்னும் மூன்றரை வருடங்கள் உள்ளன. நிச்சயமாக, யூதர்களும் வருகிறார்கள். சகோதரனே, நான் நம்புகிறேன், இந்நேரத்தில் நாம் பாலஸ்தீனாவிற்கு செல்லும்போது, ஓ, ஜெபியுங்கள்! அவர்கள் அந்த வேதாகமத்தைப் படித்துக் கொண்டிருக்கிறார்கள். இன்னும் ஒரே காரியம் தான், பிறகு ஒரு சிறிய கேள்வி இங்கு என்னிடம் உள்ளது, பிறகு எல்லாம் முடிவுறுகிறது. இங்கிருப்பது ஒரு ஜெபம் என்று நான் நினைக்கிறேன். 87இதைப் பாருங்கள்! டாக்டர்ரீட்ஹெட் கூறினார், அங்கு நின்று கொண்டு திறமை வாய்ந்த ஒரு முகமதியனுடன் பேசும்போது... இப்பொழுது, கூர்ந்து கவனியுங்கள். ஒரு முகமதியன், அங்கே ஆப்பிரிக்காவிலே அற்புதங்களையும் அடையாளங்களையும் அவர்கள் கண்டனர், அவர்களில் சுமார் இருபதாயிரம் பேரை கர்த்தராகிய இயேசுவிடம் வரச் செய்தேன். சுமார் இருபதாயிரம் பேர்கள் இருந்தனர், மொத்தமாக முப்பதாயிரம் பேர், பத்தாயிரம் பேர் வந்தனர் என்று நான் யூகிக்கிறேன், ஏனெனில்அதிகபட்சமாக முகமதியர்கள்தான் இருந்தனர். அவர்கள் அங்கே நின்றபோது, நான் ''இப்பிரதேச மக்களே, உங்கள் கோவிலில் உள்ள தீர்க்கதரிசிகள் யாராவது அம்மனிதனை முழுமையானவனாக ஆக்க முடியுமா? உங்களுடைய விக்கிரகங்களில் ஏதாவதொன்று இம்மனிதனை முழுமையானவனாக ஆக்கமுடியுமா? ஒருவராலும் முடியாது! கோவிலில் உள்ள ஒரு தீர்க்கதரிசியாலும். எந்த ஆசாரியனாலும் சரி, முடியாது'' என்று கூறினேன். மேலும் “எந்த விக்கிரகமும் அதைச் செய்ய முடியாது. என்னாலும் கூட அதைச் செய்ய இயலாது. ஆனால் பரலோகத்தின் தேவன் தம்முடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவை உயிரோடெழுப்பினார், இன்றைக்கு அவர் மனிதனிடையே உயிருள்ளவராக இருக்கிறார், இப்பொழுது முழுமையானவனாக ஆக்கப்பட்டு, நீங்கள் காணத்தக்கதாக நின்று கொண்டிருக்கும் இம்மனிதனுக்கு முழு சுகத்தையும் அளித்தவர் அவரே'', என்று கூறினேன். கழுத்தில் சங்கிலியிடப்பட்டு, ஒரு நாயைப் போல கூட்டிச் செல்லப்பட்டுக் கொண்டிருந்த அவன், ஒரு நிமிட நேரத்தில் நலமுடன் இயல்பாக தன் காலில் நின்று கொண்டிருந்தான். 88முந்தின இரவு நாங்கள் அங்கே காரில் உட்கார்ந்து கொண்டிருந்த போது, சகோ. ரீட்ஹெட் என்னிடம், “ஓ, என்னே!'' என்றார். நான் அதைக் குறித்து எண்ணிக் கொண்டிருந்தேன். சிறந்த கல்வி அறிவு படைத்த இந்த முகமதியனிடம் அவர் நல்லது, ஐயா, உங்களுடைய பழைய இறந்து போன தீர்க்கதரிசி முகமதை ஏன் நீங்கள் விட்டுவிடக் கூடாது?'' என்று கேட்டார். இப்பொழுது, நினைவில் கொள்ளுங்கள். முகமதியர்கள் தேவனில் விசுவாசம் வைத்துள்ளனர். அங்கே ஆப்பிரிக்காவில் அந்த மகத்தான மணி போன்ற ஒன்று தொங்கிக் கொண்டிருக்கிறது. அவர்கள் ரப்பரால் செய்யப்பட்ட ஒரு பெரிய சுத்தியால் அதை அடிப்பார்கள், அது தேசம் முழுவதும் ஒலிக்கும். ஒவ்வொரு முகமதியனும் நிற்பான், “பிறகு பூசாரி வெளியே நடந்து சென்று மக்களிடையே ஒரே ஒரு ஜீவிக்கின்ற தேவன் தான் இருக்கிறார். முகமது அவருடைய தீர்க்கதரிசி ஆவார்” என்று கூறுவான். அவர்கள் இஸ்மவேலின் பிள்ளைகள். பாருங்கள், ஆகார், அவர்கள் ஆகாரிலிருந்து வெளிவந்த ஆபிரகாமின் பிள்ளைகள். பாருங்கள்? அவர்கள் உண்மையான யெகோவா தேவனில் விசுவாசம் கொண்டுள்ளனர், ஆனால் இயேசுவை அவர்கள்... (அது அவர் நமது மீட்பர், சுயாதீன ஸ்திரீயிலிருந்து புறஜாதிகளுக்கு அனுப்பப்பட்டவர்; பாருங்கள், ஈசாக்கு சாராள் மூலமாக), ஆகவே இப்பொழுது, அவர்கள் ஆகார், இஸ்மவேல் மூலமாக வந்தவர்கள், முகமதியர்கள். முகமதுவின் கல்லறையை நீங்கள் சென்று காணவேண்டும். அங்குள்ள மகத்தான சமாதி, அது அழகாக இருக்கின்றது. அங்கே குதிரை சேணங்கட்டப்பட்டு இரண்டாயிரம் ஆண்டுகளாக அங்கு நிறுத்தப்பட்டுள்ளது. முகமது ஒரு நாள் மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்து அந்த குதிரையின் மேல் குதித்து உட்கார்ந்து உலகத்தை வெல்லப் போவதாக வாக்குரைத்திருக்கிறார். ஆகவே ஒவ்வொருபொழுதும் அவர்கள் வெவ்வேறு குதிரைகளை மாற்றி கொண்டு அங்கே விசுவாசத்துடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். முகமது மரித்தோரிலிருந்து எழுந்திருக்க காத்துக் கொண்டிருக்கின்றனர். அதிலிருந்து இரண்டாயிரம் ஆண்டுகள் கடந்துவிட்டன. 89அவர்கள் இயேசுவை விசுவாசிக்கின்றனர், அவர் ஒரு தீர்க்கதரிசி என்று அவர்கள் கூறுகின்றனர். பழைய எருசலேமின் மதில்களின் மேல் ஒரு மகத்தான, பெரிய பரிசுத்த ஸ்தலம் முகமது வருவதற்காக கட்டப்பட்டுள்ளது, அதற்குக் கீழே ஒரு சிறிய பரிசுத்த ஸ்தலம் கட்டப்பட்டுள்ளது. அது இயேசுவிற்கு. பாருங்கள், “அவர்கள் இயேசு சிலுவையில் அறையப்படவேயில்லை, அதைக் குறித்து குழப்பிவிட்டிருக்கின்றனர், அவர் ஒரு குதிரையின் மேல் ஏறிச் சென்றுவிட்டார்” என்று கூறுகின்றனர். பாருங்கள்? இப்பொழுது, அவர்கள் அதை விசுவாசிக்கின்றனர். நீங்கள் இந்தியாவிற்கு செல்வீர்களானால் அதைக் கவனிப்பீர்கள். அங்கே அவர்கள் தங்கள் கண்களுக்கு இடையே ஒரு சிகப்பு புள்ளியை வைத்திருப்பார்கள். என்னே, அவர்கள் ஆயிரக்கணக்கில் அங்கு நின்று கொண்டிருப்பார்கள். 90டாக்டர் ரீட் ஹெட், அங்கு நின்று கொண்டிருந்த அந்த மனிதனிடம், “இப்பொழுது, ஏன் நீங்கள் அந்த மரித்துப்போன வயதான தீர்க்கதரிசியை புறம்பாக்கிவிட்டு, மரித்தோரிலிருந்து எழுந்த ஜீவிக்கின்ற கிறிஸ்துவை ஏற்றுக் கொள்ளக் கூடாது?'' என்று கேட்டார்கள். இப்பொழுது, அவர் ஒரு படிப்பாளி, வார்த்தைகளை எங்கெங்கு பொருத்த வேண்டும் என்பதை அவர் அறிவார். அந்த முகமதியன் அவரை நோக்கிப் பார்த்தான், (திறமைசாலி, படித்த மனிதன், இங்கே அமெரிக்காவில் படித்தவர்), அவன் “அன்புள்ள ஐயா, என்னுடைய மரித்த தீர்க்கதரிசி எனக்கு செய்ததைக் காட்டிலும் உம்முடைய உயிர்த்தெழுந்த இயேசு எனக்கு என்ன செய்ய முடியும்? என்னுடைய இறந்துபோன தீர்க்கதரிசி எனக்கு மரணத்திற்குப் பிறகு ஜீவன் அளிப்பதாக வாக்குரைத்திருக்கிறார். அதைத்தான் உம்முடைய இயேசுவும் கூறியிருக்கிறார்'' என்றான். ”நல்லது, அவன் ஏதோ ஒன்றைப் பெற்றிருந்தான். அவன், ''இப்பொழுது இருவரும் ஒரு புத்தகத்தை எழுதினார்கள். இயேசு எழுதினதை நீர் விசுவாசிக்கிறீர், நான் முகமது எழுதினதை விசுவாசிக்கிறேன். இருவரும் ஜீவனை வாக்குத்தத்தம் செய்திருக்கின்றனர். என்னுடைய முகமது எனக்கு செய்ததைக் காட்டிலும் உம்முடைய இயேசு எனக்கு என்ன செய்ய இயலும்?'' என்றான். நல்லது, அந்த மனிதன், சாதாரண கூற்றுகள், அது உண்மை. அவன், “அன்புள்ள ஐயா, சற்றுப் பொறுங்கள், உங்கள் இயேசு வாக்குத்தத்தம் செய்தது போல என் முகமது எனக்கு செய்யவில்லை. உங்கள் இயேசு வாக்குரைத்திருக்கிறார். ”அவர்கள் அவர் உயிர்த்தெழுந்தார்“ என்று கூறுகின்றனர், உலக முடிவு பரியந்தம் உங்களோடு இருக்கப்போகிறார்; அவர் செய்த அதே அற்புதங்கள், அடையாளங்கள் நீங்களும் உலக முடிவுபரியந்தம் செய்யப் போகிறீர்கள். நீங்கள் பிணியாளிகளை சுகமாக்குவீர்கள், மரித்தோரை எழுப்புவீர்கள், குஷ்டரோகிகளைச் சுத்தமாக்குவீர்கள், பிசாசுகளை துரத்துவீர்கள். நான் கிறிஸ்தவ மார்க்கத்தை முழுவதுமாக ஆராய்ந்து பார்த்தேன், சரி இப்பொழுது, உங்கள் போதகர்கள் இயேசு கிறிஸ்துவை பிரதிபலிக்கட்டும், அப்பொழுது அவர் மரித்தோலிருந்து உயிர்த்தெழுந்தார் என்று நான் விசுவாசிப்பேன். ஆனால் இதற்கு மாறாக... முகமது இக்காரியங்களை எங்களுக்கு வாக்குத்தத்தம் செய்யவில்லை, மரணத்திற்கு பிறகு ஜீவன் என்று மாத்திரமே எங்களுக்கு வாக்குரைத்தார். அந்த ஒரு காரியத்தை நீங்கள் போதித்து மற்றவைகளைக் கடந்து செல்கிறீர்கள். அந்த முகமதிய மனிதன் முற்றிலும் சரியாகக் கூறினான். 91டாக்டர் ரீட் ஹெட் எழுந்து நின்று அழுதார். அவர், ''சகோ. பிரான்ஹாம் நான் உங்களைப் பற்றி நினைத்தேன்“ என்று கூறினார். அவர் வேகமாக ஓடி இங்கு வந்தார், நான் அவர் மீது என் கரங்களை வைத்தேன். பரிசுத்த ஆவியின் அபிஷேகம் அவர் மேல் வந்தது. இப்பொழுது அவர் தரிசனங்களையும், மற்றவைகளையும் கூட காண்கிறார். இப்பொழுது அந்த முகமதியன் இவரை சந்திக்கட்டும்! இப்பொழுது இவர் வித்தியாசப்பட்ட நபர்! நான் நம்முடைய இயேசு மரித்தோரிலிருந்து எழுந்துவிட்டார், அவர் இன்றைக்கு ஜீவித்துக் கொண்டிருக்கிறார் என்று கூறுகிறேன். அவர் அன்றைக்குச் செய்த அதே அற்புதங்களையும் அடையாளங்களையும் இன்றைக்குச் செய்து கொண்டிருக்கிறார். ஆகவே அடிப்படைவாதிகளாகிய மக்கள் உட்கார்ந்து கொண்டு அந்த விதத்தில் விளக்க முயன்று கொண்டு, வேதத்தின் அடிப்படை, அஸ்திபாரபாகங்களை விட்டுவிடுகிறீர்கள். அது முற்றிலும் சரி. உயிர்தெழுந்த தேவ குமாரனாகிய இயேசு கிறிஸ்துவால் உன் மூலமாக வேறு பாஷைகளில் பேச முடியும், அவர் உன் மூலமாக தீர்க்கதரிசனம் உரைக்க முடியும், அவர் உன் மூலமாக தரிசனங்களைக் காண்பிக்க முடியும், அவர் உன் மூலமாக அந்நிய பாஷைகளை வியாக்கியானம் செய்யமுடியும். எல்லாம் அவருடைய பாகமாயிருக்கின்றன. ஆகவே இந்த பாகத்தை அவரிலிருந்து எடுத்துக் கொண்டு அந்த பாகத்தை விட்டுவிடுவது, என்னை இரண்டாக வெட்டி என்னுடைய இடுப்பு மற்றும் கால்களை எடுத்துக் கொண்டு, இந்த பாகத்தைப் பெறாமல், என்னைப் பெற்றுக் கொண்டேன் என்று நீ கூறுவது போன்று இருக்கும். ஒன்று என்னை முழுமையாக பெற்றாக வேண்டும். அந்த காரணத்தால் தான், தேவன் கூறின எல்லா காரியங்கள் உண்மை என்று விசுவாசிக்கும் முழு சுவிசேஷப் பிரசங்கியாக நான் இருக்கிறேன். ஆமென்! மகிமை! நான் ஒரு பரிசுத்த உருளையனாக இருப்பதாக இப்பொழுது உணருகிறேன். ஆம், ஐயா. நான் அதை விசுவாசிக்கிறேன்! 92கேள்வி: மத்தேயு 24:29 “சூரியன் அந்தகாரப்படும், சந்திரன் ஒளியைக் கொடாதிருக்கும், நட்சத்திரங்கள் வானத்திலிருந்து விழும் இது எடுத்துக் கொள்ளப்படுதலுக்கு முன்பு அல்லது பின்பு நிகழுமா, அல்லது இயேசு பூமியின் மீது ஆளுகை செய்ய வரும் முன்னர் நிகழுமா? என்னுடைய தாழ்மையான நம்பிக்கையில், இப்பொழுது, நான் செய்யமாட்டேன். எனக்குத் தெரியாது, அவர் அங்கே மத்தேயு 24-ஐக் குறித்து பேசுகிறார் என்று நான் நினைக்கிறேன். இப்பொழுது, இயேசு நட்சத்திரங்களைக் குறித்தும், விழும் காரியங்களைக் குறித்தும் பேசுகின்றார், பூமியின் மீது உபத்திரவம் விழும் முன்னர் இருக்கும் என்று நான் நம்புகிறேன். இப்பொழுது இதை நீங்கள் யாரும் ஆமோதிக்காத, ஏற்றுக் கொள்ளக் கூடாத ஒரு வினோதமான கருத்தை நான் கொண்டிருந்தேன், நாம் அதற்குள் கடந்து வந்தோம் என்னும் போதகத்தை பழைய காலத்தவரில் சிலர் கேட்டார்கள் என்று நான் கற்பனை செய்கிறேன். பாருங்கள், சபையானது உபத்திரவக் காலத்திற்குள் செல்லும் என்று நான் விசுவாசிப்பதில்லை. நான் விசுவாசிக்கிறேன் சபை... பாருங்கள், நான்... புதிய ஏற்பாட்டை நான் கற்பிக்கும் ஒரே வழி அதன் நிழலாகிய பழைய ஏற்பாட்டின் மூலமேயாகும், இங்கே பரிசுத்த ஆவி ஓய்வு நாளுக்காகவும் உள்ளதைப் போன்றாகும். எல்லாவற்றிற்கும் பின்னால் ஒரு நிழலுண்டு. 93இப்பொழுது, பழைய ஏற்பாட்டைத் திரும்பிப் பாருங்கள். அங்கு வாதைகள் விழுவதை நீங்கள் காணும் போது, அவர்கள் அங்கு எகிப்தில் இருந்தனர். அப்படித்தானே? தேவன் தம் ஜனங்களை வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்திற்கு கொண்டு செல்ல அவர்களை வெளியே அழைத்தார். அது சரிதானே? இஸ்ரவேலோ ஒரு வாதையைக் கூட பெற்றுக் கொள்ளவில்லை. எப்படி வாதைகள். அது வரும் முன்னர் அவர்கள் கோசேனிற்குள் சென்றுவிட்டனர். அது சரியா? அங்கு சூரியன் மங்கவில்லை, கொசுக்கள் வரவில்லை, தவளைகள் அங்கே இல்லை, பேன்கள் அங்கே இல்லை, புயல், மின்னல் அங்கே இருக்கவில்லை, ஆடு மாடுகள் அங்கே கொல்லப்படவில்லை, கோசேனில் அவர்கள் வைத்திருந்த எல்லா காரியங்களும் பாதுகாக்கப்பட்டன. அது சரிதானே? உபத்திரவக் காலத்திற்கு முன் சபை சென்றுவிடுவதற்கு இது நிழலாய் அமைந்துள்ளது. இயேசு, “இவைகள் சம்பவிக்கத் தொடங்கும் போது உங்கள் மீட்பு சமீபமாயிருப்பதால், நீங்கள் நிமிர்ந்து பார்த்து, உங்கள் தலைகளை உயர்த்துங்கள்'' என்று கூறினார். நான் நம்புகிறேன், சந்திரன், சூரியன் நட்சத்திரங்கள்... அவர்கள் கூறினர். நான் மேற்சென்று அதைப் படிக்கிறேன், மனிதர்கள் ஓடி தங்களை ஒளித்துக் கொண்டார்கள். பிறகு. விழுந்து தங்களைத், தானே கொலை செய்துகொள்ள முயற்சித்தார்கள், ஆனாலும் அவர்களால் முடியாதிருந்தது, எல்லாவற்றிலும்'' இது உபத்திரவத்திற்கு முன்பாக நிகழும் என்று நான் விசுவாசிக்கிறேன். இப்பொழுது, கவனியுங்கள், உபத்திரவம் வருகின்றது. உபத்திரவம் வருகின்றது. உபத்திரவம் தாக்கும்போது, சபை மேலே செல்கிறது. இப்பொழுது நினைவில் கொள்ளுங்கள், பரிசுத்த ஆவி இல்லாது ஒரு சாதாரண சபை உபத்திரவத்திற்குள் செல்கிறது. அது தெரிந்து கொள்ளப்பட்டவர்கள் மாத்திரமே செல்வதாகும். ஓ, இன்னும் ஒரு நிமிடம் இதைக் குறித்து நான் இங்கே சற்று பார்க்க முடியும். இன்னும் மூன்று நிமிடங்கள் எனக்கு அளிப்பீர்களா? எடுத்துக் கொள்ளப்பட்ட மக்கள் என்னவென்று அழைக்கப்படுவார்கள், மீதமுள்ளவர்? அது சரிதானே? அது சரி.. நான் - நான் கூற விழைவது - அது மணவாட்டி இப்பொழுது, மீதமுள்ளவர்கள் விடப்பட்டனர். 94இப்பொழுது, ஒரு ஸ்திரீ மேலாடைக்கான அமைப்பை வெட்டச் செல்கையில், நீங்கள் அதைக் குறித்து பேசுகிறீர்கள். அவள் பொருட்களை பிரித்து விரித்து வைக்கிறாள் (அது சரிதானே?), பொருட்கள். வெட்டப்பட வேண்டிய அமைப்பை அதன் மீது வைக்கிறாள். பிறகு வெட்ட வேண்டிய அமைப்பை குறிக்கின்றாள். அது சரி? ஓ, சகோதரனே, இது உங்களுக்கு நலமானதைச் செய்கிறதல்லவா! தெரிந்து கொள்ளுதலை செய்வது யார்? தேவனே தெரிந்த கொள்ளுதலைச் செய்கிறார். அது சரியா? இதை நான் கூறுவதற்கல்ல, அவர்தான் அதைக் கூறவேண்டும். யார் மீது அமைப்பு வைக்கப்பட வேண்டும் என்று நிர்ணயிக்கின்றாரோ அவன் மீது அதை வைக்கிறார். அது சரி தானே? இப்பொழுது, மணவாளனை சந்திக்க பத்து கன்னிகைகள் புறப்பட்டு சென்றார்கள். அது சரிதானே? “கன்னி'' என்பது என்ன? கன்னி என்றால் ''தூய்மை, பரிசுத்தம்” அது சரியா? கன்னிகை என்பது என்ன? கறைபடாத, தொடப்படாத ஒரு பெண், அவள் ஒரு கன்னிகை. தூய்மையான ஒலிவ எண்ணெயைப் போன்று வேறு தூய்மையானது உண்டா? அப்படியென்றால் அது முழுவதுமாக சுத்தமாகும் வரை கடைந்தெடுக்கப்பட்ட ஒன்று. தூய்மையான பொன் என்றால் என்ன? உலோகக் கழிவு முழுவதும்... அது நெருப்பிலும், அனலிலும் மற்றெல்லாவற்றிலும் புடமிடபட்டு, உலோகக் கழிவு முழுவதும் உருக்கி எடுக்கப்பட்டது. அது சரியா? எல்லா இரும்பும், செம்பும் உருக்கி எடுக்கப்பட்ட பிறகு அது தூய்மையாக ஆகின்றது. 95இப்பொழுது, அங்கே பத்துப் பேர் மாணவாளனைச் சந்திக்கச் செல்கின்றனர். இயேசு அவ்வாறு கூறினார். அது சரியா? எத்தனைப் பேர் அதை ஆமோதிக்கிறீர்கள் என்று கூறுங்கள் (சபையார் “ஆமென்'' என்கின்றனர் - ஆசி) பத்துப் பேர் அவரைச் சந்திக்கச் சென்றார்கள். இப்பொழுது, கவனியுங்கள், எல்லாரும் பரிசுத்தமாய் இருந்தார்கள். நல்லது பரிசுத்தமாக இருக்க வேண்டுமென்றால், அவர்கள் ”பரிசுத்தமாக்கப்பட்டிருக்க வேண்டும்“ ஏனென்றால் சுத்தமாக்கப்பட தேவன் வைத்திருக்கும் ஒரே வழி, பரிசுத்தமாக்கப்படுதல். அது சரிதானே? இப்பொழுது, கவனியுங்கள். பத்துப் பேர்களும் பரிசுத்தமாக்கப்பட்டு இருந்தனர், ஐந்து பேர் தங்கள் விளக்குளில் எண்ணெயை வைத்திருக்கவில்லை. ஐந்து பேர் தங்கள் விளக்குளில் எண்ணெய் வைத்திருந்தனர். அது சரிதானே? எண்ணெய் எதைக் குறிக்கின்றது? இப்பொழுது, சுத்தத்தை, அல்லது கன்னித் தன்மையை அது குறிக்கவில்லை. எண்ணெய் “பரிசுத்த ஆவியை” குறிக்கின்றது. 96இப்பொழுது, இதை நான்... கூறுவது உங்களை சிறிது புண்படுத்தக் கூடும், நான் அவ்வாறு செய்யவிழையவில்லை, அவ்வாறு செய்வதில்லை. இப்பொழுது என்னை சற்று பொறுத்துக் கொள்ளுங்கள், நீங்கள் சபையை விட்டு நின்றுவிடாதீர்கள். உங்களுக்கு உதவத் தான் நான் இந்த பிரசங்க பீடத்தில் இருக்கின்றேன். பாருங்கள்? இப்பொழுது, கவனியுங்கள், இதை நான் உங்களுக்குக் காண்பிக்கட்டும். நசரீன்கள், பரிசுத்த யாத்ரீகர்கள் போன்றவர்களை விட பரிசுத்தமாக ஜீவிக்கின்ற சபை இவ்வுலகத்தில் கிடையாது. அது சரிதானே? அவர்கள் பரிசுத்தமாக்கப்படுதலில் முழுவதுமாக விசுவாசிக்கின்றார்கள். அவர்களுடைய ஸ்திரீகள் மோதிரங்கள், மற்ற எதையுமே அணிவதில்லை. தூய்மை, பரிசுத்தமாக்கப்படுதல், எல்லா வழிகளிலும் அதை விசுவாசிக்கின்றார்கள். யாத்ரீக ஸ்தாபனங்கள், எல்லா சட்டபூர்வக்காரர்கள், அதுதான் அவர்கள் போதகங்கள், அவர்கள் அதை விசுவாசிக்கின்றனர். பரிசுத்தம்! ஸ்திரீகள் நீண்ட மயிரையும் நீண்ட ஆடைகளையும் அணிகின்றனர். மனிதன் தன்னுடைய சட்டைக் கைகளைக் கூட மடிக்க கூடாது, அவர்களில் அநேகர். அவர்கள், குடிக்கவோ, புகை பிடிக்கவோ, மற்ற எதையும் செய்யக்கூடாது, பாருங்கள். பரிசுத்தம்! இதை விட பரிசுத்தமாய் உன்னால் ஜீவிக்க இயலாது. ஆனால் அதே நசரின் சபையில், ஒரு மனிதன் அந்நிய பாஷையில் பேசுவானானால், அவன் வெளியே தள்ளப்பட்டு, கதவு மூடப்படும். அவ்வொருவன் பக்கத்திலும் கூட உட்காரமாட்டோம் என்று அவர்கள் கூறுகின்றனர். இப்பொழுது, அது உண்மை. நீங்கள் அதை விசுவாசிக்கவில்லை என்றால், முயற்சி செய்துபார்த்து, கண்டுகொள்ளுங்கள். உடனே கண்டுக் கொள்ளுங்கள். அதைக் குறித்த சிந்தனைகளையே அவர்கள் வெறுக்கின்றனர். “அது பிசாசு” என்று அவர்கள் கூறுகின்றனர். 97அவர்களில் ஐந்து பேர். பத்துப் பேர்களும் கன்னிகைகள். ஐந்து பேர் புத்தியுள்ளவர்களாய் தங்கள் விளக்குகளில் எண்ணெயை வைத்திருந்தனர், மற்ற ஐந்து பேரும் தூய்மையாயும், பரிசுத்தமாயும் இருந்தனர். ஆனால் அவர்களிடத்தில் எண்ணெய் இல்லை (அவர்கள் பரிசுத்தமாக்கப்பட்டு, பரிசுத்த ஆவி இல்லாமல் இருந்தனர்). “பூலோகத்திலே சாட்சியிருக்கிறவைகள் மூன்று, ஆவி, ஜலம், இரத்தம் என்பவைகளே''. பரி. யோவான் 5:7... 1யோவான் 5:7 ”பரலோகத்திலே சாட்சியிடுகிறவர்கள் மூவர், பிதா, குமாரன், பரிசுத்த ஆவி, இம்மூன்றும் ஒன்றே. ஆனால் அங்கே பூலோகத்திலே சாட்சியிடுகிறவைகள் மூன்று, ஆவி, இரத்தம், ஜலம் என்பவைகளே. அவைகள் ஒன்றல்ல. ஆனால் இவை மூன்றும் ஒருமைப்பட்டிருக்கிறது''. இப்பொழுது, குமாரன் இல்லமால் பிதாவை நீங்கள் கொண்டிருக்க முடியாது. பிதா, குமாரன், பரிசுத்த ஆவி இல்லாமல் நீங்கள் பரிசுத்த ஆவியைக் கொண்டிருக்க முடியாது. அவர்களெல்லாரும் ஒருவரே. நீங்கள்... அவர்களைப் பிரிக்க இயலாது. ஆனால் நீங்கள் பரிசுத்தமாக்கப்படாமல் நீதிமான்களாக்கப்பட முடியும். நீங்கள் பரிசுத்த ஆவி இல்லாமல் பரிசுத்தமாக்கப்பட முடியும்; சுத்தமானவர்களாயும், தூய்மையான வாழ்வை வாழ்ந்து, தேவ பக்தியின் வேஷத்தை தரித்து அதின் பெலனை மறுதலித்து, சுகமாக்கும் வல்லமையையும், பாஷைகளில் பேசுதலையும், தேவனுடைய மகத்தான வரங்களையும் (ஒவ்வொன்றும் அதில் உள்ளது) நிராகரிக்கின்றீர்கள். 98உங்களுடைய ஐந்து புத்தியுள்ள கன்னிகைகள் அங்கே தங்கள் விளக்குகளில் எண்ணெய் உடையவர்களாய் எடுத்துக் கொள்ளப்படுதலுக்கேற்ற விசுவாசம், அற்புதங்கள், அடையாளங்கள், தீர்க்கதரிசனங்கள், மற்ற எல்லாவற்றையும் விசுவாசிப்பார்கள். மீதமுள்ளவர்களிலிருந்து இந்த ஐந்து பேர்கள் வெட்டி எடுத்து கொள்ளப்பட்டனர். மற்ற ஐந்து பேரும் இன்னும் கன்னிகைகளாய் இருக்கின்றார், அவர்கள் இழந்து போகப்பட மாட்டார்கள், ஆனால் உபத்திரவ காலத்திற்குள் செல்வர். இயேசு கூறினார், “அங்கே...'' அவர்கள், ''உங்களுடைய எண்ணெயில் சிறிது எங்களுக்குத் தாருங்கள், எங்களுக்கு இப்பொழுது பரிசுத்தஆவி தேவை“ என்றனர். இப்பொழுது, அந்த பரிசுத்தஆவி என்பதாவது... ஒவ்வொரும் அறிந்திருக்கிறீர்கள். சகரியா 4, மற்றும் ஓ, யாக்கோபு 5:14, அது பரிசுத்த ஆவியைக் குறிக்கிறது என்று எல்லாருக்கும் தெரியும். இப்பொழுது அவர்கள் கூறினர். அதன் காரணத்தால் தான் நாம் எண்ணெயால் அபிஷேகம் செய்கிறோம், அது பரிசுத்த ஆவியைக் குறிக்கிறது; இப்பொழுது, “ஆவியாகிய எண்ணெய்'' என்று வேதம் கூறுகின்றது. 99இப்பொழுது, இவர்கள் பரிசுத்த ஆவியைப் பெற்றிருந்தனர்; இவர்கள் பரிசுத்தமாக்கப்பட்டிருந்தனர். இவர்கள் பரிசுத்தமாக்கப்பட்டு, பரிசுத்த ஆவியைப் பெற்று தேவனுடைய வல்லமையின் எல்லா அம்சங்களிலும், காரியங்களிலும் விசுவாசம் கொண்டிருந்தனர். இங்கே, இதைக் குறித்து தேவன் உரைத்த எல்லாவற்றையும் பெற்று, விசுவாசித்தித்தனர். அவர்கள் எடுக்கப்பட்டனர். ஆகையால், இவர்கள், ''எங்களுக்கு இப்பொழுது கொடுங்கள்“ என்று கூறினர். இவர்களோ, ''உள்ளே செல்வதற்கு போதுமான அளவுதான் எங்களிடம் உள்ளது“ என்றனர். ஆகவே அவர்கள் எடுத்துக் கொள்ளப்படுதலில் சென்றுவிட்டனர் அது, “நீங்கள் சென்று விற்பவர்களிடமிருந்து சிறிது வாங்கிக் கொள்ளுங்கள்,'' என்றது. இயேசு, அவர் தான் கூறினார். ஆகவே அவர்கள் ஜெபம் செய்து பரிசுத்த ஆவியைப் பெற்று கடந்து செல்ல விழைந்தனர். ஆனால் உபத்திரவம் காலம் முடிவுற்று, உபத்திரவ காலம் எழும்பிற்று. ஆகவே அவர், ''அவர்கள் இருளில் தள்ளப்பட்டார்கள். அங்கே அழுகையும், மாரடித்தலும், பற்கடிப்பும் உண்டாயிருக்கும்” என்று கூறினார். ஆனால் இரண்டாம் உயிர்த்தெழுதலிலே அவர்கள் வெள்ளாடுகளிலிருந்து பிரிக்கப்பட்ட செம்மறியாடுகள் ஆவர், ஆனால் அவர்கள் மணவாட்டி அல்ல, தெரிந்து கொள்ளப்பட்டவர்கள் அல்ல. அவர்கள் மீதியாயிருந்த ஸ்திரீயுடைய வித்து ஆவர். 100மீதம் என்றால் என்ன? வெட்டினதில் மீதம் உள்ள பொருள். அதே விதமானப் பொருள்தான். அது சரிதானே? உனக்கு தேவையான ஆடையை வெட்ட, நீ பெரிய காலிகோ (Calico) துணியை விரித்து அதிலிருந்து வெட்டி எடுப்பாய். எந்த விதமாக அமைக்கப்பட வேண்டுமென்று நிர்ணயிப்பது உன்னுடைய வேலையாகும். அதே விதமாக அதுவும் தேவனுடைய வேலை ஆகும், எவ்விதமாக அமைக்க வேண்டும் என்பதை நிர்ணயித்து, சரியாக வெட்டி வெளியே எடுக்கின்றார். அது சரியல்லவா? ஆகையால், இப்பொழுது, இங்கே துணி மீதமாக இருக்கிறது. ஆனால் ஆடையின் வடிவில் உள்ள துணியைப் போன்றே இந்த மீதமானதும் சிறந்த ஒன்றாக இருக்கிறது. அது சரியல்லவா? ஆனால் அது தேவனுடைய தெரிந்து கொள்ளுதல் ஆகும். தேவன் தமது சபையை தெரிந்து கொள்ளுகிறார், தேவன் தமது சபையை முன்குறித்திருக்கிறார், தேவன் அந்த சபையை முன்குறிக்கின்றார், அந்த சபையை அவர் வெளியே எடுக்கின்றார். ஆகவே மீதமுள்ளவர்கள் உபத்திரவக் காலத்திற்குள் செல்லவிடப்படுகின்றனர். 101இங்குதான் அநேக வேதாகம அறிஞர்கள் குழப்பம் தந்து, மணவாட்டி உபத்திரவத்தில் செல்கின்றாள் என்று நினைக்கிறனர். ஒரு மனிதன் என்னிடம், ''சகோ. பிரான்ஹாம், இதை என்னால் சொல்லக்கூடாதிருக்கிறது, நான் மணவாட்டியை வானத்தில் கண்டேன், வலுசர்ப்பமானது தன் வாயிலிருந்து ஜலத்தைக் கக்கினவாறு மணவாட்டியுடன் யுத்தம் செய்ய வந்தது. மணவாட்டியான இலட்சத்து நாற்பத்து நாலாயிரம் பேர் சீனாய் மலையின் நின்று கொண்டிருந்தனர்'' என்று கூறினார். நான், ''ஓ, இல்லை, இல்லை, இல்லை, நீர் குழப்பமடைந்திருக்கிறீர். மணவாட்டி பரலோகத்தில் இருந்தாள்'' என்றேன். மீதமுள்ள ஸ்திரீயின் வித்துக்கள், அவள்... அமைப்பானது (Pattern) அல்ல, மீதமுள்ளவர்கள் அங்கே இருந்தனர், உபத்திரவம், அடக்குமுறை (ரோம சாம்ராஜ்ஜியம்) கத்தோலிக்க சபை வலுவடைந்து நிலைகொள்ளும்போது அவர்கள் பெரிய தங்கள் எல்லா அதிகாரத்தையும் அந்த சபையுடன் சேர்த்து விடுவார்கள். 102ஏன், அவர்கள் அதைச் செயல்படுத்துகிறார்கள். அன்றிரவு தொலைகாட்சியில் அது வந்தது. மெத்தோடிஸ்ட் சபைகளும், பாப்டிஸ்ட் சபைகளும், முழு கிறிஸ்தவ சபைகள் என்ற அமைப்பும், மற்ற எல்லாமும் கத்தோலிக்க சபையுடன் இணைந்து, ஒரே பீடத்தின் முன்பு நிற்க முயற்சிக்கின்றன. கம்யூனிஸ்ட் என்று குற்றம் சாட்டப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட ஒரு பிஷப் அன்றிரவு என்ன கூறினார்? நான் தொலைக்காட்சியில் அதைக் கண்டேன். அவர்களின் எல்லாக் கூட்டத்தாரும்! நேரம் வரும்போது அடக்குமுறை கையாளப்படும், பரிசுத்தஆவி மெத்தோடிஸ்ட், பாப்டிஸ்ட் மீது விழும். அவர்கள் எல்லாரும் பாஷைகள் பேசி, தேவனைத் துதித்து, வியாதியஸ்தரை சுகமாக்கி, தீர்க்கதரிசனம் உரைப்பார்கள், எல்லா அற்புதங்களும் அடையாளங்களும் சம்பவிக்கும். தெரிந்து கொள்ளப்பட்டவர்கள் மேலே செல்வர், மீதமுள்ளவர்கள் உபத்திரவ காலத்திற்குள் செல்லத்தக்கதாக இங்கேயே விடப்படுவார்கள். காலமானது முடியும் போது, என்ன சம்பவித்தது என்பதை அவர்கள் கண்டு, இரத்த சாட்சிகளாய் மரிக்க வேண்டும். 103பிறகு கவனியுங்கள். ''நல்லது, இப்பொழுது, சகோதரன் பிரன்ஹாமே, இம்மக்கள் அங்கே வெள்ளை சிங்காசன நியாயத்தீர்ப்பில் இருப்பார்கள், என்று எங்களுக்கு கூற முற்படுகிறீரா?'' அவர்கள் இருப்பார்கள்... மணவாட்டி ஒருபோதும் நியாயந்தீர்க்கப்பட மாட்டாள். இல்லை, ஐயா. அவள் கிறிஸ்துவிற்குள் இருக்கின்றாள். அவர்கள் எப்படி கிறிஸ்துவிற்குள் செல்கின்றனர்? “நாமெல்லாரும் ஒரே ஆவியினால் ஒரே சரீரத்திற்குள்ளாக ஞானஸ்நானம் பண்ணப்பட்டுள்ளோம்'' அது சரிதானே? இப்பொழுது, இங்கே கவனியுங்கள். வேதாகமம் “நியாயத்தீர்ப்பு ஆரம்பித்தது, அப்பொழுது புஸ்தகங்கள் திறக்கப்பட்டன'' என்று கூறுகின்றது. அது சரியா? பாவிகளுடைய புத்தகங்கள். ''வேறொரு புஸ்தகமும் திறக்கப்பட்டது”, ''அது ஜீவ புஸ்தகமாய் இருந்தது, ஒவ்வொரு மனிதனும் இவ்வாறு நியாயந்தீர்க்கப்படுவான். அது சரியல்லவா? நீயாயத்தீர்ப்பை செய்வது யார்? இயேசுவும் பரிசுத்தவான்களும். அவர் வந்தார், ''அவர் சிரசின் மயிர் வெண்மையாகவும் பஞ்சைப்போல் துப்புரவாகவும் இருந்த நீண்ட ஆயுசுள்ளவருக்கு சேவை செய்தார். அவருடன் ஆயிரம் பதினாயிரம்பேர் வந்து, நியாத்தீர்ப்பில் அவருக்கு ஊழியஞ் செய்தனர்“. ''இங்கே இயேசு இராஜாவும், ராணியுமாக திரும்ப வருகிறார், கலியாணம் முடிந்தது, அவர் கலியாணமானவர். இங்கே ராஜாவும் ராணியும் நிற்கின்றனர். பரிசுத்தமாக்கப்பட்ட கூட்டம் அங்கே நிற்கிறது, தேவன், ''இங்கே என்னுடைய வலது பக்கத்தில் நில்லுங்கள்'' அந்த புஸ்தகம் திறக்கப்பட்டது, அவர் பாவிகளைப் பார்த்து, ”என்னுடைய இடது பக்கத்திற்கு வாருங்கள்'' என்று கூறுகிறார். ஆட்டுக்குட்டியானவருடைய ஜீவ புஸ்தகத்தில் பெயரெழுதப்பட்ட நபர்கள் இங்கே இருக்கின்றனர். 104நீங்கள், சகோ. பிரன்ஹாம், என்னுடைய பெயர் அங்கே எழுதப்பட்டுள்ளது, நான் செல்வேன்!'' என்று கூறலாம். ஒரு நிமிடம் பொறுங்கள்! யூதாஸ்காரியத்தும் பரிசுத்தமாக்கப்பட்டான். வியூ! சகோதரனே, தயவு செய்து இப்பொழுது விழித்துக்கொள், அப்பொழுது இதைப் பெற்றுக்கொள்வாய், நீங்கள் பாருங்கள். யூதாஸ்காரியோத்து, அவனுடைய ஆவிதான் இன்றைக்கு அந்தி கிறிஸ்துவாக இருக்கிறது. நீங்கள் அதை அறிவீர்கள். இயேசு தாம் தேவனுடைய குமாரன், தேவனிடத்திலிருந்து வந்து தேவனிடத்திற்கு சென்றார்; யூதாஸ் கேட்டின் குமாரன் ஆவான், பாதாளத்திலிருந்து வந்து பாதாளத்திற்கே திரும்பிச் சென்றான். இயேசு மனந்திரும்பின பாவியை தம்முடன் கூட்டிச் சென்றார்; யூதாஸ் மனந்திரும்பாத பாவியை தன்னுடன் கூட்டிச் சென்றான், ''நீ இப்படிப்பட்டவன் தான் என்றால்! நீ ஒரு தெய்வீக சுகமளிப்பவன் ஆனால், இதைச் செய். நீ இப்படிப்பட்டவன் என்றால், இதை செய்'' (தேவனுடைய வார்த்தைக்கு குறுக்கே உள்ள கேள்விக் குறியை கவனியுங்கள்) ''அற்புதங்களின் நாட்கள் கடந்துவிட்டன. அப்படியென்றால் இதை எனக்குக் காண்பி. அப்படியென்றால்! அப்படியென்றால்!'' பாருங்கள்? ''அதெல்லாம் உண்மை'', என்று தேவன் கூறினார். 105இப்பொழுது கவனியுங்கள். யூதாஸ்காரியோத்து விசுவாசத்தினாலே நீதிமானாக்கப்பட்டான், இயேசு கிறிஸ்துவின் மேல் விசுவாசம் வைத்து ஞானஸ்நானம் பண்ணப்பட்டான். வேதம் கூறுகின்றது, “இயேசு - இயேசு சீஷர்களுக்கு, தம்முடைய சீஷர்களுக்கு ஞானஸ்நானம் கொடுத்தார்'' அது சரி. பரி. யோவான் 17:17, அவர்களை அவர் அனுப்புவதற்கு முன், அவர், ''உம்முடைய சத்தியத்தினாலே அவர்களைப் பரிசுத்தமாக்கும்; உம்முடைய வசனமே சத்தியம் என்றார்'' பரிகாரமானது செய்யப்படுவதற்கு முன்பிலிருந்தே அவர் வார்த்தையாயிருந்தார். வேறு விதமாகக் கூறினால், அதற்கு முன் காட்சியாக (preview), பிதாவே, என் சிந்தப்பட்ட இரத்தத்தினாலே நான் இவர்களைப் பரிசுத்தமாக்குறேன்,'' என்றார். அசுத்த ஆவிகளுக்கு எதிராக அவர் அவர்களுக்கு அதிகாரம் கொடுத்தார், ஆகவே அவர்கள் சென்று பிசாசுகளைத் துரத்தினார்கள். அது சரியா? அவர்கள் வியாதியஸ்தரை சொஸ்தப்படுத்தினார்கள். அதுசரியா? ஆகவே அவர்கள் பரிசுத்தமாக்கப்பட்டவர்களாய், துதித்துக் கொண்டும், சத்தமிட்டுக் கொண்டும், குதித்துக் கொண்டும் தேவனை ஸ்தோத்தரித்துக் கொண்டும், திரும்பி வந்தனர். அது சரியல்லவா? ''பிசாசுகளும் எங்களுக்கு கீழ்ப்படிகிறது'' என்று அவர்கள் கூறினார்கள். இயேசு, ''பிசாசுகள் உங்களுக்குக் கீழ்படிகிறதற்காக நீங்கள் சந்தோஷப்படாமல், உங்கள் நாமங்கள். பரலோகப் புஸ்தகத்தில் எழுதியிருக்கிறதற்காக சந்தோஷப்படுங்கள்'' என்றார். அது சரிதானே? யூதாஸ் காரியோத்தும் அவர்களோடு இருந்தான், அவர்களில் ஒருவனாய் இருந்தான், வெளியே அழைக்கப்பட்டவனாய், பரிசுத்தமாக்கப்பட்டவனாக இருந்தான், அவனுடைய பெயர் ஆட்டுக்குட்டியானவருடைய ஜீவ புஸ்தகத்தில் எழுதப்பட்டிருந்தது. மத்தேயு 10-நீங்கள் படித்து அது சரியாக இருக்கின்றதா என்று பாருங்கள். அவர் ஒவ்வொருவரையும் அழைத்தார், யூதாஸ்காரியோத்தைக் கூட, அங்கே அவர் அழைத்தார். அசுத்த ஆவிகளைத் துரத்த அவர்களுக்கு அதிகாரம் கொடுத்து அனுப்பினார். 106இப்பொழுது கவனியுங்கள்! அதிர்வைத் தாங்கும் கவசத்தை அணிந்து கொள்ளுங்கள். யூதாஸ் ஒரு பொக்கிஷதாரியாக இருந்து அந்த சபையோடு வந்து கொண்டிருந்தான், போதகர்... இயேசுவுடன் பணி செய்துக்கொண்டு இருந்தான், ஆனால் அந்த வேளை வந்தபோது, பெந்தெகொஸ்தே நாளில், தன் சுயரூபத்தைக் காண்பித்தான். அவன் எப்படிப்பட்டவன் என்பதைக் காண்பித்தான். ஆகவே அவன் தன்னை அழித்துக் கொண்டு, தீர்க்கதரிசனத்தின் நிறைவேறுதலாய் ஒரு காட்டத்தி மரத்தில் தன்னைத் தானே தூக்கிலிட்டுக் கொண்டான். ஆகவே அந்த யூதாஸின் ஆவி சரியாக வந்து கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை விசுவாசிக்கும். இயேசு கூறினது போல, பிசாசுகளும் நடுங்கி, விசுவாசிக்கும்'' அவன் சரியாக வந்து பரிசுத்தமாக்கப்படுதலை குறித்து போதித்து, ஒரு பரிசுத்த, தூய வாழ்க்கை எப்படி இருக்குமோ அதைப் போலவே இருப்பான்; ஆனால் பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானம் மற்றும் ஆவிக்குரிய வரங்கள் என்ற ஒரு நிலைக்கு வரும்போது அவன் அதை நிராகரிப்பான்! அவன் ஒவ்வொரு நேரத்திலும் தன்னுடைய சுயரூபத்தை காண்பிப்பான். அங்கேதான் அந்த ஆவி உள்ளது. கவனியுங்கள்! இயேசு, எச்சரிக்கையாயிருங்கள்! என்றார். மத்தேயு 24-ல் ''அந்த இரண்டு ஆவிகளும் மிக நெருக்கமாக, ஒன்று போலக் காணப்பட்டு, கூடுமானால் தெரிந்து கொள்ளப்பட்டவர்களையும் வஞ்சிக்கும்...'' அது சரியல்லவா? அங்கேதான் அந்த அமைப்பானது, அமைக்கப்படுகையில்... சகோதரனே, பழமை நாகரீகம் கொண்ட, பரிசுத்த ஆவியுடைய, இங்கிருக்கும் பிரசங்கிகளில் விசுவாசம் கொண்டு தேவனுடன் உன்னை சரிபடுத்திக் கொள்வது நல்லது. அது சரி. தேவபக்தியின் வேஷத்தைத் தரித்து அதன் பெலனை மறுதலிக்காதீர்கள். ஆமென்! எல்லாரும் நலமாக இருப்பதாக உணருகிறீர்களா? (சபையார் ''ஆமென்'' என்கின்றனர் - ஆசி) 107எல்லோரும் நன்றாக உணருகிறீர்களா? நாமெல்லாரும் பரலோகத்தை அடையும் போது, அது என்ன குதூகலம் கொண்ட நாளாக இருக்கும்! நாமெல்லாரும் இயேசுவைக் காண்போம், ஜெயம் என்று நாம் பாடி சப்தமிடுவோம். நாமெல்லாரும் பரலோகத்தை அடையும் போது, அது என்ன குதூகலம் கொண்ட நாளாக அது இருக்கும்! நாமெல்லாரும் இயேசுவைக் காண்போம், ஜெயம் என்று நாம் பாடி சப்தமிடுவோம். அல்லேலூயா! சிறிது நேரம் நாம் எழுந்து நிற்போம். உங்களில் எத்தனைப் பேர் உங்கள் முழு இருதயத்துடன் அவரை நேசிக்கிறீர்கள்? உங்கள் கரங்களை உயர்த்தி “கர்த்தருக்கு ஸ்தோத்திரம்!''என்று கூறுங்கள். (சபையார் ''கர்த்தருக்கு ஸ்தோத்திரம்!'' என்று கூறுகின்றனர் - ஆசி) ''கர்த்தாவே, நான் முழு சுவிசேஷத்தையும் விசுவாசிக்கிறேன்'' (”கர்த்தாவே, நான் முழு சுவிசேஷத்தையும் விசுவாசிக்கிறேன்'' என்று சபையார் கூறுகிறார்கள் - ஆசி) ''உமது ஊழியக்காரனாய் இருக்கும்படி எனக்கு உதவும்'' ('உமது உழியக்காரனாய் இருக்கும்படி எனக்கு உதவும்'' என்று சபையார் கூறுகின்றனர் - ஆசி) அல்லேலூயா! அல்லேலூயா! நீங்கள் அவரை நேசிக்கிறீர்களா? (சபையார் “ஆமென்” என்கின்றனர் - ஆசி) வேதத்திலே அவர்கள்... 108ஒரு ஸ்திரீ என்னிடம் கூறினாள்... ஒரு வாலிபன், இன்றிரவு ஒரு வேளை அவன் கேட்டுக் கொண்டிருக்கலாம், அவன் தெருவிற்கு அப்பால் வசிக்கிறான். அவன் அங்கே வந்தான். சகோதரி லூலா, இங்கே சபைக்கு வருகிற ஒரு சகோதரி, அங்கே சத்தமிட்டுக் கொண்டிருந்தார். சகோதரன் நெவில், நான் பிரசங்கித்துக் கொண்டிருந்தேன். அந்த வாலிபன் என்னிடம் கூறினான். இப்பொழுது, அங்கே முதல் பாப்டிஸ்ட் சபையில் அவன் ஒரு ஞாயிறு பள்ளி ஆசிரியனாக இருந்தான். அவன், ''பில்லி, அந்த ஸ்திரீ, உமக்கு நன்றி இயேசுவே! கர்த்தருக்கு ஸ்தோத்திரம் என்று அவள் சத்தம் போட ஆரம்பிக்கும் முன்பு வரை உமது பிரசங்கத்தை ரசித்துக் கேட்டுக் கொண்டிருந்தேன், எப்போதாவது ஒருமுறை யாரோ ஒரு மனிதன் (சகோ. சீவர்ட்) கர்த்தருக்கு ஸ்தோத்திரம்! ஆமென்! என்று சத்தம் போட்டுக் கொண்டிருந்தார்'' என்றான் நான் உன்னுடைய பிறப்புரிமையை விற்றுவிடுதல் என்பதைப் பற்றி பிரசங்கித்துக் கொண்டிருந்தேன், ஏசா தன்னுடைய பிறப்புரிமையை விற்றுப் போட்டான். நான் பிரசங்கித்துக் கொண்டிருந்தேன், அவர்கள் சப்தமிட்டுக் கொண்டிருந்தனர். அவன், “ஊ, ஊ, ஊ, அது என்னை நடுக்க முறச்செய்கிறது, என்னால் அதை சகிக்க முடியவில்லை!'' என்றான். நான் “சகோதரனே, நீ பரலோகத்திற்குச் செல்வாயானால் நடுக்கத்தால் உறைந்துபோய் இருப்பாய். அங்கே பரலோகத்தில் இரவும் பகலும் சப்தமிட்டு ஆராவாரம் செய்வது நிச்சயமாக இருக்கும். அது சரி. சகோதரனே, ஐயா! ஓ, ஆம், ஓ, அவர் முகத்தை நான் காணவேண்டும், அவருடைய இரட்சிப்பின் கிருபையை அங்கே என்றென்றும் பாடவேண்டும்; மகிமையின் வீதிகளிலே என்னுடைய குரலானது உயரட்டும்; கவலையெல்லாம் கடந்து, கடைசியாக வீடு வந்து, என்றென்றுமாகக் குதூகலிக்க. ஓ, அவர் முகத்தை நான் காணவேண்டும், அவருடைய இரட்சிப்பின் கிருபையை அங்கே என்றென்றும் பாடவேண்டும்; மகிமையின் வீதிகளிலே என்னுடைய குரலானது உயரட்டும்; கவலையெல்லாம் கடந்து, கடைசியாக வீடு வந்து என்றென்றுமாகக் குதூகலிக்க. ஆமென்! சரி, சகோ. நெவில். கர்த்தர் உம்மை ஆசீர்வதிப்பாராக நீங்கள் அங்கே சென்று முடித்து வையுங்கள்.